அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதியின் தொடரை ஒளிபரப்ப மறுப்பதேன்? : பள்ளி தோழரின் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு

Added : மே 30, 2017 | கருத்துகள் (5)
Advertisement

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கதை, வசனத்தில் தயாரிக்கப்பட்ட, அவரது சிறுகதைகள் தொடரை ஒளிபரப்ப, அவரது குடும்பத்தினரே மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைர விழா, ஜூன் 3ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தீவிரமாக செய்து வருகிறார்.இந்நிலையில், கருணாநிதி ஆசைப்பட்டு தயாரித்த, அவரது சிறுகதைகள் தொடரை, கலைஞர், 'டிவி'யில் ஒளிபரப்ப, குடும்ப உறுப்பினர்களே தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, கருணாநிதியின் பள்ளித் தோழரும், கவிஞருமான வயலுார் சண்முகத்தின் மகன் மற்றும், 'கலைஞரின் கதை நேரம்' தொடரின் இயக்குனருமான ராஜகுமாரன் கூறியதாவது: தி.மு.க., தலைவர் கருணாநிதி, இதுவரை, 60 சிறுகதைகள் எழுதியுள்ளார். நாட்டில் இன்று நடப்பவைகளை எல்லாம் கூட, அவர் தீர்க்க தரிசனமாக, தன் சிறுகதைகளில் எழுதியுள்ளார். அவற்றை திரைவடி வில், கலைஞர், 'டிவி'யில் தொடராக வெளியிட வேண்டும் என கேட்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன், கருணாநிதியை சந்தித்து பேசினேன். அவரும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டார். அவருடைய சிறுகதைகளில், 24ஐ தேர்வு செய்து, அவரிடம் ஒப்புதல் பெற்றேன். பின், ஒரு சிறுகதையை, ஒரு தொகுதியாக எடுத்து, அதை வாரம் ஒரு நாள், அரைமணி நேரம் என, 24 வாரங்கள், 'கலைஞரின் கதை நேரம்' என்ற தலைப்பில் ஒளிபரப்புவது என திட்டமிடப்பட்டது. இதற்காக, கலைஞர், 'டிவி'யுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, எனக்கு முன்பணமும் அளிக்கப்பட்டது. முதலில், நான்கு சிறுகதைகளை, நான்கு வாரங்கள் ஒளிபரப்ப, என் மனைவி பரிமளாவின் தமிழ் கூடம் நிறுவனம் மூலம் தயாரித்து, கருணாநிதியிடம் காண்பித்தேன். அதை வெகுவாக ரசித்த அவர், என்னை
பாராட்டினார். பின், சிறிய மாற்றங்கள் செய்தவர், அப்போதைய எம்.டி., ரமேஷ் பிரபாவிடம் ஒளிபரப்பவும் அறிவுறுத்தினார். அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு முன், கலைஞர், 'டிவி'யில் வெள்ளிக்கிழமை இரவு, 7:00 முதல் 7:30 வரை, ஒளிபரப்ப விளம்பரமும் செய்யப்பட்டது.
ஆனால், அந்த காலகட்டத்தில் கலைஞர், 'டிவி'யின் பொறுப்பை ஏற்ற, கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம், அந்த தொடரை ஒளிபரப்ப, ஆர்வம் காட்டவில்லை.
அவரிடம் கேட்ட போது, 'கருணாநிதி ஓகே சொன்னால் போதுமா; நான் ஓகே சொல்ல வேண்டாமா' என, எடுத்தெறிந்து பேசினார்.நான் மீண்டும் கருணாநிதியை சந்திக்க முயற்சித்தேன்; முடியவில்லை. ஸ்டாலின், கனிமொழி என, அனைத்து தரப்பினருக்கும் இந்த தகவலை கொண்டு சென்றேன். அவர்களும் கண்டுகொள்ளவில்லை.
கலைஞர், 'டிவி'யை தொடர்பு கொண்ட போது, 'கலைஞரின் கதை நேரத்துக்கு எல்லாம் இப்போ நேரம் இல்லை' என்றனர். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இரண்டு ஆண்டுகளாக, அந்த தொடரை ஒளிபரப்ப எடுத்த முயற்சிகள், தோல்வியை தழுவின.
கருணாநிதியின் வைரவிழாவை கொண்டாடும் இந்த நேரத்திலாவது, அவர் கதை, வசனம் எழுதியுள்ள, அவர் விரும்பி எடுத்த, கலைஞரின் கதை நேரத்தை ஒளிபரப்ப, அவரின் குடும்பத்தினர் முன்வர வேண்டும். இதை நான் லாபநோக்கமாக கொண்டு செயல்படவில்லை. அவரின் சிறுகதை திறமை வெளியுலகுக்கு தெரிய வேண்டும்; அவ்வளவு தான்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vel - Chennai,இந்தியா
31-மே-201710:14:45 IST Report Abuse
Vel நமீதா இல்லாத எதுவும் வேண்டாம் என்று முடிவு செய்திருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
31-மே-201709:52:32 IST Report Abuse
Devanatha Jagannathan அவரோட கையில் பேனா மனதில் குப்பை.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
31-மே-201709:03:06 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நல்லதொரு குடும்பம் அது எவ்ளோ ஒத்துமையா இருக்கானுங்கோ கண் படுமே என்று மறுத்துட்டாங்க போல பேசாமல் பொதிகைலே போடுங்கய்யா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X