பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரக்குறைவானவை? ஆய்வில் தகவல்

Added : மே 31, 2017 | கருத்துகள் (61)
Advertisement
பதஞ்சலி,தரக்குறைவு,pathanjali, பாபா ராம்தேவ், தயாரிப்பு, பொருட்கள், Baba Ramdev, Product, Goods, Degradation, ramdev

புதுடில்லி: பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் 40 சதவீத பொருட்கள் தரக்குறைவானவை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. இதில், பதஞ்சலி நிறுவன பொருட்களில் 40 சதவீதம் பொருட்கள் முழுமையான ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும் அவை தரக்குறைவானவை என்றும் தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ் ஆகிய பொருட்கள் தரமற்றவை எனவும், இதில் 31.68 சதவீதம் அந்நிய நாட்டு மூலப் பொருட்கள் கலந்து இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஆயுர்வேத மற்றும் யுனானி அலுவலகத்தில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
31-மே-201712:52:10 IST Report Abuse
Shaikh Miyakkhan இப்படியா பட்ட தர குறைவான நிறுவனத்திற்கு தான் வரி சலுகை அளிக்கின்ற அரசின் தன்மையை என்ன வென்று சொல்லுவது ?
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
31-மே-201711:29:51 IST Report Abuse
ganapati sb தமிழகத்தில் பிறந்து தமிழில் யோகா காலை பற்றி எழுதியவர் திருமூலர் அதேபோல தமிழகத்தில் பிறந்து சமஸ்க்ருதத்தில் யோகா காலை பற்றி எழுதியவர் பதஞ்சலி . தமிழரான பதஞ்சலியின் நெறிமுறைகளை தனது வழியாக கொண்டு அவரின் பெயரிலேயே அறக்கட்டளை நடத்தி பாரத நாட்டு விவசாயிகளும் தொழிலாளிகளும் வியாபாரிகளும் நுகர்வோர்களுக்கு நேரிடையாக பயன் பெரும் படி தரமான பொருட்களை குறைந்த விலையில் தருகிறது பதஞ்சலி நிறுவனம் . நான் அவர்களின் பல பொருட்களை பயன்படுத்தி வருகிறேன். தரமற்ற பொருட்களை கவர்ச்சியான விளம்பரம் மூலம் கொள்ளை லாபத்தில் விற்று கொட்டமடித்து லாபத்தையும் அயல் நாட்டுக்கு கொண்டு சென்ற பன்னாட்டு நிறுவனங்கள் திருந்த வேண்டிய நிலை பதஞ்சலியின் பொருட்களால் ஏற்பட்டுள்ளதால் இது போன்ற அவதூறு பிரச்சாரங்கள் தொழில் போட்டியால் பரப்பப்படும். படித்தவர்கள் சுதேசி கொள்கை கொண்டவர்கள் ஏமாற மாட்டார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Mansooralikhan - manama,பஹ்ரைன்
31-மே-201711:27:30 IST Report Abuse
Mansooralikhan பி ஜெ பி யின் சொம்புகள் என்ன சொல்ல வருகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X