அமெரிக்காவில் மாவட்ட செயலாளர் ஊட்டியில் ஊராட்சி அதிகாரிகள்

Added : மே 31, 2017
Advertisement
"ரெண்டா பிரிஞ்சு நிக்கற ஆளுங்கட்சியை, ஒன்றாக இணைக்க, பலதரப்பிலும் பேச்சு நடக்குது தெரியுமா,'' என்றவாறே, சித்ரா, மித்ரா வீட்டுக்குள் வந்தாள்.""ஆமா! அதுதான் தெரியுமே! ஆனா, திருப்பூரில், யாரும் எதைப் பற்றியும் அக்கறையில்லாம தானே இருக்காங்க,'' என்று கேட்டாள் மித்ரா.""கரெக்ட். லோக்கல் பாலிடிக்சில் என்ன நடக்குதுன்னே தெரியாத அளவுக்கு "கப்சிப்'ன்னு
அமெரிக்காவில் மாவட்ட செயலாளர் ஊட்டியில் ஊராட்சி அதிகாரிகள்

"ரெண்டா பிரிஞ்சு நிக்கற ஆளுங்கட்சியை, ஒன்றாக இணைக்க, பலதரப்பிலும் பேச்சு நடக்குது தெரியுமா,'' என்றவாறே, சித்ரா, மித்ரா வீட்டுக்குள் வந்தாள்.
""ஆமா! அதுதான் தெரியுமே! ஆனா, திருப்பூரில், யாரும் எதைப் பற்றியும் அக்கறையில்லாம தானே இருக்காங்க,'' என்று கேட்டாள் மித்ரா.
""கரெக்ட். லோக்கல் பாலிடிக்சில் என்ன நடக்குதுன்னே தெரியாத அளவுக்கு "கப்சிப்'ன்னு இருக்காங்க,''என்றாள் சித்ரா.
""திருப்பூரில், கட்சியில் பெரும்பாலானவங்க, ஓ.பி.எஸ்., பக்கம் இருக்காங்க. ஆனா, மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ.,க்களோ, மதில் மேல் பூனையாக இருக்காங்க,'' என்று, மித்ரா உள்குத்து விஷயங்களை சொன்னாள்.
""மாநகர் மாவட்ட செயலாளர் என்ன செய்யறார்? கொஞ்ச நாளா அவரை பார்க்கவே முடியல,'' என்றாள் சித்ரா.
""அவர் தான் எதுக்குமே அலட்டிக்கொள்ளாத பார்ட்டியாச்சே. கிராமத்தில் புது பங்களா கட்டின பிறகு, குமார் நகர் வீட்டுக்கு வர்றதே அதிசயமாக இருக்காம். கோடையில், "சிட்டி'க்குள் இருக்கிறதைவிட, கிராமத்து பங்களாவின் நிச்சல் குளத்தில் இருந்து வந்தார். கட்சிக்காரங்களை சந்திக்கறதை தவிர்க்க, குடும்பத்தோட அமெரிக்காவுக்கு போயிட்டார். அரசியல் மாற்றம் நிகழ்ந்த பிறகு தான், அவர் திரும்பி வருவாருன்னு பேசிக்கறாங்க,''என்றாள் மித்ரா.
""ஒருவேளை அமெரிக்காவில் ஏதாவது பிஸினஸ் செய்ய இடம் பார்க்க போயிருக்காறா? எது எப்படியோ, திரும்பி வந்தா தெரிஞ்சுடப்போகுது. "டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த போலீஸ் அதிகாரி கதை தெரியுமா,'' என்று, சித்ரா அடுத்த விஷயத்தை ஆரம்பித்தாள்.
""அது எந்த அதிகாரி? எங்கே எச்சரிக்கை விடுத்தாரு,'' என்று ஆவலுடன் மித்ரா கேட்டாள்.
"அங்கேரிபாளையம் "டாஸ்மாக்' மதுக்கடைக்கு எதிரா நடந்த போராட்டத்தப்போ, வடக்கு உதவி கமிஷனர் அண்ணாதுரை, "டாஸ்மாக்' அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தான் அப்படி பேசினார். அங்க, 24 மணி நேர மது விற்பனை நடக்கிறதா, மக்கள் அவர் கிட்ட சொல்லியிருக்காங்க. அதுபோல் முறைகேடு செஞ்சா, அரசு ஊழியருன்னு கூட பார்க்காம, நடவடிக்கை எடுக்கப்படுமுன்னு, ஆவேசமாக சொல்லிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
""இப்படியெல்லாம் பேசிட்டா மட்டும், இவங்க திருந்திடப்போறாங்களா என்ன. பல இடங்களில், அதிக விலைக்கு, "சரக்கு' விக்க சொல்லி, கமிஷன் வாங்கி குவிக்கிறாங்களாம்,'' என்றவாறே, மித்ரா தலையில் அடித்து கொண்டாள்.
""மதுக்கடை பிரச்னைக்கு எதிரான மக்களின் போராட்டத்தால, அதிகாரிகளை விட, போலீஸ்காரங்க பாடு, திண்டாட்டமா இருக்குது,'' என்று, இன்னொரு "டாஸ்மாக்' மேட்டரை மித்ரா துவக்கினாள்.
""சரியா சொன்ன. "குடி'மகன்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி, போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கு,'' என்றாள் சித்ரா.
""இரண்டு மாசமா, மதுக்கடைக்கு எதிரான போராட்டம், பல இடங்களில், அங்கங்க நடக்குது. போராட்டம்னு தெரிஞ்சாலே, "பேரிகார்டு' சகிதமா போலீஸ்காரங்க, மதுக்கடை பக்கம் போயிடறாங்க. போராடுற மக்களை சமாளிச்சு அனுப்பி வைக்கணும்; போராட்டம் முடிஞ்ச பிறகு, கடை வியாபாரத்துக்கும் பாதுகாப்பு கொடுத்தாகணும். இதனால, அவங்க ரொம்பவே நொந்துபோயிருக்காங்க'' என்று, மித்ரா கூறினாள்.
""சிங்காரவேலன் நகர்ல மதுக்கடைக்கு எதிரா, பெண்கள் போராட்டம் நடத்தினாங்க. அங்க பாதுகாப்புக்கு இருந்த உதவி கமிஷனர், மக்கள் கிட்ட பக்குவமா பேசியிருக்காரு. "அனுமதிச்சிருக்கற நேரத்துக்குத்தான் "பார்' இயக்கணும். இல்லைனா, கண்டபடி மாத்து வாங்குவீங்க'னு, "பார்' ஓனரை நேரடியாக எச்சரிச்சிருக்காரு. இதை பார்த்த பெண்கள், உதவி கமிஷனரை பாராட்டியிருக்காங்க. "இது மாதிரியானவங்களால தான், நாங்க நிம்மதியா இருக்கோம்,'ன்னு பாராட்டினாங்க,'' என்றாள் சித்ரா.
""தெற்கு எம்.எல்.ஏ., சத்தமில்லாம இருக்காரே? ஏதாவது விஷேசம் உண்டா?'' என்றாள் மித்ரா.
""சத்தமில்லாம வேலை செய்யறதால, வெளியே தெரியாதுல. தொகுதியில இருக்கற அதிகாரி, எம்.எல்.ஏ., பேச்ச கேட்கலைனா, அந்த துறை செயலாளரை போய் பார்த்து பேசிடாரு. மேலிட நடவடிக்கை வந்திரும்னு, இங்க இருக்கற அதிகாரிங்க பயந்து நடுங்கறாங்க. துறை செயலாளரை போய், எம்.எல்.ஏ., பார்த்தா, மாவட்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சருகிட்ட பேசி, அதிகாரிகளுக்கு "சப்போர்ட்' பண்ணறாராம்,'' என்றாள் சித்ரா.
""அரசியல் பாகுபாடு இல்லாம, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்திருக்கு,'' என்று, அடுத்த விஷயத்து மித்ரா தாவினாள்.
""எந்த கட்சியில, இப்படி கூட்டம் நடத்தினாங்க?'' என்ற சித்ராவின் பேச்சில் ஆச்சரியம் தெரிந்தது.
""கட்சியில இல்ல, கலெக்டர் ஆபீசுல! மத்திய அரசு திட்டம் சம்பந்தமா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்துச்சு. தாராபுரம், மடத்துக்குளம் எம்.எல்.ஏ.,க்கள் கலந்துட்டு, தொகுதி பிரச்னையை அமைச்சர், கலெக்டர்கிட்ட சொல்லி, சாதுர்யமா "கிளியர்' செஞ்சுட்டாங்க,'' என்று மித்ரா கூற,
""வழக்கம் போல, ஆளுங்கட்சி "கோஷ்டி', "வண்டு' மாதிரி குடைச்சல் கொடுத்திருக்குமே,'' என்று சித்ரா கேட்டாள்.
""ரொம்ப சரி. அந்த கோஷ்டி, எடக்கு மடக்கா கேள்வி கேட்டு, அதிகாரிகளை "டென்ஷனாக்கி' கிட்டே இருந்துச்சு. அமைச்சரும், தெற்கு எம்.எல்.ஏ.,வும் தான், ஏட்டிக்கு போட்டியா பேசிட்டு இருந்திருக்காங்க. நடுவிலே, கலெக்டர் சிக்கிகிட்டாங்க. கூட்டத்துக்கு பிறகு, "தடபுடல்' விருந்துல, அமைச்சர் வகையறாக்கள் எல்லோரும் கலந்துட்டாங்க; தெற்கு எம்.எல்.ஏ., மட்டும், வேலை இருக்குனு சொல்லிட்டு, எஸ்கேப் ஆயிட்டாராம்,'' என்று முடித்தாள் மித்ரா.
""வேற விஷயம் ஏதாவது இருக்கா,'' என்று ஆர்வமாக கேட்டாள் சித்ரா.
"" ஊழியர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் தான் மூன்று நாள் ஊட்டியில் ஜாலி டிரிப் போயிட்டு வந்திருக்கிறார்கள்,'' என்றாள் மித்ரா.
""ஊழியர்களும், அதிகாரிகளுமா? அது யாரு எனக்கு தெரியாமல் போய் விட்டதே,'' என்றாள் சித்ரா.
"திருப்பூர் யூனியனுக்கு உட்பட்ட, 13 ஊராட்சி செயலாளர்களும், இரண்டு அதிகாரிகள், இரண்டு அலுவலர்கள் எல்லாம் சேர்ந்து, மூன்று நாள் ஊட்டியில், ஜாலியாக முகாம் போட்டிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""ரிலாக்ஸ் இப்படித்தானே பண்ணனும்,'' என்றாள் சித்ரா. ""வேலை நாளில் போனது ஒரு தகவல் என்றாலும், செலவுக்காக சில இடங்களில் ஒப்பந்ததாரர்கள் 'பாக்கெட்டில் கை வைத்துள்ளது ஒரு கூடுதல் தகவல்,'' என்றவாறு வெயில் தாக்கத்தை தணிக்க மின் விசிறியை சுழல விட்டாள் மித்ரா.
""ஓ.கே., நான் கிளம்பறேன். ஒரு வழியா அக்னி முடிஞ்சுது. தென் மேற்கு பருவமழை சொன்ன மாதிரி வந்தா பரவாயில்லை,'' என்றவாறு, வண்டியை ஸ்டார்ட் செய்து, சித்ரா புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X