பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
முகத்தை மூட ஆண்களுக்கு தடை

ஆக்ரா: உ.பி., மாநிலம், ஆக்ராவில், 18 - 30 வயதுள்ள ஆண்கள், சாலையில் செல்லும் போது, முகத்தை மூடக் கூடாதென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

முகத்தை மூட ஆண்களுக்கு தடை

உ.பி., மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில், பட்டப்பகலில், ஒரு நகைக் கடையில் நுழைந்த ஒரு கும்பல்,

அதன் உரிமையாளர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, நான்கு கோடி ரூபாய் மதிப் புள்ள தங்க நகைகளைகொள்ளையடித்துச் சென்றது.

இதைத் தொடர்ந்து, மேலும் சில கொள்ளை சம்பவங்களும், பகலில் நடந்தன. இதையடுத்து, 18 - 30 வயதுள்ள ஆண்கள் சாலையில் செல்லும்போது, துணி அல்லது ஹெல்மெட்டால் முகத்தை மூடக் கூடாதென, ஆக்ரா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து அதிகாரிகள்கூறியதாவது:பட்டப் பக லில் நடந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், முகத்தை துணி மற்றும் ஹெல் மெட்டால் மூடிஇருந்தனர்.

மேலும், 10 வயது சிறுவர்கள் முதல், 30 வயதுள்ள இளைஞர்கள் இதுபோன்று கொள்ளை, சங்கிலி

Advertisement

பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டது. பொது மக்களும் இதற்கு ஒத்துழைக்கவேண்டும்.பெண்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Modo - Dindin,அன்டோரா
01-ஜூன்-201721:51:02 IST Report Abuse

Modoமக்களை முட்டாளாக்கும் திறமை உள்ளது

Rate this:
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
01-ஜூன்-201721:46:42 IST Report Abuse

S Rama(samy)murthyயோகி நல்ல நேரத்துக்கு ஏற்ற முடிவு. உமது நல்லாட்சி பயணம் தொடரவும், காங்கிரஸ்காரங்கள் வயிரு எரியட்டும் .

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
01-ஜூன்-201714:58:37 IST Report Abuse

N.Kaliraj குருஜி அடுத்த அதிரடி என்ன...

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X