அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 18 லட்சம் பேர் கருணாநிதிக்கு வாழ்த்து

Added : மே 31, 2017 | கருத்துகள் (29)
Advertisement
ஒரே நாளில் 18 லட்சம் பேர்  கருணாநிதிக்கு வாழ்த்து

சென்னை: கருணாநிதியின், 94வது பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, தி.மு.க., சார்பில், www.wishthalaivar.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதை, நேற்று முன்தினம், கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் துவக்கி வைத்தார். அவர், முதல் வாழ்த்து செய்தியை பதிவு செய்தார். இதை தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள், அந்த இணையதளம் வாயிலாக, கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை, பதிவு செய்து வருகின்றனர்.இணையதளம் செயல்பாட்டுக்கு வந்த, சில மணி நேரத்தில், அமெரிக்கா, கனடா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் உட்பட, உலகம் முழுவதும் இருந்து, கருணாநிதிக்கு பிறந்த தின வாழ்த்துகள் குவிகின்றன. நேற்று ஒரு நாள் மட்டும், 18 லட்சம் பேர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
01-ஜூன்-201721:22:04 IST Report Abuse
dandy நாளை அமெரிக்கா,ஐரோப்பா ,ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து 18 கோடி பேர் வாழ்த்துவார்கள் ..இன்று காலை ஜப்பானிய ,ஜேர்மன் அதிபர்கள் நேரடியாக வாழ்த்து சொன்னார்கள்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
01-ஜூன்-201719:59:12 IST Report Abuse
Pasupathi Subbian சாதனைகள்.வேதனைகள். அது ஒருவருக்கு, இது மற்றவர்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
NMuthuuselvann Muthuuselvann - tirunelveli,இந்தியா
01-ஜூன்-201719:28:59 IST Report Abuse
NMuthuuselvann Muthuuselvann 1 மணி நேரம் 15 ரூபாயில் ப்ரொவ்சிங் செண்டரில் ஒரே வார்த்தையை காப்பி செய்து 200 நபர் பெயரில் வாழ்த்து சொன்னது தெரியாதா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X