அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசு வக்கீல்களுக்கு 'கல்தா':
பன்னீர் ஆதரவாளர்கள் அதிர்ச்சி

அரசு வக்கீல் பதவிகளில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு, 'கல்தா' கொடுக்கப்பட்டு, பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.

 அரசு வக்கீல், பன்னீர் ,ஆதரவாளர்கள், அதிர்ச்சி, பழனிசாமி,  அ.தி.மு.க., ஜெயலலிதா, வக்கீல், Advocate, Panneerselvam, Palanisamy, Supporters, Jayalalitha, ADMK, Shock ,Government lawyer

தமிழகத்தில், 2011ல், அ.தி.மு.க., ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அ.தி.மு.க., ஆதரவு வக்கீல்கள், அந்தந்த மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் பரிந்துரையின் படி, அரசு வக்கீல் களாக நியமனம் செய்யப்பட்டனர். கடந்த, 2016 மே மாதம் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா

பொறுப்பேற்ற நிலையில், அரசு வக்கீல்கள் மாற்றப் படவில்லை. முதல்வர் பொறுப்பை பழனிசாமி ஏற்ற நிலையில், தற்போது, அரசு வக்கீல்கள் மாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட அரசு வக்கீல்களின் பதவி பறிக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு பழனிசாமி, அந்தந்த மாவட்ட அமைச்சர்களின் ஆதரவு வக்கீல் கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பன்னீர்செல்வம் அணி வக்கீல்கள் கூறியதாவது:


அரசு வக்கீல்கள்மாற்றம் செய்யப்படுவர் என்ற தகவல், ஏப்ரல் மாதமே வெளியானது. அந்த நேரத் தில், பதவியை மீண்டும் தக்க வைக்க வேண்டும் எனில், அணி மாறும் படி, பழனிசாமி ஆதரவாளர் கள் வலியுறுத்தினர். பதவிக்காக, ஒரு சிலர் மட்டும் அணி மாறி, பதவியை தக்க வைத்துள்ளனர்.சேலம்

Advertisement

உட்பட, தமிழகம் முழுவதும், 220 பேர், அணி மாற மறுத்து விட்டதால், அவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பழனிசாமி ஆதர வாளர்களின் இந்த நடவடிக்கை, அ.தி .மு.க., அணிகளின் இணைப்புக்கு முட்டுக் கட்டையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
02-ஜூன்-201715:37:30 IST Report Abuse

GUNAVENDHANபன்னீரின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்துகொண்டே இருப்பதால் தான் பழனிசாமி இத்தகைய அதிரடி முடிவெடுத்துள்ளார் . எடப்பாடி பழனிசாமிக்கு மோடி பச்சைக்கொடி காட்டிவிட்டதாக சொல்கிறார்கள், எனவே இனி பன்னீர் அணியின் வீழ்ச்சி ஆரம்பமாகும் . பன்னீர் என்ன யோக்கியனா ?. என்று பலர் கேட்க்கின்ற அளவில் தான் உள்ளது பன்னீரின் நிலைமை.

Rate this:
பாரதி - Chennai ,இந்தியா
02-ஜூன்-201715:09:33 IST Report Abuse

பாரதி பன்னிரு அணிக்கு மட்டும் தான் அதிமுக கட்சிக்காரர்கள் செல்வாக்கு உள்ளது என்பதை பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்.

Rate this:
Kalyani S - Ranipet,இந்தியா
02-ஜூன்-201709:20:03 IST Report Abuse

Kalyani SOPS அணி வக்கீல்கள் மாபா பாண்டியராஜன் அவர்களின் வழியை பின்பற்றி(அதாவது பதவியை தூக்கி எறிந்து விட்டு ) ops அவர்களின் மானத்தை காப்பாற்ற முன் வர வேண்டும். OPS நேர்மையாளராக இருந்தால் இதனை வலியுறுத்த வேண்டும்.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X