கதிர் வீச்சை தடுக்கும் புதிய ஆடை மதுரை டாக்டர் கண்டுபிடிப்பு

Updated : ஜூன் 04, 2017 | Added : ஜூன் 03, 2017 | கருத்துகள் (8) | |
Advertisement
மதுரை, எக்ஸ்ரே மையங்களில் கதிர் வீச்சை தடுக்கும் ஆடையை, மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி ரேடியோலாஜி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கண்டுபிடித்துள்ளார்.அவர் கூறியதாவது: எக்ஸ்ரே மையங்களுக்கு நோயாளிகளுடன் வருவோர் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர் கதிர்வீச்சை தடுக்கும் 'லெட் ஏப்ரான்' எனும் ஆடையை பயன்படுத்துகின்றனர். இதற்கான மாற்று
ஆடை,  மதுரை, அரசு, மருத்துவக்கல்லுாரி, ரேடியோலாஜி, இயற்பியல், எக்ஸ்ரே, Dress, Madurai, Government, Medical college, Radiology, Physics, X ray, கதிர் வீச்சு,  எக்ஸ்ரே மையங்கள், இயற்பியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார், டாக்டர் செந்தில்குமார், ஆதித்யா பிர்லா நினைவு மருத்துவமனை விருது, வைரமுத்து ராஜூ, அட்டாமிக் எனர்ஜி ரெகுலேஷன் போர்டு, Vairamuthu raju, Aditya Birla Memorial Hospital Award, Atamic Energy Regulation Board, 
Dr. Senthil Kumar, Radiation, Assistant Professor of Physics, X-ray centers

மதுரை, எக்ஸ்ரே மையங்களில் கதிர் வீச்சை தடுக்கும் ஆடையை, மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி ரேடியோலாஜி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கண்டுபிடித்துள்ளார்.

அவர் கூறியதாவது: எக்ஸ்ரே மையங்களுக்கு நோயாளிகளுடன் வருவோர் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர் கதிர்வீச்சை தடுக்கும் 'லெட் ஏப்ரான்' எனும் ஆடையை பயன்படுத்துகின்றனர். இதற்கான மாற்று ஆடையை கண்டு பிடித்துள்ளேன்.பிஸ்முத், ஆன்டிமோனி, பேரியம் சல்பேட், பாலிமர் ஆகிய மூலப்பொருட்களை கொண்டு தயாரித்தேன். இது 'லெட் ஏப்ரான்' ஆடையை விட 25 சதவீதம் கதிர்வீச்சை தடுக்கும். சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது. விலை குறைவு. 3 கிலோ எடை கொண்டது. மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

மடித்து வைக்க, மறு சுழற்சி, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. ஐந்து ஆண்டு ஆராய்ச்சிக்கு கிடைத்த பரிசு இது.இந்த ஆடையை உருவாக்க 75 ஆயிரம் ரூபாய் செலவானது. இந்திய அளவில் லெட் ஏப்ரானுக்கு முதல் மாற்று ஆடை என்ற பெருமை பெற்றுள்ளது. ஆடை ஒன்று 15 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கலாம். மொத்தமாக தயாரிக்கும்போது செலவு குறையும். இக்கண்டுபிடிப்பை அங்கீகரித்து ஆதித்யா பிர்லா நினைவு மருத்துவமனை விருது வழங்கியது, என்றார்.

இவரது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் பெற ஏ.இ.ஆர்.பி. (அட்டாமிக் எனர்ஜி ரெகுலேஷன் போர்டு) பரிந்துரைக்காக அனுப்பப்படும் என டீன் வைரமுத்து ராஜூ தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
06-ஜூன்-201722:41:29 IST Report Abuse
கதிரழகன், SSLC இது தேவையே இல்லை. வீச்சம் எல்லாம் எதுவும் கெடையாது. நான் தெனைக்கும் ரெண்டு வேளை நல்லா குளிச்சுகிட்டுதான் இருக்கேன். நல்ல தொவச்சி துணி உடுத்தறேன். சும்மா வம்பு செய்யணுமினிட்டு கதிர்வீச்சம் அது இதுன்னு பேச வேண்டாம். கோவம் வரும். சாக்கிரதை.
Rate this:
Cancel
04-ஜூன்-201723:05:18 IST Report Abuse
நாகூரான் வாழ்த்துக்கள்... ! மேலும் புதிய கண்டுபிடிப்புகள் செய்ய பிராத்தனைகள்...!
Rate this:
Cancel
Arun Pradeep - Chennai,இந்தியா
04-ஜூன்-201713:51:47 IST Report Abuse
Arun Pradeep நன்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X