பொது செய்தி

இந்தியா

5,000 பயங்கரவாதிகளின் வங்கி கணக்கை முடக்கிய பாக்.,

Updated : ஜூன் 04, 2017 | Added : ஜூன் 04, 2017 | கருத்துகள் (2)
Advertisement
Pakisthan, பாகிஸ்தான், பயங்கரவா அமைப்புகள், வங்கி கணக்கு, முடக்கம், Terrorist, Bank account, அமெரிக்கா, America, Freezing, Terrorist organizations,

இஸ்லாமாபாத்: சர்வதேச தடை பட்டியலில் இடம் பெறுவதை தவிர்க்க, 5,000 பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகளை பாக்., அரசு முடக்கி உள்ளது.
சர்வதேச அளவில், நிதி நடவடிக்கை அதிரடி படை என்ற ஒரு அமைப்பு 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில், 35 நாடுகள் உறுப்பினராக உள்ளனர். அமெரிக்காவில், 2001ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாத அமைப்புக்கு செல்லும் நிதியையும் இந்த அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பின் தடை பட்டியலில் இடம் பெற்றால், ஒரு நாட்டால் கடன் வாங்கும் திறன் பாதிக்கப்படும். அந்த குறிப்பிட்ட நாட்டின் வங்கி அமைப்பு சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுகிறது என்ற கெட்ட பெயர் ஏற்படும். இந்த அமைப்பு அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டில் கூடி, பயங்கரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் நிதி குறித்து ஆய்வு செய்ய உள்ளது.


ரூ.19 கோடி

இதன் காரணமாக, வெளிப்படையாக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், பெயர் மாற்றி புது பெயரில் செயல்படும் அமைப்புகள் என, 5,000 பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகளை பாக்., அரசின் தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையம் முடக்கி உள்ளது. இந்த வங்கி கணக்குகளில், 19 கோடி ரூபாய் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivan - Palani,இந்தியா
04-ஜூன்-201715:37:58 IST Report Abuse
sivan அப்படி மூடிய கணக்கை எல்லாம், அப்படியே இங்கு கொண்டு வந்து , தமிழன் , மறத்தமிழன், திராவிடத்தமிழன் என்றெல்லாம் பெயர் சூட்டி ...மதசார்பற்ற கணக்கு ஆரம்பித்து விட்டால் போச்சு.
Rate this:
Share this comment
???????????? - வந்தவாசி,இந்தியா
05-ஜூன்-201702:28:05 IST Report Abuse
???????????? அதெல்லாம் சரி... நம் அரசு எவ்வளவு சாமியார்களின் கணக்கை முடக்கியது என்று சொல்ல முடியுமா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X