பொது செய்தி

இந்தியா

இறந்த மனைவி உடலை பைக்கில் கொண்டு சென்ற கணவர்

Added : ஜூன் 04, 2017 | கருத்துகள் (19)
Advertisement
பீஹார், புருனியா மாவட்டம், அமரர் ஊர்தி, பைக், கூலித்தொழிலாளி, மனைவி, அரசு மருத்துவமனை, சுசீலா தேவி, கலெக்டர், Bihar, Pruniya District, Cooli, Labour, Wife, Husband, hospital, Suseela devi, Collector, Bike

பாட்னா: பீஹார் மாநிலத்தில், மாவட்ட அரசு மருத்துவமனை சார்பில் அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து தரப்படாததால், ஏழை கூலித் தொழிலாளி ஒருவர் இறந்த மனைவியின் உடலை சொந்த ஊருக்கு பைக்கில் வைத்து எடுத்து சென்ற சோக சம்பவம் நடந்தேறி உள்ளது.


கூலித் தொழிலாளி


பீஹார் மாநிலம்,புருனியா மாவட்டத்தில் உள்ள ராணிபாரி கிராமத்தை சேர்ந்தவர் ஷங்கர் ஷா, 60. இவரது மனைவி சுசீலா தேவி,50. இவர்களது மகன் பப்பு, 32. ஷங்கர் ஷாவும், பப்பும், பஞ்சாப் மாநிலத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். சுசீலா தேவிக்கு உடல் நலம் குன்றிய தகவல் கிடைத்ததும் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பினர். புருனியா மாவட்ட மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் சுசீலா தேவி இறந்தார். அவர் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல இலவசமாக அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்து தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் ஷங்கர் ஷா கேட்டுள்ளார். ஆனால், தங்களிடம் அந்த வசதி இல்லாததால், சொந்த பணத்தை செலவழித்து, தனியார் அமரர் ஊர்தியில் கொண்டு செல்லும்படி மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளார்.


2,500 ரூபாய் கட்டணம்


வெளியே வந்து விசாரித்த போது தனியார் ஊர்திக்கு, 2,500 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளனர். அந்த அளவுக்கு பணம் இல்லாததால், மனைவியின் உடலை பைக்கில் கொண்டு சென்றுள்ளார் ஷங்கர் ஷா. மகன் பப்பு பைக்கை ஒட்ட, மனைவின் உடலை பிடித்து கொண்டு ஷங்கர் ஷா பின்னால் அமர்ந்த படி சென்றுள்ளார். இந்த சம்பவம் பீஹார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடத்தும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
???????????? - வந்தவாசி,இந்தியா
05-ஜூன்-201702:12:31 IST Report Abuse
???????????? பிஜேபி அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்.
Rate this:
Share this comment
Cancel
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
05-ஜூன்-201700:53:33 IST Report Abuse
Karuppu Samy மோடியையோ யாரும் குறை கூறாதீங்க? பாவம் அவர் என்ன பண்ணுவார்? ஊர்லே இருந்தா ரேடியோ லே இதெல்லாம் பேசியே தீர்ப்பித்திருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
Dol Tappi Maa - NRI,இந்தியா
04-ஜூன்-201722:25:07 IST Report Abuse
Dol Tappi Maa பிஹாரில் இருந்து தான் அதிக அளவில் ஐ ஏ எஸ் , ஐ பி எஸ் , upsc இல் தேர்வாகிறார்கள் ஆனால் பெரும்பாலான மக்கள் வறுமையில் உள்ளார்கள் . எல்லா உயர்ந்த பதவிகளும் ஒரு சில ஜாதிகளுக்கே சென்று விடுவதால் இந்த நிலை. ஊழலோ ஊழல் . சில நாட்கள் முன் 41 வயது ஆள் +2 தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் வந்தார் பின்பு கைது செய்ய பட்டார் .
Rate this:
Share this comment
Arivu Nambi - madurai,இந்தியா
05-ஜூன்-201700:40:07 IST Report Abuse
Arivu Nambiபிஹாரில் மதுபானி மாவட்டத்தில் இருந்துதான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிகம் .அம்புட்டும் கூமுட்டைகள் , அவர்கள் ஹிந்தியில் தேர்வு எழுதி வெற்றிபெற்று வருகிறார்கள் ,அந்த தேர்வின் லச்சனம் பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை .தற்போது கைதாகியுள்ள கணேஷ் குமார் அதற்க்கு உதாரணம் .அவர்களுக்கு என்ன திறமை இருக்கும் .தற்போது வெற்றிபெற்றுள்ள நந்தினியை அங்கே போடலாம் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X