பொது செய்தி

இந்தியா

வெயில் கொடுமை: காருக்குள் பாய்ந்த குதிரை

Updated : ஜூன் 06, 2017 | Added : ஜூன் 05, 2017 | கருத்துகள் (7)
Advertisement
ராஜஸ்தான், வெயில் கொடுமை, செல்சியஸ், குதிரை, கார், ஜெய்ப்பூர், குதிரை வண்டி,அசன்புரா, Rajasthan, Summer, Celsius, Horse, Car, Jaipur, Asanpura, horse cart, sunshine,sunstroke

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் கடுமையான வெயிலை தாங்க முடியாமல், சாலையில் தாறுமாறாக ஓடிய குதிரை, திடீரென காருக்குள் பாய்ந்தது.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரில் நேற்று 43 டிகிரி செல்சியஸ் வெயில் நிலவியது. கடும் வெயிலை தாங்க முடியாமல் மக்கள் அவதியடைந்தனர். அசன்புரா என்ற இடத்தில் குதிரை வண்டிக்காரர் ஒருவர் தன் குதிரையை அருகில் உள்ள கம்பத்தில் கட்டி விட்டு அதற்கு உணவும் அளித்தார்.ஆனால், வெயில் தாங்க முடியாமல் குதிரை கயிற்றை அறுத்து கொண்டு சாலையில் தாறுமாறாக ஓடியது. வழியில் வந்த ஒரு பைக் மீது மோதி விட்டு எதிரே வந்த கார் மீது திடீரென பாய்ந்தது.இதில் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு குதிரை உள்ளே சென்று விட்டது. இதில் காரை ஓட்டி வந்த தனியார் நிறுவன அதிகாரி காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த குதிரையையும், தனியார் நிறுவன அதிகாரியையும் வனத்துறையினர் கடும் பேராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
05-ஜூன்-201722:31:39 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி ஐயோ பாவம் புள் குடுத்த குதிரை வண்டிக்காரருக்கு தண்ணி கொடுக்க முடியாம போயிடுச்சி. நிழல்ல கட்டி போட்டிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
05-ஜூன்-201715:33:49 IST Report Abuse
எப்போதும் வென்றான் மனிதர்களுக்குத்தான் தண்ணீர் இல்லை... விலங்குகளுக்கு கூட பிஜேபி யின் ஆட்சில் தண்ணீர் இல்லை.. என்ன கொடுமை..
Rate this:
Share this comment
jeevan - ,
05-ஜூன்-201721:03:43 IST Report Abuse
jeevanbjp kum ithukum enna sampantham...?...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
05-ஜூன்-201714:40:38 IST Report Abuse
A.George Alphonse Very pity on this poor animal.Due to unbearable heat made this horse to enter into a car by breaking the glass is unfortunate. By seeing the glass the horse might have thought as mini swimming pool.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X