அரசியல் செய்தி

தமிழ்நாடு

சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்., ‛கும்மாங்குத்து'

Updated : ஜூன் 07, 2017 | Added : ஜூன் 07, 2017 | கருத்துகள் (13)
Advertisement
சத்தியமூர்த்தி பவன், மகளிர் காங்கிரஸ், திருநாவுகரசர்

சென்னை: சத்திய மூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் களேபரம் நிலவியது.
சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். பேட்டி முடிந்தவுடன் அங்கு இருந்த மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் அசினா சையத், முன்னாள் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கவுரியை பார்த்து என்னை பகைத்துக் கொண்டால் உன்னுடைய பதவி பறிபோனது என்றும் கூறினார்.
ஆத்திரம் அடைந்த கவுரி, அசினா கன்னத்தில் அறைந்து விட்டு அழுதுக் கொண்டே திருநாவுக்கரசர் அறைக்கு சென்றார். கன்னத்தில் அடி வாங்கிய அசினா, கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் கிடைத்த ஐந்து நிமிடத்தில், அசினா கணவர் பவனுக்குள் நுழைந்து கவுரியை கன்னத்தில் அறைந்து எட்டி உதைத்தார். அதை தடுக்க வந்த மாநில தலைவி ஜான்சி ராணிக்கும் அடி விழுந்தது.
ஒரு பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய நபரை அங்குள்ள பத்திரிகையாளர்கள் கண்டித்தனர். ஆனால், அங்கு இருந்த கதர் சட்டைக்கார்ர்கள் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர், பிரச்னையில் தலையிட்டு சமரசம் செய்தார். மேலும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem Kumar - Bangalore,இந்தியா
08-ஜூன்-201705:52:10 IST Report Abuse
Prem Kumar சத்தியமூர்த்தி பவனில் ( ஒரு உன்னதமான மரியாதைக்குரிய தேசவிடுதலை தியாகியின் பெயர்) காங்கிரஸ் கட்சியினரிடையே அடிதடி நடைபெற்றதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த செயலை கட்சியை அதி தீவிரமாக வளர்க்க நினைப்பவர்களின் செயலாக கொள்ளலாமா என தோன்றுகிறது. ஏனெனில், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடை பெற்றால் தான், காங்கிரஸ் கட்சியும் தமிழ் நாட்டில் உள்ளது என தெரிய முடிகிறது. காமராஜர் ஆட்சியை கொண்டுவருவோம் என பதவியேற்கும் நாளில் சொல்வதோடு தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவரின் பணி முடிந்து விடுகிறது. அதற்கு பின், அறிவாலயத்திற்கு செல்வதும், தி.மு.க.வின் மக்கள் விரோத - அர்த்தமற்ற போராட்டங்களில் பங்கு கொள்வதின் மூலமும், அவர்களை ஆதரித்து அறிக்கைகள் விடுவதன் மூலமும் அந்த கட்சி வளர்ச்சிக்கு தான்- அந்த கட்சி ஆட்சிக்கு வருவதற்கு தான்- காங்கிரஸ் கட்சி பாடுபடுகிறதே தவிர தனது சொந்த கட்சியை வளர்க்க மாநில தலைவரோ மற்றவர்களோ எந்தவித முயற்சியும் செய்வது கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய தலைவர்கள் வந்து இப்படியே செயலாற்றியபின் தங்களது பெயருக்கு பின்னால் "முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்" என்ற அடைமொழியுடன் உலா வருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
07-ஜூன்-201717:46:56 IST Report Abuse
சுந்தரம் இதே சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ்காரர்களுக்குள் மோதல் வந்தால் குறைந்தது நாலு வேஷ்டி நாலு துண்டு சட்டைகள் கிழியும். அதனால் மீண்டும் அவை வாங்கப்படுவதால் நெசவாளர்களுக்கு ஓரளவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி உள்ளதாக நம்புகிறோம். ஆனால், நடந்து முடிந்த சம்பவத்தில் காங்கிரஸ்காரிகளின் மோதலில் புடவை ரவிக்கை கிழியாததால் நஷ்டம் நெசவாளர்களுக்கே. இலாபம் காட்சியை நேரடியாக கண்ட பத்திரிக்கையாளர்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
07-ஜூன்-201717:01:30 IST Report Abuse
Endrum Indian இது தாண்டா காங்கிரஸ் என்று நினைக்கத்தோணுகின்றது இந்த செய்தியை படிக்கும் போது. அவள் ஒரு அடி கொடுத்தால் நீ ரெண்டு கொடுக்கவேண்டும் என்று தெரியாத உனக்கு தலாக் தலாக் தலாக் என்று சொல்லாமல் பெண்டாட்டிக்காக கவுரியை அடித்தார் என்று கதர் சட்டைகள் அவருக்கு சபாஷ் சொன்னது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X