பதிவு செய்த நாள் :
அக்டோபரில் காங்., தலைவர் ஆகிறார் ராகுல்?

புதுடில்லி: காங்கிரசின் நிர்வாகிகளை தேர்ந் தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தலை, வரும் அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள் ளது. அதன்படி, அக்டோபரில், கட்சியின் தலை வராக, துணைத் தலைவர் ராகுல் தேர்ந்தெடுக் கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரசின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற் கான உட்கட்சி தேர்தல்களை, இந்தாண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

இந்நிலையில், கட்சியின் உயர்நிலை குழு வான, செயற்குழு கூட்டம், தலைவர் சோனியா தலைமையில், டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது. துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலை வர்கள்

பங்கேற்றனர். இந்தகூட்டத்தில், தேர்தல் கமிஷன் கூறியுள்ள தேதிக்கு முன், உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கான கால அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை, அக்., 15க்குள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கட்சி தலைவர் சோனியாவுக்கு உடல்நிலை சரி யில்லாததாலும், 2019ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையிலும், ராகுலுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.

சில ஆண்டு களாகவே பேசப்பட்டு வந்தாலும், தற்போது, தலைவர் பதவிக்கு ராகுல் தேர்ந்தெடுக் கப்படுவது உறுதி யாகி உள்ளது.

அடுத்த லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகை யில், ஆலோசனைகள் வழங்க, துணைத் தலைவர்

Advertisement

தலைவர், ராகுல், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், உட்கட்சி தேர்தல், தேர்தல் கமிஷன், காங்கிரஸ் தலைவர் சோனியா, உயர்நிலை குழு,  செயற்குழு கூட்டம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், Congress Leader, Ragul, Election Commission,Congress Vice President Rahul, Congress President Sonia Gandhi, High Commission, Executive Meeting, Former Prime Minister Manmohan Singh

ராகுல் தலைமையில், செயற்குழு வின் கீழ் துணை அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அரசியல் சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப் பது, கொள்கைகளை வகுப்பது உள்ளிட்டவை குறித்து, இந்த குழு ஆய்வு செய்யும். கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் ஆலோசித்து இந்த கொள்கைகள் வகுக்கப்படும்.

அது தவிர, குறிப்பிட்ட பிரச்னைகளில், ஒத்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவைப் பெறு வதற்கான பேச்சை, இந்த குழு மேற்கொள்ளும்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-201723:45:14 IST Report Abuse

kumarcongress should think of an another leader to sustain partys image .

Rate this:
Gopi Jyran - Chidambaram,இந்தியா
08-ஜூன்-201723:00:20 IST Report Abuse

Gopi Jyranவாரிசு அரசியலை நடத்தும் காங்கிரஸ் கட்சி மக்களால் புறக்கணிக்கபட்ட கட்சி...நாட்டிற்கு ஊழல் மற்றும் மதவாதம் இந்த இரண்டும் தேவை இல்லை

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
08-ஜூன்-201721:53:43 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஇதாங்க வாரிசு குடும்ப அரசியல் என்பது. இதை மக்கள் தவிர்க்கனும்ங்க புதியவர்கள் (புதிய கட்சி) ஆளனும்ங்க..எப்படி கல்வித்துறையில் புதிய பாட திட்டம் கொண்டு வரப்படுகிறதோஅதுபோல

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X