பதிவு செய்த நாள் :
 ஜனாதிபதி, தேர்தல், புதுடில்லி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தேர்தல் கமிஷன்,  தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி,  ஜனாதிபதி தேர்தல், President, Election, Delhi, President Pranab mukarjee, Election Commission, President Election, Chief Election Commissioner Najim Zaidi, பா.ஜ., காங்கிரஸ், BJP, Congress

புதுடில்லி: நாட்டின், 15வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூலை 17ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, வேட்பாளரை அறிவிக்க, பா.ஜ.,வும், காங்கிரசும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

நாட்டின், 14வது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 24ம் தேதி யுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதி பதியை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில, டில்லியில்,

தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி, நிருபர்களை நேற்று மாலை சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி தேர்தல் குறித்து, அவர் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம், 17ம் தேதி நடத்தப் படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, ஜூன், 14ல் வெளியிடப்படும். அன்றே வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்ய, ஜூன் 28 கடைசி நாள். வேட்பு மனுக்கள் பரிசீலனை, ஜூன் 30ல் நடக்கும்.வேட்பு மனுக்களை வாபஸ் பெற,

Advertisement

ஜூலை, 1 கடைசி நாள்.தேர்தல் நாளான ஜூலை, 17ல், காலை, 10:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கி, மாலை, 5:00 மணிக்கு முடிவு பெறும்.ஓட்டு எண்ணிக்கை ஜூலை, 20, காலை, 11:00 மணிக்கு துவங்கும்.

அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். ஓட்டளிக்க தகுதியுள்ள, 50 பேர், வேட்பாளரை முன்மொழிய வேண்டும்; 50 பேர் வழிமொழிய வேண்டும்.பார்லிமென்டில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடியில், எம்.பி.,க்கள் ஓட்டளிக்க வேண்டும். அவசர காரணங்களுக்காக வேறு இடங்களில் ஓட்டளிக்கவேண்டும் என்றால், 10 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிவித்தார்.

 ஜனாதிபதி, தேர்தல், புதுடில்லி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தேர்தல் கமிஷன்,  தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி,  ஜனாதிபதி தேர்தல், President, Election, Delhi, President Pranab mukarjee, Election Commission, President Election, Chief Election Commissioner Najim Zaidi, பா.ஜ., காங்கிரஸ், BJP, Congress

யாருக்கு ஓட்டுரிமை?



ஜனாதிபதி தேர்தலில், எம்.பி.,க்கள், எம்.எல். ஏ.,க்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும். மாநில சட்டசபைகளிலும், பார்லி மென்டிலும் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.மக்கள் தொகையின் அடிப்படையில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் மதிப்பிடப்படும். இதனால், ஓட்டு மதிப்பு, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
துணை ஜனாதிபதி தேர்தலில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் மட்டுமே ஓட்டு போடுவர்.

இதற்காக பார்லிமென்டில் ஓட்டுச்சாவடி அமைக்கப்படும். இத்தேர்தலில் ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட மாட்டாது; சீட்டு முறைப்படியே ஓட்டளிக்க வேண்டும்.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
08-ஜூன்-201720:31:11 IST Report Abuse

Srikanth Tamizanda..சில பேத்தலான கருத்து.. ஒரு ஆட்சியை கலைப்பதென்றால் அதற்கு அரசியல் சாசனம் கூறகிர காரணங்கள் இருந்தாலொழிய கலைக்க முடியாது.. நாட்டின் இரயாண்மை பாதிக்கப்படாத வரை இப்படி ஒரு செயலை மத்திய அரசால் செய்ய இயலாது

Rate this:
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
08-ஜூன்-201717:58:48 IST Report Abuse

நெல்லை மணி,தமிழிசைக்கு ஜே ஆனால் பாஜக வட மாநிலத்தவரைதான் தேர்வு செய்யும். மொத்தத்தில் சொல்ல போனால் பாஜக ஒரு வட மாநில கட்சி. தமிழ்நாட்டில் தமிழிசை, பொன் ராதா, etc போன்ற எத்தனையோ பேர்கள் பாஜக வுக்காக வரிந்து கட்டினாலும், பாஜக இவர்களை கண்டு கொள்ளாது.

Rate this:
Indian - Bangalore,இந்தியா
08-ஜூன்-201719:52:27 IST Report Abuse

Indianகர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா எல்லாம் வடமாநிலங்களா? அங்க பிஜேபி ஜெயிக்கில்லையா? அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியது பிஜேபி தான். அப்ப கலாம் என்ன வடமாநிலத்தவரா? ...

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
08-ஜூன்-201715:35:51 IST Report Abuse

ganapati sbஅத்வானி அதிபராகவும் ஜோஷி துணை அதிபராகவும் மர்மு மாற்று வேட்பாளராகவும் நிற்கலாம்

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X