அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மகளிர் காங்கிரசார் குடுமிப்பிடி சண்டை
தடுக்க முடியாமல் திருநாவுக்கரசர் தவிப்பு

'ஒற்றுமையாக இருங்கள்' என, கட்சி நிர்வாகி களுக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் அறிவுரை கூறிச் சென்ற இரண்டு நாட்களுக் குள், சென்னை, சத்தியமூர்த்தி பவனில், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் அடிதடியில் இறங்கினர்.

சமீபத்தில், சென்னை வந்திருந்த ராகுலை வரவேற்க, சத்தியமூர்த்தி பவன் முன், மகளிர் காங்கிரசார் வரவேற்பு பேனர்களை வைத்திருந் தனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர், கவுரி கோபால் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த பேனரில், அகில இந்திய மகளிர் காங்., செயலர் ஹசீனா சையது படம் இல்லை.

இதனால்,கவுரி மீது அதிருப்தி அடைந்த ஹசீனா, கவுரியின் மாவட்ட தலைவர் பதவியை பறித்து, தன் ஆதரவாளர் கோமதியை நியமிக்க, பரிந்துரை செய்தார். டில்லி

மேலிடமும், அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவல் கவுரிக்கு தெரிய வந்ததும், மாநில மகளிர் காங்., தலைவர் ஜான்சிராணியிடம் முறை யிட்டார். உடனே, அவர், கவுரிக்கு மாநில அளவில் பதவி வழங்கும்படி, மேலிடத்திற்கு பரிந்துரை செய்தார்.

இப்பின்னணியில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை, நேற்று கவுரிசந்தித்து பேசினார். அப்போது, தன் பதவி பறிப்புக்கு, ஹசீனா தான் காரணம் என, புகார் கூறினார். தனக்கு, மாநில நிர்வாகி பதவி வேண்டாம் என்றும், ஏற்கனவே வகித்த மாவட்ட தலைவர் பதவி தான் வேண்டும் என்றும், திருநாவுக்கரசரிடம் கூறியுள்ளார்.

அப்போது, அருகில் இருந்த ஜான்சிராணி, ''இந்த பிரச்னையை, நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்,'' என கேட்டுக் கொண்டார். அதற்கு திருநாவுக்கரசர், ''இப்பிரச்னையை, என்னிடம் கொண்டு வந்திருந்தால், இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி, தீர்வு கண்டிருக்க முடியும்.

Advertisement

 மகளிர், காங்கிரசார், குடுமிப்பிடி, சண்டை, தடுக்க, முடியாமல் திருநாவுக்கரசர், தவிப்பு

தற்போது, மேலிடம் வரை போய் விட்டதால் டில்லி தான் முடிவு செய்ய வேண்டும்,'' என,
கூறி விட்டார்.

அந்த நேரத்தில்,சத்தியமூர்த்தி பவனுக்குள், ஹசீனா வந்தார். அவருக்கும், கவுரிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இருவரும் கைக லப்பில் ஈடுபட்டனர். ஹசீனா வின் கணவர் சையது குறுக்கிட்டதும், கவுரி யின் ஆதரவா ளர்கள் களத்தில் குதித்தனர்; இருதரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

சண்டையை தடுக்க முடியாமல், திருநாவுக் கரசர் தவித்தார். சத்தம் கேட்டு, மற்ற நிர்வாகி கள் ஓடி வந்து, இருதரப்பினரையும் அமைதிப் படுத்தினர். அடிதடியில் காயமடைந்த கவுரி, ஹசீனா, ஜான்சிராணி ஆகிய மூவரும், நேராக டாக்டர்களிடம் சென்று, சிகிச்சை பெற்றனர். ''யார் மீது தவறு என்பதை விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராகுல், 'உங்களுக்குள் பிரச்னை ஏற்பட் டால், பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்; சண்டை போட வேண்டாம்; ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என, அறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gmk1959 - chennai,இந்தியா
08-ஜூன்-201716:56:42 IST Report Abuse

gmk1959திரு ஸ்பெஷல் எங்கடா ரொம்ப நாளா வேட்டி கிழிப்பு உற்சவம் நடைபெற்று ரொம்ப நாளாச்சேன்னு பார்த்தேன் நல்ல வேளை புடவை கிழிப்பு நடத்தாமல் காங்கிரஸ் மானத்தை காப்பாத்திட்டீங்க தாய் குலங்களே ரொம்ப நன்றி

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஜூன்-201716:19:57 IST Report Abuse

Endrum Indianநேரு முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தானே அப்படித்தான் இருக்கும்.

Rate this:
Arumugam - Paris,பிரான்ஸ்
08-ஜூன்-201716:10:40 IST Report Abuse

Arumugamசண்டையை தடுக்க முடியாமல், திருநாவுக் கரசர் தவித்தார். ஆனால் இளங்கோவன் இருந்திருந்தால் பெண்கள் சண்டையை ரசித்திருப்பார்.

Rate this:
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
08-ஜூன்-201718:39:01 IST Report Abuse

Maverickநீ ஒன் சாதிக்காரனை சப்போர்ட் பண்ணி கருத்து போடுற... நீ எல்லாம் படிச்சி என்னத்துக்கு... ...

Rate this:
kmish - trichy,இந்தியா
08-ஜூன்-201718:40:49 IST Report Abuse

kmishஇளங்கோவன் இருந்திருந்தால் பெண்கலுக்குள் சண்டையே வந்து இருக்காது ...

Rate this:
Karthik - Chennai,இந்தியா
08-ஜூன்-201722:44:17 IST Report Abuse

Karthikநீங்க உங்க மதம் சப்போர்ட் பண்ணி கருத்து போடற . ...

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X