அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆளுங்கட்சியில் குழப்பமோ குழப்பம்
சட்டசபை தொடர் சுமுகமாக நடக்குமா?

ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,வில் குழப்பம் நிலவும் சூழலில், சட்டசபை கூட்டத்தொடர், சுமுகமாக நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி, குழப்பம், சட்டசபை, அ.தி.மு.க.,தமிழக சட்டசபை,  சபாநாயகர்,  முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், பன்னீர் செல்வம், தினகரன்,  முதல்வர் பழனிசாமி, பழனிசாமி, 
The ruling party, Confusion, legislative Assembly, ADMK, Tamil Nadu assembly, Speaker, Panneerselvam, Former Chief Minister Panneerselvam, 
Dinakaran, Chief Minister Palanisamy, Palanisamy

தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சியான, தி.மு.க.,விற்கு, 89 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதன் கூட்டணி கட்சிகளான, காங்கிரசுக்கு, எட்டு; முஸ்லிம் லீக் கட்சிக்கு, ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர்.

ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,விற்கு, சபாநாயகர் தவிர்த்து, 134 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்; ஒரு இடம் காலியாக உள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தற்போது, மூன்று பிரிவாக உள்ளனர்.

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணியில், 12 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தினகரன் ஆதரவாளர்களாக, 31 பேர் உள்ளனர். இவர்களில் பலர், முதல்வர் பழனி சாமியை சந்தித்து, அமைச்சர் பதவி கேட்டனர். அவர் பதவி தராததால், அதிருப்தியில் இருந்தனர். தற்போது, தினகரன் பக்கம் சென்றுள்ளனர்.

எனவே, அவர்கள் சட்ட சபை கூட்டத்தொடரில், முதல்வர் பழனிசாமி தரப்புக்கு ஆதரவு கொடுப்பரா என, சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரம், அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, குடிநீர் பிரச்னை உட்பட, பல்வேறு பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர்களுக்கு ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் உறுதுணையாக இருப்பரா என்பதும்சந்தேகமாக உள்ளது. ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,க் களும், எதிர்க் கட்சி, எம்.எல்.ஏ.,க் களும் ஒத்து ழைப்பு கொடுக்கா விட்டால், சபையை நடத்து வது சிரமமாகும்.

எனவே, இந்த சட்டசபை கூட்டத்தொடர், மிகவும் பரபரப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறும்போது, ''மக்கள் எதிர்பார்க்கும் வகையில், தி.மு.க.,வின் செயல்பாடுகள் இருக்கும். நல்ல காரியங்கள் எல்லாம் நடக்கும்,'' என்றார்.
சட்டசபை காங்., தலைவர் ராமசாமி கூறுகையில், ''அ.தி.மு.க., எத்தனை அணிகளாக உள்ளன என்பது குறித்து, எங்களுக்கு பிரச்னை இல்லை. அவர்கள் செய்யும் தவறுகளையும், ஆட்சி நடைபெறாமல், அரசு செயலற்று உள்ளதையும் எடுத்துரைப்போம்,'' என்றார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kum - paris,பிரான்ஸ்
08-ஜூன்-201721:19:01 IST Report Abuse

kumஅப்புடியே நடந்துட்டா மட்டும் தமிழ் நாட்டை தூக்கி நிறுத்திடுவாங்குல

Rate this:
sachin - madurai,இந்தியா
08-ஜூன்-201712:31:28 IST Report Abuse

sachinஎன்ன சொன்னாலும் இந்த முறை சிரித்து கொன்டே இருப்பார்கள் ஆளும் கட்சினர் ....." பதில் சொல்ல தெரிந்தால் தானே ...." ஒரு கேள்விக்கு ஏந்திப்பனுக பாரு சம்பந்தமே இல்லாமல் குற்றவாளி ஜெயா சொல்லுவாரே திமுகவுக்கு அருகதை இல்லை என்கின்ற வார்த்தை அதை சொல்ல 15 பேர் ......அனால் கேட்ட கேள்விக்கு பதில் வராது உடனே உள்ளெ வருவார் பாருங்கள் நீதி அரசர் தனபால் .ஆமா ஆமா ஆமா உங்களுக்கு அருகதை இல்லை என்று சொல்லுவார் ....

Rate this:
sachin - madurai,இந்தியா
08-ஜூன்-201712:28:35 IST Report Abuse

sachinகல்வி அமைச்சரை ஆங்கிலத்தில் கொஞ்சம் பேச சொல்லுங்கள் சண்டை எல்லாம் மறந்து ஒரே சிரிப்பாக அவை இருக்கும் ...... மேடம் சப்போர்ட் பீப்புள்

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X