அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கருணாநிதிக்கு பாராட்டு தீர்மானம்:
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: 'தி.மு.க., தலைவர் கருணாநிதியின், சட்டசபை வைர விழாவை ஒட்டி, அவருக்கு பாராட்டு தெரிவித்து, சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் சார்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு, இந்த ஆண்டு, 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதை வைர விழாவாக, தி.மு.க.,வினர் கொண்டாடினர். அதையொட்டி, அவருக்கு பாராட்டு தெரிவித்து,

சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., - காங்., - முஸ்லிம் லீக் கட்சிகள் சார்பில், தனித்தனியே சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதை பரிசீலிப்பதாக, சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

14ல் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை


தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், வரும், 14ல், சென்னை, அறிவாலயத்தில் நடக்கிறது. கட்சியின்

Advertisement

 கருணாநிதிக்கு, பாராட்டு, தீர்மானம்,எதிர்க்கட்சிகள், வலியுறுத்தல்

செயல் தலைவர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.சட்டசபையில் கிளப்ப வேண்டிய பிரச்னைகள், விவகாரங்கள் குறித்து, அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
08-ஜூன்-201717:02:45 IST Report Abuse

Visu Iyerஆட்சியை கலைங்கப்பா ...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
08-ஜூன்-201716:32:12 IST Report Abuse

தங்கை ராஜாமாண்பு போற்றும் மாநில சட்டமன்றமாக இப்போது ஆள்வோர் அதை வைத்திருந்தால் இக்கோரிக்கைக்கே அவசியமிருந்திருக்காது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இம்மாபெரும் சாதனைக்காக கட்சிமாச்சர்யமின்றி சபாநாயகரும் முதல்வரும் முன்னின்று, சாதித்த நாயகனுக்கு விழா எடுத்து தங்கள் பெயரும் சரித்திரத்தில் இடம்பெறும் வகையில் புகழும் பாராட்டும் தேடிக் கொண்டிருப்பார்கள். வாய்ப்பிருந்தும் கொடுப்பினை இல்லாதவர்கள்.

Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
08-ஜூன்-201714:51:31 IST Report Abuse

Sridharகேடுகெட்ட அரசியல்வியாதிகளுக்கு பாராட்டு தீர்மானமா? கண்டன தீர்மானம் தான் நிறைவேற்றவேண்டும்.

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X