பொது செய்தி

தமிழ்நாடு

'பிளாஸ்டிக்' அரிசி வர விடமாட்டோம்! : அமைச்சர் காமராஜ் திட்டவட்டம்

Added : ஜூன் 09, 2017 | கருத்துகள் (28)
Advertisement
பிளாஸ்டிக் அரிசி, அமைச்சர் காமராஜ்,  பிளாஸ்டிக், அரிசி, சென்னை, ஸ்மார்ட் கார்டு, Smart Card, Minister Kamaraj, Rice, Plastic Rice, Chennai, Plastic

சென்னை: ''தமிழகத்தில், 'பிளாஸ்டிக்' அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றுக்கு இடமே இல்லை. அவற்றை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவை மாநிலத்திற்குள் வராமல் தடுக்க, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்,'' என, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில், அரிசி பஞ்சம் இல்லை. மத்திய அரசிடமிருந்து, மாதத்திற்கு, 2.96 லட்சம் டன் அரிசியை, விலை கொடுத்து வாங்கி, இலவசமாக வழங்குகிறோம். கூடுதல் தேவை என்றால், தேவைக்கேற்ப, 26 ஆயிரம் டன் அரிசி வாங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில், 3.14 லட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி, 20 ரூபாய்க்கு வழங்கும் திட்டமும் தொடர்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, அரிசி பற்றாக்குறைக்கு இடமில்லை. 'ஒரிஜனலில்' பிரச்னை இருந்தால் தான், 'டூப்ளிகேட்' வரும். அரிசி தட்டுப்பாடு இல்லாததால், பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை.

பிளாஸ்டிக் அரிசி குறித்து புகார்கள் வந்தால், உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரிசி முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வாங்கப்படுகிறது.தனியார் யாரும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றுக்கு, தமிழகத்தில் இடமில்லை. எனினும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இது, மிகப்பெரிய திட்டம். நிதி பற்றாக்குறையிலும், 330 கோடி ரூபாய் ஒதுக்கி, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. அதில், தவறு உள்ளதாக புகார் உள்ளது.

'ஆதார்' கார்டில் விபரம், ஆங்கிலத்தில் உள்ளது. அதை, தமிழில் மொழி பெயர்க்கும் போது, சில தவறுகள் ஏற்பட்டன. இதை தவிர்க்க, தாலுகா அளவில், மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறுகள் சரி செய்யப்பட்ட பின்னரே, கம்ப்யூட்டரில் விபரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.ஒரு மாதத்திற்குள், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நிறைவடையும். மொத்தம், 1.91 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதுவரை, ஒரு கோடி ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கார்டில் தவறு இருந்தால், 'ஆன்லைனில்' சரி செய்யலாம். அரசு இ - சேவை மையங்களுக்கு சென்றும், தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
09-ஜூன்-201721:32:56 IST Report Abuse
Cheran Perumal உள்ளே வரும் வழியை கண்டுபிடித்து முதலில் அதை தடுக்க வேண்டும். காசுக்கு ஆசைப்படும் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு வருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
09-ஜூன்-201718:07:25 IST Report Abuse
Paranthaman பிளாஸ்டிக் அரிசி என்று கூறுவது உண்மையல்ல ,அது இத்தாலியின் உணவான பாஸ்தா வகையை சேர்ந்தது ,சாப்பிடக்கூடிய உணவுதான் .நண்பரே இத்தாலியில் பாஸ்தா உணவை சைனாக்காரனின் பிளாஸ்டிக் அரிசியுடன் உதாரணம் காட்டாதீர்கள். அது வேறு. இது வேறு. உலகில் இரண்டு நாடுகள் உலகை அழிப்பதில் கங்கணம் கட்டியுள்ளன.. ஒன்று பாகிஸ்தான் உள்ளிட்ட அரபு நாடுக்ள மற்றொன்று சைனா. பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றுக்கு இடமே இல்லை. அவற்றை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவை மாநிலத்திற்குள் வராமல் தடுக்க, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும், என, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஒரு பக்கம் கூறுகிறார். மறுபக்கம் இன்று திருநெல்வேலி அரசி கடைகளில் சந்தேகத்தின் பேரில் உணவு ஆய்வாளர்கள் அரிசி மூட்டைகளை சோதித்துள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன. இது எப்படி இருக்கு..
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-ஜூன்-201716:19:23 IST Report Abuse
Endrum Indian வராது என்று இது உறுதி அளிச்சாச்சின்னா அப்போ நிச்சயம் டாஸ்மாக் நாட்டு உள்ளே பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை வந்தாச்சுன்னு அர்த்தம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X