தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., பாராட்டு: சமூக வலைதளத்தில் வரவேற்பு

Updated : ஜூன் 11, 2017 | Added : ஜூன் 10, 2017 | கருத்துகள் (16) | |
Advertisement
தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜனுக்கு, அ.தி.மு.க., - பன்னீர் அணி எம்.எல்.ஏ., பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்தது, சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.மதுரை மத்திய தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'நேர்மையுடன் அரசியல்; நேர்மையான அரசியல்வாதி' என்ற தலைப்பில், ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:அரசியல் என்றாலே
தி.மு.க., அ.தி.மு.க., பாராட்டு, சமூக வலைதளம், வரவேற்பு, பழனிவேல் தியாகராஜன், பாண்டியராஜன், எம். எல்.ஏ.

தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜனுக்கு, அ.தி.மு.க., - பன்னீர் அணி எம்.எல்.ஏ., பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்தது, சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை மத்திய தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'நேர்மையுடன் அரசியல்; நேர்மையான அரசியல்வாதி' என்ற தலைப்பில், ஒரு கருத்தை பதிவு
செய்துள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது:
அரசியல் என்றாலே ஊழல், லஞ்சம் என ஆகிவிட்ட மோசமான சூழ்நிலையில், நான் அரசியலுக்கு வந்தேன். தேர்தலில் நிற்கும் போதே, என் தந்தையின் வழியில், 'ஓட்டுக்காக யாருக்கும், ஒரு ரூபாய் கூட, பணம் தர மாட்டேன். அதேபோல், என் மூலமாக பெறப்படும் உதவிகளுக்கு, யாரிடமிருந்தும் ஒரு ரூபாய் கூட, பணம் பெற மாட்டேன்' என்ற கொள்கையில் தான், ஓட்டுகளை கோரினேன்.
எம்.எல்.ஏ.,வாக செயல்பட்ட ஓராண்டில், வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பெரும்பாலானவர்களுக்கு அரசு உதவித் தொகைகளை பெற்று தந்துள்ளேன். தனிப்பட்ட முறையில், பள்ளி, கல்லுாரி சேர்க்கை, அரசு பணிகளுக்கான பரிந்துரை என, பலருக்கும் பல வகைகளில் செயலாற்றி உள்ளேன். நேர்மையான வழியில், பலர் பயனடைய உதவி அளித்தவர்களுக்கு, என் நன்றி.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
அவருக்கு பாராட்டு தெரிவித்து, பன்னீர் அணி எம்.எல்.ஏ., பாண்டியராஜன், 'டுவிட்' செய்தார். அதில், 'இதுபோல வெளிப்படையாக, சொல்ல முடிவதே போற்றுதலுக்குரியது. நண்பருக்கு வாழ்த்துகள்' என, குறிப்பிட்டிருந்தார்.அதற்கு பதில் அளித்த தியாகராஜன், 'கட்சிக்கு அப்பாற்பட்டு, பெருந்தன்மையோடு வாழ்த்து சொல்லியதற்கு நன்றி!' என, கூறியுள்ளார்.
இருவருக்கும், 'நெட்டிசன்கள்' பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya - Hyderabad,இந்தியா
12-ஜூன்-201710:32:44 IST Report Abuse
Sathya மிகவும் பண்பட்ட அரசியல்வாதிகள்.இத்தனை கொடுமைகளிலும் தமிழ்நாடு இன்னமும் sustain செய்வதற்கு இவர்களை போன்றவர்கள் காரணம்.
Rate this:
Cancel
11-ஜூன்-201723:31:59 IST Report Abuse
ChittoorRamanathanKrishnamurthy These two are well educated and highly qualified persoñs. One should have seen the India Today Southern Conclave held at Chennai recently in which both these gentlemen figured, to know their civility in discussions and deep knowledge on the subject. Their respective top leadership is not so gracious and these leaders should not be sidelined because of this magnanimity.
Rate this:
Cancel
murugu - paris,பிரான்ஸ்
11-ஜூன்-201720:08:32 IST Report Abuse
murugu இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ""விடி வெள்ளி ""யாக தெரிவீர்கள் என்பது உறுதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X