உங்கள் வீட்டுக்கே மணல் வரும்! 'அள்ளி' விடுகிறார் பழனிசாமி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உங்கள் வீட்டுக்கே மணல் வரும்!
'அள்ளி' விடுகிறார் பழனிசாமி

ஈரோடு:''அரசே மணல் குவாரியை எடுத்து நடத்துவதால், அதில் உள்ள பிரச்னைகள் களையப்பட்டு, உங்கள் வீட்டுக்கே மணல் தேடி வரும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.

 மணல்,  பழனிசாமி, ஈரோடு, மணல் குவாரி, முதல்வர் பழனிசாமி, சட்டசபை தேர்தல், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்,  பெருந்துறை  எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம், அ.தி.மு.க., பன்னீர்செல்வம், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி, Sand, Palanisamy, Eroad, Sand Quarry, Chief minster Palanisamy, Assembly Election, ADMK, Panneerselvam, 
Minister of Environment, Perundurai MLA Thoppu Vengatachalam, Modakurichi MLA sivasuppramani

ஈரோட்டில், ஒரு மேம்பாலம், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட துவக்க விழா நடந்தது. விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

'மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்தும் என, அறிவித்து செயல்படுத்திய பின்னும், மணல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது' என, மக்கள் கேட்கின்றனர். அரசு ஏற்று நடத்தி, குறைந்த நாட்கள் தான் ஆகிறது. ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். இப்பணியில் உள்ள பிரச்னைகளை சீர் செய்து, குறைந்த நாளில்,

மணல்விலையை குறைத்து, உங்கள் வீடுகளுக்கே தேடி வரும் நிலை ஏற்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

புறக்கணித்த 'தோப்பு!'


கடந்த,2016 சட்டசபை தேர்தல் வரை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் ஈரோடு புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலராக, பெருந்துறை - எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம் வலம் வந்தார்.

கடந்த, 2016 தேர்தலில் இம்மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க., வேட்பாளர், எட்டு பேர் வெற்றி பெற்ற நிலையில், தோப்பு வெங்கடாசலம், 'டம்மி'யாக்கப் பட்டு, அவரிடம் இருந்த சுற்றுச்சூழல் துறை மற்றும் புறநகர் மாவட்ட செயலர் பதவி,பவானி - எம்.எல் .ஏ., கருப்பண்ணனுக்கு வழங்கப்பட்டது.

ஜெ., மறைவுக்கு பின், பன்னீர்செல்வம்முதல்வரான போதும், பழனிசாமி முதல்வரான போதும், தனக்கு மீண்டும் பதவி கிடைக்கும் என, நினைத்து ஏமாற் றம் அடைந்தார். இதனால், பழனிசாமி, முதல்வ ராக, ஈரோடு மாவட்டம் வழியாக முதன்முறை யாக சேலம் சென்றபோதும், அந்நிகழ்ச்சியில் பங் கேற்கா மல் தோப்பு வெங்கடாசலம் புறக்கணித்தார்.

Advertisement

தவிர, அவரது ஆதரவாளர் என்ற ரீதியில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி உட்பட எட்டு, எம்.எல்.ஏ.,க்களுடன் தனி கூட்டம் நடத்துவது, முதல்வர் பழனிசாமியை சந்தித்தது என தன்னை, ஊடகங்களில், முக்கியஸ்தராக காட்டிக் கொண்டார்.

இருப்பினும்,எவரும் தோப்பு வெங்கடாச லத்தை கண்டு கொள்ளவில்லை. கடந்த வாரம், தினகரனை சந்தித்து, பரபரப்பை ஏற்படுத்தி னார். இதற்கிடையில், நேற்று ஈரோட்டில் நடந்த விழாவில், அவர் கலந்து கொள்ள வில்லை.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
12-ஜூன்-201722:21:51 IST Report Abuse

ramasamy naickenதோப்பு, தனி மரம் ஆகாது. எனவே வெங்கடாச்சலம் தோப்பை விற்றாவது, பழனிசாமி ஆட்சியை கவிழ்த்து தான் யார் என்பதை தமிழ்நாட்டிற்கு காட்ட வேண்டும்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
12-ஜூன்-201720:53:01 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்தலையிலே மண்ணை அள்ளி போட்டுக்கத் தான்.. நாசமா போன கிரிமினல் பினாமி, பாஜக பினாமி ஆட்சியை தக்கவைத்து கொண்டு தமிழனின் வாழ்க்கையில் மண்ணை அள்ளி போடுகிறார்கள். அதை டோர் டெலிவரி வேறு செய்கிறார்கள். நல்லா வருவீங்க..

Rate this:
kmish - trichy,இந்தியா
12-ஜூன்-201720:26:43 IST Report Abuse

kmishகண்டிப்பா மணல் வீடு தேடி வரும் உங்க மேல நம்பிக்கை இருக்கு தலைவா நீங்க உங்களை நம்புனவங்களை கை விட மாட்டீங்க , எப்படி எங்களுக்கு தெரியும் நினைக்கிறீங்களா சேகர் ரெட்டிக்கு வாரி வழங்குன வள்ளல் ஆச்சே ,இது கூட தெரியாம இருப்போமா

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X