நீட்தேர்வு முடிவுகள் வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி

Updated : ஜூன் 12, 2017 | Added : ஜூன் 12, 2017 | கருத்துகள் (25)
Advertisement
நீட் தேர்வு முடிவுகள், சுப்ரீம் கோர்ட், மதுரை ஐகோர்ட் கிளை, சிபிஎஸ்இ, புதுடில்லி,  நீட், NEET, NEET Exam, Supreme Court, Madurai High Court Bench, CBSE, Delhi, NEET Exam Result

புதுடில்லி : மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் தேர்வு மே 7 ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் சிலர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மதுரை ஐகோர்ட் கிளையும், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டது. இதனையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட், இன்று (ஜூன் 12) விசாரித்தது.
மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என அனுமதி அளித்தது. மேலும் மதுரை ஐகோர்ட் கிளை விதித்த தடை உத்தரவை நீக்கியதுடன், நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை மாநில ஐகோர்ட்கள் விசாரிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை கல்வியாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் அனமதி அளித்துள்ளதை அடுத்து நாளை மறுநாள் (ஜூன் 14) நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் நாளையே தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Capt JackSparrow - Madurai,இந்தியா
12-ஜூன்-201723:03:05 IST Report Abuse
Capt JackSparrow ஆங்கிலம், ஹிந்தி தவிர 10 மாநில மொழிகளில் நீட் "பொது" நுழைவு தேர்வு நடந்தது. ஆனால் மாநில மொழிகளில் வழங்கப்பட்ட வினாத்தாளை, ஆங்கிலம்/ஹிந்தியில் வழங்கப்பட்ட நுழைவு தாலும் (difficulty levels term ) ஒன்று இல்லை என CBSE நிர்வாகமே கோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது. அது ஏன்? இந்நிலையில் இது எப்படி ஒரு பொது நுழைவு தேர்வாக கருத முடியும். 90 % ஆங்கிலம், ஹிந்தி வழியில் எழுதினார்கள் என்பதற்காக மீதமுள்ள 10 % நாசமாக போனால் பரவா இல்லையா? ஒரே கேள்வியை மொழி பெயர்த்து வழங்குவதில் என்ன சிக்கல்? ஏன் செய்யவில்லை? பாட திட்டமும் ஒன்றாக இல்லை.... கேள்வி தாலும் ஒன்றாக இல்லை. இது எப்படி பொது நுழைவு தேர்வாகும்?
Rate this:
Share this comment
Cancel
John - vedasandur,இந்தியா
12-ஜூன்-201716:39:01 IST Report Abuse
John எம்.சி.ஐ. விதிமுறைகளைப் முழுமையாக அறிந்து கொள்ளாமல் விமர்சிப்பது தவறு. நீட் தேர்விலிருந்து விலகளிப்பதோ அல்லது விலகு பெறுவது என்பதோ மத்திய, மாநில அரசுளால் இயலாது என்பது ஆழ்ந்த சட்ட நுணுக்கம் கொண்ட வர்கள் மற்றும் மத்திய, மாநில அரசின் உயர் பதவியில் உள்ளவர்கள் மற்றும் ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. பாராளுமன்றத்தால் மட்டுமே சட் ட திருத்தம் கொண்டு வர இயலும். நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் பாட திட்டம் வாரியாக மாணவர் சேர்க்கையில் தேவையான மாற்றங்களை மாநில அரசு செய்து கொள்ளளாம். மாநில அரசின் இடஒதுக்கீடு மற்றும் போதுமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லையெனில் மதிப்பெண்களை குறைத்துக்கொள்வது போன்றவை மாநில அரசின் முடிவு. பிற மாநில மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மட்டுமே. மாநில ஒதுக்கீட்டில் எம்.சி.ஐ தலையீடு இல்லை. நாம் மாற்ற வேண்டியது பாடதிட்டம் அல்ல. தேர்வுமுறைதான் மாறவேண்டும். பாடபொருளை புரிந்து சிந்தித்து விடையளிக்கும் வகையில் கேள்வித்தாள் அமையவேண்டும். இதை உணர்ந்தே சுகாதார துறை நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திகொள்ள கல்வித்துறையை கேட்டுக்கொண்டதாக 11.6.2017 நாளைய தினமலர் செய்தி தெரிவிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
DesaNesan -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூன்-201713:49:25 IST Report Abuse
DesaNesan இனிமே ஒண்ணு பண்ணுங்க. ஊருக்கு இளைச்சவனா, மோதி மாதிரி ஒரு ஆள பிடியுங்க. தேர்தல் கமிஷன் .உலககோர்ட்  சுப்ரீம் கோர்ட் ஹைக்கோர்ட் பெஞ்சு கோர்ட் டென்னிஸ் கோர்ட் இப்படி யார் தீர்ப்பு சொன்னாலும் அது மோதியோட தீர்ப்பு கார்பொரேட் தீர்ப்பு இந்துத்துவா தீர்ப்பு சிறுபான்மை விரோத  மதசார்புள்ள தீர்ப்பு மண்ணாங்கட்டி தீர்ப்புன்னு வசவுமழை பொழியுங்க. தோல்வி ஆத்திரம் தீரும். நாக்கிலுள்ள அரிப்படங்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X