'அடக்கமான மருமகள் தேவை': ராப்ரி தேவி| Dinamalar

'அடக்கமான மருமகள் தேவை': ராப்ரி தேவி

Updated : ஜூன் 12, 2017 | Added : ஜூன் 12, 2017 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ராப்ரி தேவி, மருமகள்கள், தியேட்டர்கள், மால்கள், அடக்கம், பண்பாடு, லாலு, அமைச்சர்கள், பாட்னா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்,  பீஹார் மாநில முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ்,தேஜ்பிரதாப் யாதவ்,  daughter-in-law, Robri Devi, Theaters, malls, Modesty, culture, Lalu, ministers, Patna, Rashtriya Janata Dal leader Lalu Prasad Yadav,  Rabri Devi- Former chief minister of Bihar ,Tejaswi Yadav, Tejprathap Yadav,

பாட்னா: '' என் இரண்டு மகன்களுக்கும், அடக்கமான மருமகள் தான் தேவை. தியேட்டர்கள், மால்கள் செல்லும் பெண்கள் தேவை இல்லை,'' என, பீஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.


பீஹார் அரசின் அமைச்சர்கள்

லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ்பிரதாப் யாதவ் ஆகியோர், தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் அமைச்சர்களாக உள்ளனர். இதில் தேஜஸ்வி துணை முதல்வராக உள்ளார். தேஜ் பிரதாப் சுகாதார துறை அமைச்சராக உள்ளார். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர்கள் மீதும், லாலு குடும்பத்தினர் மீதும் பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், லாலுவின், 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அப்போது ராப்ரி தேவி கூறியதாவது:

தியேட்டர்கள் மற்றும் மால்களுக்கு செல்ல விருப்பப்படும் பெண்களை, என் மருமகள்களாக ஏற்க விரும்பவில்லை. அவர்கள் நல்ல பண்பாட்டை கொண்டிருக்க வேண்டும். என் மகள் தேஜ் பிரதாப்புக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். எனவே, வீட்டை கவனித்து கொண்டு, மூத்தவர்களை மதித்து, வெளி வேலைகளையும் திறமையாக பார்த்துக் கொள்ளும் பெண்களே என் மருமகள்களாக வர வேண்டும். குறிப்பாக, அவர்கள் என்னை போல இருக்க வேண்டும்.

இவ்வாறு ராப்ரி தேவி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
12-ஜூன்-201722:05:32 IST Report Abuse
K.Sugavanam ஒருதாயின் உள்ளக்கிடக்கை..நல்ல மருமகள்கள் கிட்ட பிரார்த்தனைகள்..
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-201720:28:33 IST Report Abuse
Mannai Radha Krishnan ஐம்பது-அறுபது வருடம் பின் நோக்கி சென்றால் அம்மாதிரியான பெண்கள் கிடைப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
12-ஜூன்-201720:23:38 IST Report Abuse
Kailash இதில் ஒன்றும் தவறு இல்லை தற்கால பெண்களை பற்றி தெரிந்து வைத்துள்ளார் அமைதியாக இருப்பது போல நடித்து கொண்டு சில நாள் ஆனவுடன் போலீசில் பொய் புகார் கொடுத்து சொத்துக்களை அபகரிக்கும் பெண்கள் வளர்ந்து கொண்டே உள்ளனர். அரசின் பெரிய பொறுப்புகளில் இருந்துள்ளனர். உண்மை புரியாமல் இருக்குமா? உங்கள் பிகாரில் ஒதுங்கிய கிராமங்களில் வெளியுலகம் தெரியாமல் பல பேர் உள்ளனர் அவர்களை தேடி பிடியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X