வங்கதேசத்தில் நிலச்சரிவு, வெள்ளம் : பலி 147 ஆனது

Added : ஜூன் 14, 2017 | கருத்துகள் (1)
Advertisement
வங்கதேசம், வடகிழக்கு மாநிலங்கள், பலி, மழை வெள்ளம், நிலச்சரிவு, டாக்கா, இந்தியா, Bangladesh, Northeastern states, Dead, rain floods, landslide,Dhaka, India,

டாக்கா : வங்கதேசம் மற்றும் அதன் எல்லையை ஒட்டிய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் 3 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் ரங்கமதி பகுதியில் மட்டும் 98 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாலும், மாயமானவர்களில் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் மீட்புப் படையினர் செல்ல முடியாத நிலை உள்ளதால் அங்கு பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். உயிரிழந்துள்ள 147 பேரில் மீட்புப் படையைச் சேர்ந்த 4 பேரும் அடங்குவர். மிசோரம் மற்றும் அசாம் மாநிலங்களில் மழை வெள்ளத்திற்கு 11 பேர் பலியாகி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.AJINS - CHENNAI,இந்தியா
14-ஜூன்-201714:55:40 IST Report Abuse
S.AJINS Please connect/join all the rivers
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X