பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இருவழி திட்டம் முழுமை பெறுவதில் தாமதம்
நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல்

விழுப்புரம் - திண்டுக்கல் இருவழிப் பாதை திட்டத்தில், திருச்சி வரை பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், விவசாய நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் நீடிப்பதால், திட்டம் முழுமை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

 இருவழி பாதை, சிக்கல், விழுப்புரம், திண்டுக்கல்,  ரயில்கள், பயணிகள்,செங்கல்பட்டு, விழுப்புரம், ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் ,ஆர்.வி.எஸ்.எல்., திருச்சி ரயில்வே கோட்டம், ரயில்வே திட்டம், Two way road, problem, Villupuram, Dindigul, Trains, 
Passenger, Chengalpattu, Villupuram, Railway Vikas Nigam Limited, 
RVSL, Trichy railway line, railway project,

தென்மாவட்ட பயணிகள் நலன் கருதி, செங்கல்பட்டு துவங்கி, திண்டுக்கல் வரை, இருவழி ரயில் பாதை அமைப்பதற்கு, ரயில்வே நிர்வாகம் தீர்மானித்தது. முதல் கட்டமாக, செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே புதிய பாதை அமைக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அடுத்ததாக, விழுப்புரம் - திண்டுக்கல் இடையே, 281 கி.மீ.,க்கு இருவழி பாதை அமைக்கும் பணியை, 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.எஸ்.எல்.,) நிர்வாகம், 2011ல் துவங்கியது. திருச்சி ரயில்வே கோட்டத்தில், விழுப்புரம் - திருச்சி இடையே, 178 கி.மீ.,க்கு, ஏழு கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

பணிகள் முடிந்து, மே 23 முதல், புதிய இருவழிப் பாதையில் ரயில்கள் இயக்கப்படு கின்றன. இதன்மூலம், செங்கல்பட்டு - திருச்சி வரை, இருவழி ரயில் பாதை திட்டம் நிறைவடைந்துள்ளது.திருச்சி - திண்டுக்கல் மார்க்கத்தில், மணப்பாறை - தாமரைப்பாடி இடையேயான 48 கி.மீ.,யில்; மணப்பாறை - கல்பட்டிசத்திரம், 26 கி.மீ., பணிகள் நிறை வடைந்து விட்டன.

ஆனால், கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி இடையிலான, 22 கி.மீ., பணிகள், விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான பிரச்னையால், துவங்கிய நிலையிலேயே தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது.


இது குறித்து, வடமதுரை விவசாயிகள் சங்க பிரதிநிதி ஆனந்தகுமார் கூறியதாவது:

கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி இடையே, ரயில் பாதைக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு, விவசாயி களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப் படவில்லை. கடந்த, 2013ல், அப்போதைய காங்., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி, மார்க் கெட் மதிப்பில், நிலத்திற்கு இழப்பீடு தர வேண்டும் எனக் கோரி வருகிறோம்.

இதை, மாநில அரசு தர மறுப்பதால்,இங்கு ரயில்வே பணிகளை துவக்க விடாமல் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளோம். இரண்டு வாரங்களுக்கு முன், திண்டுக்கல், டி.ஆர்.ஓ., வேலு தலைமையில் பேச்சு நடந்தது. முதல்கட்டமாக, பட்டா நிலத்தில் அகற்றப்பட்ட மரங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர்.

இந்த இழப்பீடு, விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் என்பதால், விவசாய நிலங்களுடன் மொத்தமாக இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்மானித்து, பேச்சுவார்த்தையை புறக்கணித்து விட்டோம். கடந்த காங்., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மார்க்கெட் மதிப்பு தொகையை வழங்கி னால் மட்டுமே, ரயில்வே பணியை துவங்க விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான பிரச்னையில் இழுபறி நீட்டிப்பதால், இருவழி ரயில் பாதை திட்டம் முழுமை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திண்டுக் கல் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

நில இழப்பீடு வழங்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு


ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இருவழிப் பாதை பணியை, 2017 மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டோம். விழுப்புரம் - திருச்சி வரை அனைத்து பணி களும் முடிந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம், சென்னையில் இருந்து, திருச்சி வரை, கிராசிங் பிரச்னை இல்லாமல் எதிரெதிர் திசையில் ரயில்கள் இயங்கும்.'மணப்பாறை - கல்பட்டிசத்திரம் வரை பணி முடிந்து, சோதனை ஓட்டமும் முடிந்து விட் டது.

Advertisement

ஆனால், கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி இடையே, 22 கி.மீ.,ல், ஆங் காங்கே விவசாயி கள் பிரச்னையால் பணிகள் துவங்க முடியாத நிலை உள்ளது.

'மணப்பாறை - கல்பட்டிசத்திரம் வரை பணி முடிந்து, சோதனை ஓட்டமும் முடிந்து விட் டது. ஆனால், கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி இடையே, 22 கி.மீ.,ல், ஆங்காங்கே விவசாயி கள் பிரச்னையால் பணிகள் துவங்க முடியாத நிலை உள்ளது.
'மணப்பாறை - கல்பட்டிசத்திரம் வரை பணி முடிந்து, சோதனை ஓட்டமும் முடிந்து விட் டது. ஆனால், கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி இடையே, 22 கி.மீ.,ல், ஆங் காங்கே விவசாயி கள் பிரச்னையால் பணிகள் துவங்க முடியாத நிலை உள்ளது. 'விவசாயி களுக்கு இழப்பீடு வழங்க, 6 கோடி ரூபாய் டிபாசிட் செய்து விட்டோம். இனி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பணிகள் முடியும்' என்றார்.

அறிக்கை தர உத்தரவு


திண்டுக்கல், டி.ஆர்.ஓ., வேலு கூறுகையில், ''விவசாயிகள், 2013ல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, விவசாய நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை கேட்கின்றனர். ஆனால், தொழில்துறை சட்டத்தின்படியே இழப்பீடு தர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
''இதுதொடர்பாக, திண்டுக்கல் மற்றும் பழநி சப்-கலெக்டர்கள் மூலம் விசாரணை நடத்தி, அறிக்கை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள் ளது. நில எடுப்பு பணிகளை துரிதப்படுத்தி, இருவழி ரயில் பாதை திட்டம் விரைந்து முடிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Nath - PCMC,இந்தியா
16-ஜூன்-201722:00:43 IST Report Abuse

V Nathரயில்வே திட்டங்களை முடக்குவது, தாமதப்படுத்துவது எல்லாம் ஆம்னி பஸ் காரர்களும் ரயில்வே அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து செய்யும் மோசடி. ரயில் சேவையை மேம்படுத்தினால் மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புவார்கள். அவர்கள் வருமான கொள்ளையில் மண்விழுமே?

Rate this:
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
16-ஜூன்-201721:47:05 IST Report Abuse

திண்டுக்கல் சரவணன்மத்திய அரசு சட்டப்படி கிராமப்புற பகுதியில் அந்த இடத்தின் மதிப்பில் ஆறு மடங்கு விலை கொடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு கொடுப்பது பதிவுத்துறை கொடுக்கும் அதே வழிகாட்டு விலை.. அரசாங்கம் கொடுக்கிற இழப்பீட்டை வச்சு, அந்த இடத்தை விட்டு தூரமாக கூட இடம் வாங்க முடியாது. இரண்டு மடங்கு விலை கொடுத்தால் கூட நிலம் கொடுத்துவிடுவர். ஆனால் மாநில அரசு செய்வதில்லை. நடுவண் அரசு சட்டம் போட்டதோடு ஒதுங்கிகொண்டது. நீங்கல்லாம் சொகுசா ரயில்ல போக இடம் கொடுத்த விவசாயி என்ன பண்ணுவார்?

Rate this:
தமிழன் - சென்னை,இந்தியா
16-ஜூன்-201721:31:02 IST Report Abuse

தமிழன்நில இழப்பீடு மத்திய கீழ் வராதா? தமிழக அரசின் பொறுப்பா?

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X