இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத்| Dinamalar

இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத்

Updated : ஜூன் 17, 2017 | Added : ஜூன் 17, 2017 | கருத்துகள் (137)
யோகி ஆதித்யநாத், தாஜ்மஹால், ராமாயணம், மோடி, பகவத்கீதை, பாட்னா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்,  பீகார்,   இந்தியா, பிரதமர், ஜனாதிபதி, Yogi Adityanath, Taj Mahal, Ramayana, Modi, Bhagwad Gita, Patna, UP Chief Minister Yogi Adityanath, 
Bihar, India, Prime Minister, President

பாட்னா : தாஜ்மகாலுக்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற பா.ஜ., சாதனை விளக்க கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உலக அதிசயங்கள் பட்டியலில் 7-வது இடத்திற்குள் உள்ள தாஜ்மஹால், இந்தியாவின் அடையாளமா? வெளிநாட்டுப் பயணத்தின் போது இந்தியாவின் முந்தைய பிரதமர்கள், ஜனாதிபதிகள் தாஜ்மஹால், அல்லது மினார் கலை பொருட்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வந்துள்ளனர்.
ஆனால் இவற்றுக்கும் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கும் தொடர்பில்லை. ஆனால் தற்போது பிரதமர் மோடி, வெளிநாட்டு தலைவர்களுக்கு கீதை மற்றும் ராமாயணம் ஆகிய புத்தகங்களை பரிசாக வழங்கி வருகிறார். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X