முதல்வர் கையில் மின்னும் கயிறுகள்: மாந்திரிகர்கள் சொன்னது நடந்ததா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் கையில் மின்னும் கயிறுகள்: மாந்திரிகர்கள் சொன்னது நடந்ததா?

Added : ஜூன் 17, 2017 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எடப்பாடி பழனிசாமி, கயிறுகள், மாந்திரிகர்கள், பூஜை, சென்னை, முதல்வர், கேரளா,  பகவதி அம்மன் கோவில், Edappadi Palaniasamy, ropes, Pooja, Chennai, Chief Minister, Kerala, Bhagavathi Amman Temple, witchery

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கையில் இரண்டு கயிறுகளை மட்டும் ஏற்கனவே கட்டியிருந்தார். தற்போது, கயிறு எண்ணிக்கை ஐந்தாக மாறி இருக்கிறது. சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற கயிறுகள் கையில் மின்னுகின்றன. இதற்குக் காரணம், கேரள மாந்திரிகர்கள் என கூறப்படுகிறது.
இது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி அமைச்சராக இருந்த போது, மாதத்தில் ஒரு முறை கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அப்படி செல்லும் போது, கேரளாவில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கும் அவர் சென்று திரும்புவார். அப்போது, அங்கிருக்கும் மாந்திரிகர்கள் சிலர் சொல்லும் தெய்வ காரியங்களை, அவர் அங்கிருந்தபடியே செய்து விட்டுத் திரும்புவார். ரகசிய யாகங்கள் பல நடத்தப்பட்டுள்ளன.


தமிழகத்தில் பூஜைகள்:

முதல்வர் ஆன பின், அவரால், கேரளாவிற்கு செல்ல முடியவில்லை. ஆனாலும், மாந்திரிகர்கள் சொல்லும் காரியங்களை, தமிழகத்தில் வைத்து அவர் செய்து முடிக்கிறார். முதல்வர் ஆனதும், நல உதவி வழங்கும் நிகழ்ச்சிகளுக்காக சேலத்துக்கு வந்த முதல்வர், மூன்று நாட்கள் வரை தொடர்ச்சியாக சேலம் பகுதியிலேயே இருந்தார். மூன்று நாட்கள் இரவிலும் வீட்டுக்குச் சென்று விட்டார். அங்கு ஏற்கனவே வரவழைக்கப்பட்டிருந்த மாந்திரிகர்கள், சிறப்பு யாகம் நடத்தி, மந்திரித்த கயிறுகளை முதல்வருக்கு கொடுத்து, கட்டிக் கொள்ளச் சொன்னார்கள்.
அப்படி கொடுக்கப்பட்ட ஐந்து கயிறுகள்தான், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைகளில் தற்போது மின்னுகின்றன. அந்த கயிறுகளை கட்டியிருக்கும்போது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்; எதிரிகள் பலவீனமாவார்கள்; ஆட்சி அதிகாரம் நீடிக்கும்; சொந்த கட்சியினர் சுமூகமாக இருப்பர் என்பது போன்ற பல விஷயங்களை, முதல்வர் எடப்பாடிக்கு சொல்லித்தான், மாந்திரிகர்கள் கொடுத்துள்ளனர்.
அவர்கள் விருப்பப்படி, முதல்வர் கைகளில் கயிறுகள் மின்னுகின்றன. ஆனால், சொன்னபடியெல்லாம் நடந்திருக்கிறதா என்பதை பழனிச்சாமிதான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
17-ஜூன்-201717:42:20 IST Report Abuse
Panneerselvam Chinnasamy மந்திரவாதிகள் நம்பிக்கை இழந்தவர்களின் கடைசி புகலிடம்....மந்திரம் ஜோசியம் இவற்றை நம்பாமல் கடமையை ஆற்றுங்கள்... இந்தவிதத்தில் கிருஷ்ணர் அருளிய பகவத் கீதையை நம்புங்கள்...மந்திரவாதிகள் பெரும்பாலும் தந்திரவாதிகளே... அதில் உண்மை ஏதும் இல்லை ... நீங்கள் பெரியார் கொள்கை அண்ணா கொடியுடன் மந்திரவாதிகளிடம் போவது கேவலம்....
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
17-ஜூன்-201716:04:04 IST Report Abuse
Amirthalingam Sinniah நிறம் நிறமா . நூல் காட்டுகிறார் என்றால் , பஞ்சவர்ண கிளிச்சாத்திரம் சொல்லுகிறாரோ ? இக்கரைக்கு அக்கரை பச்சை. தமிழ்நாட்டில் உள்ள கடவுள்கள் இவருடை . அடாவடித்தனத்தை அறிந்துள்ளதால் தூர இருக்கும் கடவுளிடம் இருக்கிறார்.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
17-ஜூன்-201716:56:25 IST Report Abuse
K.Sugavanamசாய்பாபா,மற்றும் ஆஞ்சநேயர் கோவிலிலேயே இரண்டுவித கயிறுகிடைக்கும்..இதைப்போய் பெரிதுபடுத்தும் தினமலர்..பிஜேபி ஆட்கள் கிலோ கணக்கில் கயிறு கட்டி உள்ள படங்களும் பார்த்துள்ளோம்..அதையெல்லாம் மலர் வெளியிடாது..ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் கலையில் தினமலர் இப்போது பாண்டித்யம் பெற்றுவிட்டது..அவர் இடுப்பில் ஏதாவது கயிறு கட்டி இருக்க போறாரு..அதையும் கண்டுபிடிங்க நிரூபரே.....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஜூன்-201715:46:27 IST Report Abuse
இந்தியன் kumar கயிறு கட்டி கொண்டு தவறாக ஊழல் ஆட்சி செய்தால் பழனி ஆண்டவர் தண்டிப்பார் , முதல்வர் பழனிசாமி அய்யாவுக்கு புரிந்தால் சரி.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
17-ஜூன்-201716:57:16 IST Report Abuse
K.Sugavanamபாசக்கயிறு அப்பிடீன்னு சொல்றீங்க......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X