இந்தியா பரிதாப தோல்வி; ரசிகர்கள் சோகம் | இந்தியா பரிதாப தோல்வி; ரசிகர்கள் சோகம்| Dinamalar

இந்தியா பரிதாப தோல்வி; ரசிகர்கள் சோகம்

Updated : ஜூன் 19, 2017 | Added : ஜூன் 18, 2017 | கருத்துகள் (110)
Advertisement
India,இந்தியா

ஓவல் : சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறோம் என்ற நினைப்பே இல்லாமல் 'கத்துக்குட்டி' அணி போல மட்டமாக ஆடினர். கோஹ்லி, தோனி, யுவராஜ், ரோகித் சர்மா என அனைவருமே சொதப்பினர். பவுலர்களும் ஏமாற்ற, இந்தியாவின் கோப்பை கனவு தகர்ந்தது. ஜமான் சதம் கைகொடுக்க, 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

இங்கிலாந்தில் எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர்(மினி உலக கோப்பை) நடந்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி 'பவுலிங்' தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ருமான் ரயீசிற்கு பதில் முகமது ஆமிர் மீண்டும் இடம் பெற்றார்.


'சூப்பர்' துவக்கம் :

பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான், அசார் அலி சேர்ந்து கலக்கல் துவக்கம் தந்தனர். 4 ரன்னில் கண்டம் தப்பிய ஜமான், அதற்கு பிறகு விஸ்வரூபம் எடுத்தார். மறுபக்கம் அசாரும் பட்டையை கிளப்ப, பாகிஸ்தான் அணி 9.2 ஓவரில் 50 ரன்களை கடந்தது.ஜடேஜா பந்தில் ஒரு ரன் எடுத்த அசார் அலி அரைசதம் எட்டினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜமானும் அரைசதம் கடந்தார். இவர்கள், இந்திய பந்துவீச்சை சிதறடிக்க, 'ஸ்கோர்' வேகமாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்த நிலையில் அசார் அலி(59) ஒருவழியாக ரன் அவுட்டாக, துாங்கி வழிந்த இந்திய ரசிகர்கள் லேசாக நிமிர்ந்து உட்கார்ந்தனர்.


ஜமான் சதம்:

இதற்கு பின் ஜமான் ரன் மழை பொழிந்தார். ஜடேஜா, அஷ்வின் ஓவர்களில் பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்டார். அஷ்வின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி முதல் சதம் எட்டினார். பாண்ட்யா பந்தை துாக்கி அடித்த ஜமான்(114), ஜடேஜாவின் கலக்கல் 'கேட்ச்சில்' காலியாக, நிம்மதி பிறந்தது. அடுத்து பாபர் அஜாம் ரன் வேட்டையை தொடர்ந்தார். புவனேஷ்வர் 'வேகத்தில்' மாலிக்(12) அவுட்டானார். ஜாதவ் 'சுழலில்' பாபர்(46) சிக்கினார்.

கடைசி கட்டத்தில் ஹபீஸ், இமாத் வாசிம் சேர்ந்து விரைவாக ரன் சேர்த்தனர். நமது பவுலர்கள் தொடர்ந்து சொதப்ப, ரன் வேகத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஜாதவ் ஓவரில் ஹபீஸ், வாசிம் தலா ஒரு சிக்சர் அடித்தனர். புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரில் ஹபீஸ் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தது. ஹபீஸ்(57), இமாத் வாசிம்(25) அவுட்டாகாமல் இருந்தனர்.


ஆமிர் மிரட்டல்:

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு முகமது ஆமிர் 'வேட்டு' வைத்தார். சூதாட்ட சர்ச்சை, முதுகு பிடிப்பு போன்ற பிரச்னை களை கடந்த இவர் 'டாப்-ஆர்டரை' அப்படியே தகர்த்தார். இவர் 'வேகத்தில்' மிரட்ட, ரன் கணக்கை துவக்கும் முன், இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இவரது முதல் ஓவரில் ரோகித் சர்மா(0) அவுட்டானார். அடுத்த ஓவரில் இன்னொரு அதிர்ச்சி கொடுத்தார். மூன்றாவது பந்தில் கோஹ்லி கொடுத்த 'கேட்ச்சை' முதல் 'ஸ்லிப்பில்' நின்ற அசார் அலி கோட்டைவிட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கோஹ்லி வீணாக்கினார்.

அடுத்த பந்து, இவரது பேட்டில் பட்டு 'எட்ஜ்' ஆக 'பாய்ன்ட்' திசையில் நின்ற ஷதாப் கான் கச்சிதமாக பிடிக்க... ஆமிர் ஆர்ப்பரிக்க..கோஹ்லி(5) பெவிலியன் திரும்பினார். தவானும்(21), ஆமிரிடம் வீழ்ந்தார்.அடுத்து வந்தவர்களும் பொறுப்பற்ற 'ஷாட்' அடித்து வெறுப்பேற்றினர். ஷதாப் கான் வலையில் 'ரிவியு' முறையில் யுவராஜ்(22) சிக்கினார். ஹசன் அலி பந்தை வீணாக துாக்கி அடித்த தோனியும்(4) ஒதுங்கிக் கொள்ள, இந்தியா 13.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்து தத்தளித்தது. ஜாதவ்(9) ஏமாற்றினார்.


பாண்ட்யா ஆறுதல்:

கடைசி கட்டத்தில் ஷதாப் கான் ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்த ஹர்திக் பாண்ட்யா, 32 பந்தில் அரைசதம் எட்டி ஆறுதல் அளித்தார். ஜமான் ஓவரிலும் இரண்டு சிக்சர் அடித்த இவர், 76 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய அணியின் கதை முடிந்தது. வீட்டிற்கு திரும்பும் அவசரத்தில் இருந்த ஜடேஜா(15) விரைவாக கிளம்பினார். அஷ்வின்(1), பும்ரா(1) நடையை கட்ட, இந்திய அணி 30.3 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமிர், ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.


அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி உணரவில்லை.' டாஸ்' வென்ற இவர், தவறாக 'பவுலிங்' தேர்வு செய்தார். இதனை பயன் படுத்திய பாண்டிங் சதம் அடிக்க, ஆஸ்திரேலியா 50 ஓவரில் 359/2 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, கோப்பையை கோட்டைவிட்டது. இதே போல நேற்று 'டாஸ்' வென்ற கோஹ்லி யும் தவறாக பவுலிங் தேர்வு செய்தார். இம்முறை ஜமான் சதம் அடிக்க, இந்தியாவின் கோப்பை கனவு தகர்ந்தது.


'நோ-பால்' பும்ரா:

இந்திய அணிக்கு நேற்று 'வில்லனாக' மாறினார் பும்ரா. இவர், போட்டியின் 4வது ஓவரில் வீசிய பந்தை பகர் ஜமான் அடிக்க, அதை தோனி பிடிக்க, அவுட்டானார். ஆனால், 'ரீப்ளே'யில்' நோ-பால்' என தெரிய வர இந்திய ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கின. ஜமான் மீண்டும் களத்திற்கு திரும்பினார். அப்போது 4 ரன் எடுத்திருந்த இவர், கடைசியில் சதம் அடித்து இந்திய அணிக்கு தொல்லை தந்தார்.


பாடம் கற்றோம்:

இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில்,''கோப்பை வென்ற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள். எந்த அணியையும் வீழ்த்த முடியும் என நிரூபித்து காட்டியுள்ளனர். கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். இத்தொடரில் எங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இதனால், பைனலில் வீழ்ந்தாலும், முகத்தில் சிரிப்புடன் உள்ளேன். இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்,'' என்றார்.


மூன்றாவது முறை:

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக மூன்றாவது தோல்வியை பெற்றது. இதுவரை மோதிய 5 போட்டிகளில் பாகிஸ்தான் 3 (2004, 2009, 2017ல் பைனல்), இந்தியா 2ல் (2013, 2017ல் லீக் போட்டி) வென்றன.


ரூ. 14 கோடி பரிசு:

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு, கோப்பையுடன் ரூ. 14 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. தோல்வி அடைந்த இந்தியாவுக்கு ரூ. 7 கோடி பரிசு அளிக்கப்பட்டது.


இது சரியா ஜடேஜா:

27வது ஓவரை ஹசன் அலி வீசினார். இதன் 3வது பந்தை அருகில் தட்டி விட்டு, ஒரு ரன்னுக்காக ஓடினார். பின், திடீரென நின்றார். அதற்குள், பாண்ட்யா ஓடி வர, இரு பேட்ஸ்மேன்களும் ஒரே முனையில் நின்றனர்.பந்தை பெற்ற ஹசன், 'பெயில்சை' தகர்க்க, பாண்ட்யா (76) பரிதாபமாக ரன்-அவுட்டானார். பவுண்டரி, சிக்சராக விளாசிய பாண்ட்யாவுக்கு வாய்ப்பு அளி்த்து, ஜடேஜா 'பெவிலியன்' திரும்பி இருக்கலாம். அப்படி செய்திருந்தால், இந்தியாவின் தோல்வி வித்தியாசமும் சற்று குறைந்திருக்கும்.

வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna - cbe,இந்தியா
19-ஜூன்-201711:42:57 IST Report Abuse
krishna ரசிகர்களை ஏமாற்றி பிழைக்கும் இது போன்ற விளையாட்டுகளை, ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
19-ஜூன்-201711:37:04 IST Report Abuse
K.Sugavanam கோச்சு ஹெட்மாஸ்டர் போல செயல்படுகிறார் என சொல்லி கோச்சுக்கு மதிப்பு கொடுக்காத 11 பன்னாடைகள் வண்டவாளம் தண்டவாளம் ஏறி இருக்கிறது..இது இந்திய அணியே இல்லை,அப்பிச்சி என்னும் பிரைவேட் கிளப்பின் அணி,,எனவே இந்தியா தோல்வி என்பதே தவறு .. இந்த பன்னாடைகள் இந்திய அணியும் கிடையாது,இந்த டீமுக்கு இந்திய அரசின் அங்கீகாரமும் கிடையாது..
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
19-ஜூன்-201711:33:01 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM பாக்கி அணி தம்மாத்துண்டு அணி. இதனையே வெல்ல முடியாதது கேவலம். இந்திய தற்போதைய அணியில், திறமையானவர்களுக்கு பிரதிநித்துவம் இல்லை. கும்பிளே -அஸ்வின் ஒரு அணி.்கோலி - யுவி ஒரு அணி. டோனி - ஜடேஜா ஒரு அணி. ரோகித் - பாண்டியா ஒரு அணி. இப்படி அதிமுக மாதிரி பல அணிகள் உள்ளன. கிரிக்கட் ஒரு சோம்பேறி விளையாட்டு. இதற்க்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை. ஒலிம்பிக்கில் ஒரு தங்க பதக்கம் வாங்க கூட திராணியற்ற இந்தியா, கிரிக்கெட்டை மட்டும் வென்று கிழிக்காமல் இருப்பதே உத்தமம். அன்றய போட்டியில் பாக்கி தோற்றவுடன் TV யை போட்டு உடைத்தார்கள். அதேபோல நேற்றும் வடஇந்திய மக்கள் நேற்று செய்துள்ளனர். பாக்கிகளும் வடஇந்தியர்களும் ஒரே மைண்ட் செட் உள்ளவர்கள், புத்தியில்லாதவர்கள் என்று இது பறைசாற்றுகிறது. ஆனால் தென்னிந்தியாவில் இதுபோன்ற சம்பவம் இல்லை. கிரிக்கெட்டை விட்டுவிட்டு, மற்ற விளையாட்டுகளில் இம்தியாவின் கவனம் திரும்பினால் தான், கோலி போன்றவர்களின் திமிர் மட்டும் அல்ல, கிரிக்கெட் என்ற மட்டமான மட்டை விளையாட்டினால் நமது இளைஞர்களின் கவனம் திசை மாறி உருப்படாமல் போவது குறையும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X