ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு கொலை மிரட்டல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு கொலை மிரட்டல்

Added : ஜூன் 19, 2017 | கருத்துகள் (10)
Advertisement
ம.பி., மணல் குவாரி, பெண் ஐ.ஏ.எஸ்., கொலை மிரட்டல், போபால், சோனியா மீனா, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பந்திலா கைது, கலெக்டர் அபிேஷக் சிங், Woman IAS, Murder Bullet, Bhopal, Sonia Meena, 
Sand quarry, Chief Minister Shivraj Singh Chouhan, Pandilla arrested, Collector Abhishek Singh, Madhya Pradesh

போபால்: ம.பி., மாநிலத்தில் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு மணல் குவாரி மாபியாவிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


மணல் குவாரி மீது நடவடிக்கை

ம.பி., மாநிலத்தில், பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வருபவர் சோனியா மீனா. இவர், 2013ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பேட்ஜை சேர்ந்தவர். இவர், ம.பி., மாநிலம்,சத்தார்பூர் மாவட்டத்தில் சப் கலெக்டராக பணியாற்றிய போது ராஜ்நகர் என்ற இடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மணல் குவாரி மீது நடவடிக்கை எடுத்தார். முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர் சோனியா மீனா, உமாரியா மாவட்டத்திற்கு கூடுதல் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். இந்த சூழ்நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தலைமை செயலாளருக்கு சோனியா மீனா கடிதம் எழுதியுள்ளார். அதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொலை மிரட்டல்

மணல் குவாரி மீது பிப்., 6ம் தேதி நடவடிக்கை எடுத்த போது, என் மீதும், என் பாதுகாவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அர்ஜுன் சிங் பந்திலா என்பவன் துப்பாக்கி முனையில் எங்களை மிரட்டினான். இச்சம்பத்திற்கு பிறகு பந்திலா கைது செய்யப்பட்டு சாதார்பூர் சிறையில் அடைக்கப்பட்டான். எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு சாதாபூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

நாங்கள் சாட்சியாக ஆஜராக வேண்டும். அப்போது எங்கள் மீது தாக்குதல் நடத்த, பந்திலா திட்டமிட்டுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.


இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சோனியா மீனாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக உமாரியா மாவட்ட கலெக்டர் அபிேஷக் சிங் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Susainathan -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201717:22:10 IST Report Abuse
Susainathan dont spoiling your life just resign the job because gents getting only for murder but girls getting both its not good society never support anyone so its very difficult
Rate this:
Share this comment
Mohana - Dublin,அயர்லாந்து
19-ஜூன்-201718:37:08 IST Report Abuse
Mohanaஎவ்வெளவு கீழ் தனமான சிந்தனை உங்களுடையது. I feel sorry for the ladies in your family. People like you are the disgrace to the community....
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
19-ஜூன்-201716:03:33 IST Report Abuse
Syed Syed அசிங்கம் கேவலம். டிஜிட்டல் இந்தியாவின் செயல்கள் . நாட்டின் தேசத்துரோகி விஜய் மல்லையாவுக்கு குடுக்கும் பாதுகாப்பு. நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் செயல் படும் அதிகாரிகளுக்கு இதுதான் அன்பளிப்பு டிஜிட்டல் இந்தியா.. GOD BLESS YOU MADEM. GOD PROTECT YOU AND SAVE YOU . ஆமீன்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஜூன்-201715:55:04 IST Report Abuse
Endrum Indian செய்தியை படித்தால் தெளிவாகத்தெரிகின்றது. "முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை". அப்படின்னா நம்ம ஊருலே எந்த மந்திரியும்/அரசியல்வாதியும் இந்த மாதிரி உத்தரவு போடுவதில்லையா? அப்படித்தான் ஊர்ஜிதம் ஆகின்றது. இளங்கன்று பயமறியாது. சின்னப்பொண்ணு தானே அதனால் வருவது வரட்டும் என்று நடவடிக்கை. ஆசீர்வாதங்கள். இதை முதல் முயற்சியாக நினைத்து இதை போலவே இனிமேல் தொடரவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X