அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூவத்தூர் பேரம் சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை: முதல்வர் பதில் மனு

Updated : ஜூன் 22, 2017 | Added : ஜூன் 22, 2017 | கருத்துகள் (40)
Share
Advertisement
சி.பி.ஐ. விசாரணை, முதல்வர் , கூவத்தூர், பேரம் ,சென்னை,  முதல்வர் பழனிசாமி,  எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், சென்னை ஐகோர்ட்,  சிபிஐ, CBI Investigation, Chief Minister, Koowatur, Bargain, Chennai, Chief Minister Palanisami,Opposition leader Stalin, Chennai High Court, CPI,

சென்னை: கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்களிடம் பேசப்பட்டது தொடர்பாக பேரம் சிபிஐ., விசாரணை தேவையில்லை என முதல்வர் பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெ., மறைவுக்கு பின்னர் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் முன்னர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டனர்.
இந்நேரத்தில் எம்.எல்.ஏ.,க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் ஒரு வீடியோவும் வெளியானது. இது தொடர்பாக சி.பி.ஐ..,விசாரணை நடத்தக்கோரி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் முதல்வர் பழனிசாமி சார்பில் தாக்கலான பதில் மனுவில் நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரம் சபாநாயகர் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதில் சிபிஐ., தலையிட முடியாது. எனவே சிபிஐ., விசாரணை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதல்வர் மனு தொடர்பாக பதில் அளிக்க திமுக சார்பில்கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandrasekar - pune,இந்தியா
23-ஜூன்-201705:25:15 IST Report Abuse
chandrasekar அவருக்கு வேறு வழி இல்லையே .
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
22-ஜூன்-201721:11:56 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அப்படித்தான் அவர் நிலையிலுள்ள எவரும் சொல்வார்கள் .
Rate this:
Cancel
Paramuk - kumari,இந்தியா
22-ஜூன்-201720:20:57 IST Report Abuse
Paramuk இது சுத்த போக்கிரித்தனம். தமிழ் மக்களின் மறதிக்குணத்தை இவர்கள் சுயலாபமாக உபயோகித்துக்கொள்கிறார்கள் தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு தேர்வு நேரம் வரும் போதும் ஞாபக மருந்து கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X