எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உயரும்!
ஜி.எஸ்.டியால் நாட்டின்
பொருளாதாரம் உயரும்: நிர்மலா சீதாராமன்

ஜூலை முதல் தேதியில் இருந்து, நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., அமலாகிறது. இது குறித்து பொதுமக்கள், தொழில்துறையினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவை, திருப்பூர் தொழில் துறை யினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி யில் பங்கேற்றார்.'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

ஜி.எஸ்.டி., அமலாகும்போது, அரசின் வருவாய் பெருகும்; பொருட்களின் விலை குறையுமா?அனைத்து வகை வரியினங்களும் ஜி.எஸ்.டி.,க் குள் வந்து விடும். இதுவரை வரி செலுத்து வோர், தொடர்ந்து செலுத்துவர். செலுத்தாதோர் புதிதாக செலுத்த துவங்குவர். பல இடங்களில் வரி செலுத்தியோர், இனி ஒரே இடத்தில் வரி செலுத்துவர். மறைமுக வரியின் தாக்கம் காரணமாக, ஒரு பொருளின் விலை, மூன்றில் இரு பங்கு அதிகமாக வந்து கொண்டிருந்தது. இனி அது குறையும்.

ஒவ்வொரு துறையிலும், இதுவரை செலுத்தப் பட்டு வந்ததைவிட, குறைந்தபட்ச வரியே விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இதுவரை வரி செலுத்தாதோரும் கூட, பூஜ்ய வரி அல்லது குறைந்தபட்ச வரி வட்டத்துக்குள் வந்து விடுவர். அதனால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிடும். வர்த்தகர் களின் வரிச்சுமை குறையும். அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும்.

*

வரி செலுத்துவோர் எண்ணிக்கை, இனி அதிகரிக்கும் என்று எப்படி கூறுகிறீர்கள்?இதுவரை வாட், கலால் சேர்ந்து 13, 14 சதவீதம் செலுத்திக் கொண்டிருந்தவர்கள், 12 சதவீதத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். ஆகவே, இதுவரை வரி செலுத்தாதவர்களும், இனி செலுத்த துவங்குவர். இதுவரை, 100 பேர் வரி செலுத்திக் கொண்டிருந்தால், அது ஆயிரம் பேராக உயரும். வரி செலுத்துபவர்கள் தொடர்ந்து செலுத்துவார்கள். வரி செலுத்தாமல் எப்படி தப்பிப்பது என்ற நிலை மாறி, கொஞ்சம் வரிதானே, செலுத்தினால் போச்சு என்ற நிலைக்கு வந்து விடுவார்கள்.

*

கொள்கை முடிவுகள் மேற்கொள்ள,ஜி.எஸ்.டி., உதவுமா; எப்படி?நிச்சயமாக உதவும். இதுவரை, 'டேட்டா' இல்லை; இனி 'டேட்டா கேப்ச்சரிங்' நடக்கப் போகிறது. இதனால் பணப்புழக்கம் தெளிவாக தெரிந்து விடும். யார், யாருக்கு என்ன பொருளை, எவ்வளவு விலைக்கு கொடுத்தார் கள், எங்கிருந்து வாங்கினார்கள்; யார் விற்றார் கள் என. அனைத்து தகவலும் கிடைத்து விடும். இதைதான் 'பிக் டேட்டா' என்கிறோம்.

இதை வைத்துதான் பெரிய கொள்கைகளையும், திட்டங்களையும் துல்லியமாகவும், சிறப்பாக வும் மேற்கொள்ள முடியும். கொள்கை திட்ட மிடல் எளிதாக இருக்கும். இதனால்தான், ஜி.எஸ்.டி., அமல்படுத்திய நாடுகளில் ஏற்றுமதி வருவாய் அதிகரித்தது. வரி செலுத்தாமல் ஏய்ப் போர், இனி செலுத்த துவங்குவர். இதனால் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புள்ளது.

*

ஜி.எஸ்.டி.,யால், நமது நாட்டின் வர்த்தக வளர்ச்சி எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?வர்த்தக வளர்ச்சி குறித்து எந்த ஒரு முடிவுக் கும் வரவில்லை. மூன்று மாதம் வரை உள் நாட்டு மொத்த உற்பத்தி, 1.5 சதவீதம் வரையா வது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறினர். ஆனால், அமைச்சகம் வாயிலாக, இதுவரை கணக்கிடவில்லை.

*ஜி.எஸ்.டி.,யின் கீழ், செயற்கை நுாலிழைக்கு விதிக்கப்பட்டுள்ள, 18 சதவீத வரியும், துணிக்கு 5 சதவீத வரியும் விதித்திருப்பதால், உள்ளீட்டு வரி பெற முடியாத நிலை உள்ளது; செயற்கை நுாலுக்கான வரி, 12 சதவீதமாக குறைக்கப்படுமா?

நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை நுாலிழை, இறக்குமதி நுாலிழை அளவு குறித்தெல்லாம் ஜி.எஸ்.டி., கவுன்சில் ஆராய்ந்துள்ளது. தொழில் துறையினரின் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித்தரும். கவுன்சிலிடம் இவ்விவரங்களை தெரிவிக்க, வர்த்தகத்துறை செயலரிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*

கோவையில் தயாரிக்கப்படும் பம்ப்செட், கிரைண்டர், கம்ப்ரஷர் ஆகியவற்றுக்கு, அதிக ஜி.எஸ். டி.,விதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் கூறுகின்றனர். இது, குறைக்கப்படுமா?எந்த துறைக்கும் வரி அதிகரிக்கவில்லை. இப்போது, 13 ஆக இருந்தால், 12 ஆக நிர்ணயிக் கப்பட்டுள்ளது; 7 ஆக இருந்தால், 5 ஆக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அதிக வரி நிர்ணயிக்கப் பட்டுள்ளது உண்மையாக இருந்தால், செயலா ள ரிடம் கூறி நிச்சயம் தீர்வு அளிக்கப்படும்.

*

ஏற்கனவே பொருட்கள் வாங்கி இருப்பு வைத்துள்ளவர்களின் நிலை?ஒரு பெரிய ஆர்டருக்கு, ஏற்கனவே வாங்கி ஸ்டாக் வைத்துள்ள, மூலப்பொருளுக்கு, 'இன்புட் கிரெடிட்' கிடைக்குமா என்ற சந்தேக மெல்லாம் வருகிறது. இது போன்று ஏற்கனவே செலுத்திய வரிக்கு, தீர்வு அளிக்கப்படும்.

* ஆடை உற்பத்தி சார்ந்த, ஜாப் ஒர்க் சேவைக்கான வரி, நுால் முதல் துணி வரை, ஐந்து சதவீத மாக குறைக்கப்பட்டு உள்ளது; ஆடை தயாரிப்புக்குப் பின் பிரிண்டிங், எம்ப்ராய்டரி, போன்ற மதிப்பூட்டல் துறைகளுக் கான வரி, 18 சதவீதமாக உள்ளது. இந்த முரண்பாடு களையப்படுமா?

கடந்த ஆண்டு நவம்பர் முதலே, துறை

வாரியாக வரி விதிப்பு விவரங்கள் சேகரிக்கப் பட்டுள்ளன; இந்நிலையில் வரி விதிப்பில் முரண்பாடுகள் என்பது வியப்பாக உள்ளது. தொழில் துறையினர், தங்கள் தொழிலின் நிலையை ஜவுளித்துறை அமைச்சகத்துக்கும், கவுன்சிலுக்கும் கொண்டு சென்று உணர்த்தினால், நிச்சயம் வரி குறைக்கப்படும்.

l16 வகையான ஜவுளிப்பொருட்களை வரி விலக்கு டன் நமது நாட்டில் இறக்குமதி செய்ய வங்கதேசத் துக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதை பயன் படுத்தி, வங்கதேசம் வழியாக சீன துணி, ஆடைகள் நமது நாட்டுக்குள் நுழைவதாக கூறப்படுகிறதே...?

பின்தங்கிய நாடுகளுக்கு, வளரும் நாடுகள் சலுகை கள் அளிக்கின்றன. எந்த ஒரு நாடும், அண்டை நாட்டு பொருளை பெற்று, அதன்மீது மதிப்பு கூட்டு சேவை அளிக்க வேண்டும்; குறிப்பிட்ட பொருள் அந்த நாட்டில்தான் தயாரிக்கப்பட்டது என்கிற சான்றிதழ் அளிக்க வேண்டும். சீன ஆடைகள், வங்கதேசம் வழியாக நமது நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுவதற்கான ஆதாரங்களை, தொழில் துறையினர் வழங்கினால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

* உலக வர்த்தக மைய விதிப்படி, ஒரு நாட்டின் தனிநபர் வருவாய் ஆயிரம் டாலரை மிஞ்சும்போது அல்லது குறிப்பிட்ட பொருளின் ஏற்றுமதி பங்களிப்பு, 3.25 சதவீதத்தை கடக்கும்போது, அந்த நாட்டு அரசு,ஏற்றுமதியாளர்களுக்கு எத்தகைய சலுகையும் வழங்க முடியாது. இதனால் நமது ஆடை ஏற்றுமதி துறையினருக்கு, வழங்கப்பட்டு வரும் சலுகை விரைவில் நிறுத்தப்படுமா?

உலக வர்த்தக மையம், ஏற்றுமதிக்கு வழங்கும் சலுகைகளை நிறுத்த சொன்னாலும் கூட, ஏற்றுமதி யாளர்களுக்கு நம் அரசு தொடர்ந்து சலுகைகள் வழங்கும். ஏற்றுமதிக்குதானே வழங்க கூடாது; உற்பத்திக்கு சலுகை வழங்கலாம் அல்லவா? அது பற்றி ஆலோசித்து வருகிறோம். நிச்சயமாக ஏதேனும் ஒருவகையில் சலுகைகள் வழங்கப்படும்.

*

உள்ளீட்டு வரி வழங்கப்படுவ தால், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் டூட்டி டிராபேக் குறைக்கப்படுமா?ஜி.எஸ்.டி.,யால் சில துறைகளுக்கு, வரி சலுகைகள் வழங்க முடியாதபட்சத்தில், வேறு வகையில் அந்த துறையின் மகத்துவத்தை புரிந்து கொண்டு, வர்த்தக அமைச்சகம் வாயிலாக சலுகைகள் வழங்கப்படும். 2015- முதல் 2020 வரையிலான வர்த்தக கொள்கை யில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகள் நடக் கின்றன. ஜி.எஸ்.டி., யுடன் சேர்த்து, வர்த்தக கொள் கையை வெளியிட்டால் குழப்பம் ஏற்படும். ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்திய பின், எழும் கோரிக்கைகளையெல்லாம் கேட்டறிந்து, அதற் கேற்ப திருத்தங்களுடன், வரும் செப்டம்பருக்குப் பின் வர்த்தக கொள்கையை வெளியிட முடிவு செய்துள்ளோம்.

*

ஜி.எஸ்.டி., குறித்த குழப்பங் களை தீர்க்க, அரசு என்ன செய்துள்ளது?நாடு முழுவதும் பயணம் செய்து,கூட்டங்கள் நடத்தி ஒவ்வொரு கேள்விகளுக்கும் விளக்கம் அளித்து வருகிறோம். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களில் இருந்தும் அழைத்துள்ளனர். இந்த நடைமுறை எளிதாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சிறப்பு தொழிலுக்கு ஏற்ப, அத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் சென்று விளக்கி வருகிறோம். இதன் வாயிலாக அந்த அதிகாரிகளுடன், நேரடி தொடர்பு ஏற்பட்டு விடு கிறது. எதிர்காலத்தில் ஏற்படும் சந்தேகங்களையும், அவரிடமே இ-மெயில் வாயிலாகவோ, போனிலோ கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

ஜி.எஸ்.டி., குறித்து விளக்கம் அளிக்க, அமைச்சர் கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் அசோசியேஷனின், இந்தியா முழுவதும் உள்ள கிளைகளின் வாயிலாக, விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.இதற்கு முன் எல்லாமே, புத்தகத்தில் இருந்தது. தவறு இருந்தால் சரி செய்து கொள்ளலாம். ஆனால் இனி எல்லாமே 'டிஜிட்டல்'மயமாகி விடுகிறது. அதில் தவறுகளை சரி செய்ய முடியுமா; அடிக்கடி சரி செய்தால், அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வந்து விடு வோமா; தவறு செய்தால் அபராதம் விதிக்கப்படுமா என பயப்படுகின்றனர்.

அந்த பயத்தை போக்க, நாடு முழுவதும் உள்ள அனைத்து சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்சும், தங்கள் அலுவலகத்தில் ஒரு 'டம்மி' உருவாக்கி, வர்த்தக ருடன் ஆடிட்டர்கள் இணைந்து தினமும் அதில் பணிபுரிய கூறியுள்ளோம். தினமும் பணிபுரியும் போது, விரைவில் தெளிவான பார்வை கிடைத்து விடும். வாடிக்கையாளருக்கும் புரிதல் ஏற்பட்டு, நம்பிக்கை வந்து விடும். கர்நாடகாவில், 2, 3 மாவட் டங்களில் இந்த திட்டத்தை துவக்கியுள்ளோம்.

*

முதல் ஓராண்டுக்கு, அபராதம் விதிப்பதில் இருந்து விலக்

கு

அளிக்க, கோவை தொழில் துறையினர் கோருகின்றனர்; விலக்கு கிடைக்குமா?முதல் ஆறு மாதங்கள் பெரிதாக கண்டுகொள்ள மாட்டோம் என கூறியுள்ளனர். அது குறித்து என்னால் உறுதியளிக்க முடியாது. ஆனால் உறுதியாக, முதல் மூன்று மாதங்களுக்கு அபராதம் இருக்காது என கூறலாம்.

*

ஆனாலும், கடைநிலை மக்கள், ஜி.எஸ்.டி., வந்து விட்டால் விலை அதிகமாகி விடுமோ என குழம்புகின்றனரே...?யாரும் பயப்படத் தேவையில்லை. அனைத்து செய்தித்தாள்களிலும் கடந்த 10 நாட்களாக, மொழி வாரியாக விளம்பரம் வாயிலாக, எந்த பொருளுக்கு என்ன வரி என, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இனி, 'டிவி' வாயிலாகவும் விளம்பரம் செய்யப்போகிறோம்.

மாநில அரசு அதிகாரிகளும் கொஞ்சம், கொஞ்சமாக பேசஆரம்பித்தால் குழப்பம் தீர்ந்து விடும். சட்டத்தை நிறைவேற்றியுள்ள மாநில அரசுகள், தங்கள் அதிகாரிகள் வாயிலாக மக்களுக்கு விளக்க வேண்டும்.

* ஜி.எஸ்.டி.,யால் மாநில அரசுகளுக்கு, வரி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த இழப்பை ஈடு செய்ய, மத்திய அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா?

மாநில அரசுகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதை என்னால் உறுதியாக கூற முடியும். ஏனென்றால், இரண்டு விதமான நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, முதலில் இருந்தே சர்ச்சை இருந் தது. இது பயன்பாட்டை அடிப்படையாக கொண்ட வரி. அதாவது, உற்பத்தி எங்கு நடந்தாலும், அது

Advertisement

ஜி.எஸ்.டியால்,நாட்டின்,பொருளாதாரம்,உயரும்

எத்தனை வியாபாரியை கடந்தாலும், அது இறுதியில் பயன்பாட்டாளர்கள் மீதுதான் விழும். இந்த வரி ரேட் எவ்வளவு என்பது இப்போது, அனைவருக்கும் தெரிந்து விட்டது.

இந்த வரியின் தன்மை இப்படி இருப்பதால், மாநிலங்களுக்கு வர வேண்டிய பலதரப்பட்ட வரிகள் குறைந்து விடுமோ என்ற பயம் இருந்தது. இதனால் அனைத்து மாநிலங்களுக் கும் கொடுக்க வேண்டிய இழப்பீடு, மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்ற 'எம்பவரிங் கமிட்டி' கூடி பேசி, துல்லியமாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு முன் இருந்த காங்., தலைமையிலான அரசும், இதற்கு ஒப்புக்கொண்டது. மோடி அரசு வந்த பின், அனைத்து மாநிலங்களுக்கும் இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

*

பல ஆண்டுகளாக முதலீடு செய்துள்ள, தொழில் மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடுதான் வழங்கப்படுமா?குஜராத், தமிழகம், மகாராஷ்டிரா போன்ற, 30, 40 ஆண்டுகளாக நிறைய முதலீடு செய்துள்ள, உற்பத்தி சார்ந்த மாநிலங்களுக்கு, கூடுதல் இழப்பீடு வழங்கப்படும். இனி அனைத்தும் டிஜிட்டல்மயமாகி விடும் என்பதால், மாநில அரசுகளுக்கு ஊழியர் பராமரிப்பு செலவு துளியும் இருக்காது. வரி வசூல் கண்ணுக்கு தெரியாமல் நடக்கப்போகிறது. ஆகவே இனி மாநிலங்களுக்கு செலவு குறையும். ஆகவே பெரியளவில் நஷ்டம் வர வாய்ப்பே இல்லை.

*

ஜி.எஸ்.டி., வந்தபின், நாட்டின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதம் இருக்கும்?இன்னும் அது குறித்து துல்லியமாக கணக்கிட வில்லை. ஆனால், இப்போது நாங்கள் எடுத்துள்ள அணுகுமுறையால், தொழில் துறையினர் மத்தியில் 'ரேட்' குறித்த செட்டில் மென்ட் ஆகி விட்டது. இனி அதை தவறில்லா மல் பின்பற்றுவது குறித்துதான் யோசித்து வருகின்றனர்.

அதனால், ஜி.எஸ்.டி., குறித்து, செப்., வரை எதையும் கணிக்க முடியாது. ஏனென்றால், இப்போது ஜூலையில் மேற்கொள்ளவேண்டிய, 'ரிட்டர்ன்ஸ்' அனைத்தையும் செப்., வரை ஒத்திப் போட்டுக் கொள்ளலாம் என கூறியுள் ளோம். ஆகவே, செப்., இறுதியில், உறுதியான ஒரு, 'வடிவம்' கிடைத்து விடும். உறுதியாக, நாட்டின் வளர்ச்சி, 'பாசிட்டிவ்' ஆகத்தான் இருக்கும்.

'ஸ்டாலின் வெளிநடப்பு எதற்கு?'


தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், ஜி.எஸ்.டி., மசோதாவை கண்டித்து, தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து கேட்டதற்கு, ''ஜி.எஸ்.டி.,கவுன்சிலில் இங்குள்ள அமைச்சரும் உறுப்பினர் என்பதால், அவர் வாயிலாக கவுன்சிலில் பேசி, பிரச்னை களுக்கு தீர்வு கண்டிருக்கலாமே?பின், எதற்காக வெளிநடப்பு செய்தார் என தெரியவில்லை,'' என பதிலளித்தார் அமைச்சர்.

'ஐரோப்பிய யூனியன் மவுனம் 'ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சின், தற்போதைய நிலை என்ன?


பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு அமையும் முன், 12 முறை பேச்சு நடத்தப்பட்டி ருந்தது; விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தா கும் என எதிர்பார்க்கப்பட்டது. மோடி அரசு அமைந்த பின், ஒப்பந்தத்தை மேம்படுத்த முயற்சித்தோம். அந்த காலகட்டத்தில், பிரிட் டன், ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறி விட்டது. பிரிட்டன் அல்லாத ஐரோப்பிய யூனியனுக்கு, என்ன பலம் உள்ளது என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது. ஐரோப்பிய யூனியனும் இதே காரணத்தா லேயே, பேச்சுக்கு அழைத்தாலும், எந்த ஒரு பதிலும் அளிக்காமல் அமைதியாக உள்ளது.

'ஜி.எஸ்.பி., சலுகை நீக்கம் சரியே'ஐரோப்பிய நாடுகளுடன் இலங்கை, ஜி.எஸ்.பி., பிளஸ் (பொதுவான முன்னுரிமை வர்த்தக சலுகை) வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதே?


நமது ஜவுளித்துறை வளர்ச்சி அடைந்த பின்னர்தான், ஐரோப்பா, நமக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி., சலுகையை நீக்கியது. உலக அளவில், பின்தங்கிய நாடுகளுக்கு, அனைத்து நாடுகளும் வரி சலுகைகள் அளிக்க வேண்டும் என்கிற கொள்கை பின்பற்றப்படுகிறது. நமது நாட்டு ஏற்றுமதி பங்களிப்பு, 3 சதவீதத்தை கடந்துவிட்டது; நாம் வளர்ச்சி அடைந்து விட்டதால், இனி நமக்கு அதுபோன்ற சலுகை தேவையில்லை என்பதாலேயே, ஜி.எஸ்.பி., சலுகையிலிருந்து நமது நாட்டை நீக்கியுள்ளது; இதை குறையாக நினைப்பது தவறு.

கோவை விமான நிலையம் விரிவாக்கம் யார் கையில்?


'கோவை விமான நிலையத்தில் சரக்கு முனை யம் அமைந்தால், போக்குவரத்து செலவினம், கால அளவு குறையும் என, தொழில் துறை யினர் எதிர்பார்க்கின்றனர்.

விமான நிலைய விரிவாக்கமும் கிடப்பில் உள்ளது. தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தலையிடுமா?' என அமைச்சரிடம் கேட்ட போது, ''சரக்கு முனையம் அமைக்க, மத்திய அரசு தயாராக உள்ளது.

அதற்கான நிலம் வேண்டும்; அதே போல், விரிவாக்கமும் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னையால் நிற்கிறது. இது குறித்து, அமைச்சர் கஜபதி ராஜூவுடன் பேசினேன். நிலம்தான் இங்கு பிரச்னை. இதை, மாநில அரசுதான் பெற்றுத்தர வேண்டும்; மத்திய அரசு தலையிட முடியாது,'' என்றார்.

-சிறப்பு நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh Rajan - bangalore,இந்தியா
27-ஜூன்-201717:48:14 IST Report Abuse

Rajesh Rajanமக்களின் பொருளாதாரம் உயருமா???? இலவசம் இல்லாமல் மக்களே அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொள்ளும் நிலை வருமா? பல நிலை பட்ட வரி குறையுமா? (காருக்கு சாலை வரி 1.25 லட்சம் வரி கட்டிய பிறகும் டோல் சார்ஜ்ஸ் எதெற்கு???? இல்லையென்றால் சாலை வரி உள்ளூரில் ஓட்ட மட்டும் தானா???) சொல்லுங்க மேடம் சொல்லுங்க

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-ஜூன்-201714:42:12 IST Report Abuse

Nallavan Nallavanசில மாதங்கள் கழிந்த பிறகுதான் உண்மை தெரிய வரும் என்றுதான் பொருளாதார நிபுணர்களே கூறுகிறார்கள் ....

Rate this:
Kalyani S - Ranipet,இந்தியா
24-ஜூன்-201709:26:23 IST Report Abuse

Kalyani Sஜி.எஸ்.டியால் நாட்டின் பொருளாதாரம் உயரும்: நிர்மலா சீதாராமன்................ 2014 தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் உயரும் என்று கூறியவர்கள், டீமானிடைசேஷன் கொண்டுவந்தபோது பொருளாதாரம் உயரும் என்றார்கள் ஆனால் இன்று வரை பொருளாதாரத்தில் சரிவுநிலையே ஏற்பட்டுள்ளது. இப்போது GST என்கிறார்கள் பொருளாதாரம் உயரும் என்கிறார்கள் இந்திய மக்கள் எவ்வளவு அடித்தாலும் தங்குவார்கள் என்பதை பாஜகவினர் நன்றாகவே புரிந்துவைத்துள்ளார்கள். GST யால் சாதாரண குடிமகனுக்கு எந்த பலனும் இல்லை ஆனால் மொத்தத்தில் "வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிடும்".................... மக்களிடம் இருந்து எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறந்து நாங்கள் சிறப்பான ஆட்சி செய்துவிட்டோம் என இவர்கள் மார் தட்டிகொள்வார்கள். கருப்பு பணத்தை மீட்டு மக்கள் ஒவ்வருக்கும் 15 லட்சம் கொடுப்போம் என்று கூறினார்கள் இப்போது அதே மக்களிடம் இருந்து வரி வசூல் என்ற ஆயுதத்தை வீசி உள்ளத்தையும் பிடுங்குகிறார்கள்.

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X