அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'எய்ம்ஸ்' முடிவு தமிழக அரசின் கையில்
மத்திய அரசு பதில் மனு

மதுரை:மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க தாக்கலான வழக்கில், 'தகுந்த இடத்தை அடையாளம் கண்டு மாநில அரசு பரிந்துரைத்தால் முடிவு செய்யப்படும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

மதுரை பாஸ்கர் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் 15 தென் மாவட்டங்களுக்கு மைய மான இடமாக மதுரை உள்ளது. இங்கு உயர்தர சிகிச்சைக்கு எவ்வித மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை.'எய்ம்ஸ்' அமைய தேவையான இட வசதி மதுரையில் உள்ளது.

தமிழக தென்மாவட்டங்கள், கேரளாவின் சில பகுதிகளை கருத்தில் கொண்டு மதுரையில்

'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க நடவடிக்கை கோரி மத்திய, மாநிலஅரசுகளுக்கு மனு அனுப்பி னேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதி நாதன் அமர்வு விசாரித்தது.

மத்திய சுகாதாரத்துறை சார்புச் செயலர் வினோத் குமார் தாக்கல் செய்த பதில் மனு:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2014--15ல் அறிவிப்பு வெளியிட்டது. 200 ஏக்கர் நிலம், சாலை, குடிநீர், மின்சாரம் வசதி உள்ளமூன்று அல்லது நான்கு இடங்களை அடையா ளம் காணுமாறு, தமிழக அரசுக்கு மத்திய அரசின் நிதித்துறை செயலர் கடிதம் அனுப்பினார்.தகுந்த இடத்தை அடையாளம் கண்டு, மாநில அரசுதான் பரிந்துரைக்க வேண்டும். அதன்பின் மத்திய

Advertisement

 'எய்ம்ஸ்' முடிவு, தமிழக,அரசின்,கையில்,மத்தியஅரசு,பதில்

சுகாதாரத்துறை ஆய்வு செய்து, அது உகந்த இடம்தானா? என்பதை முடிவு செய்யும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இவ் வழக்கை, தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்பது பற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கலான வழக்குடன் சேர்த்து விசாரிக் கும் வகையில்,ஜூலை 12 க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
26-ஜூன்-201702:57:27 IST Report Abuse

ManianCentral Government did not want to give 40% for TN crooks. Plus, they have to fight with land owners(who have illegally occupied government lands and lands they swndile without giving compensation tomany Brahmin/Mudaliar/Pillai e owners during the 1960's ). They are now paying the price for the curse of those helpless land owners. Now, if the center wants land, they will not get it for the right price and like Sirgur riots in Bengal, TN politicians wills start a war at the Center. Besides, it's TN's government has the education portfolio and thus is responsible to provide land first and then ask AIIMs to be set up. That also will need studies as to the maximum benefit to be derived, infrastructure, water resources, uninterrupted power supply and so on. Where are you going to find them with corrupt political and administrative tem is in place based on quota tem? This is a mess to with.

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
23-ஜூன்-201718:27:34 IST Report Abuse

Vijay D Ratnamதஞ்சாவூரும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது கனவான்களே, அது என்ன எந்த திட்டம் வந்தாலும் சென்னை, மதுரை, கோவைக்குதானா? நெற்களஞ்சியம்னு விவசாய நிலம் என சொல்லிச்சொல்லியே எந்த திட்டத்தையும் தஞ்சாவூருக்கு கொண்டுவருவதில்லை..இந்த எய்ம்ஸ் மருத்துவமனையாவது தஞ்சாவூருக்கு வரட்டும் வானம் இடிந்து எவந்தலையிலும் விழுந்துடாது. திருச்சி தஞ்சை சாலையில் செங்கிப்பட்டி எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அருமையான இடம். செங்கிப்பட்டியிலிருந்து பிஸியான தஞ்சாவூர் ஜங்க்ஷன் 20 கிமி, இந்தியாவின் மிகப்பெரிய ஜங்க்ஷனில் ஒன்றான திருச்சி ஜங்க்ஷன் 30 கிமி. மதுரையை விட பெரிய திருச்சி விமான நிலையம் 25 கிமி தூரத்தில் உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு இதைவிட என்ன சிறப்புகள் வேண்டும்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23-ஜூன்-201717:58:37 IST Report Abuse

Endrum Indianஎன்ன ஒரு கேவலமான தமிழக அரசு 3 நாள் முன்னாடி கூட மத்திய அரசு தான் முடிவெடுக்கவேண்டும் என்று சொன்னது??? "Ball in your Court" என்று மத்திய அரசு சொல்லிவிட்டது.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X