பதிவு செய்த நாள் :
ஜனாதிபதி, தேர்தல், எதிர்க்கட்சிகள்  வேட்பாளர், மீராகுமாா், ஜனாதிபதி தேர்தல், ராம்நாத் கோவிந்த், லோக்சபா முன்னாள் சபாநாயகர், தலித்,  பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பீஹார், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், அ.தி.மு.க, காங்கிரஸ் தலைவர் சோனியா, 
President, Election, Opposition Candidate, Meera Kumar, Presidential Election, Ramnath Govind, Lok Sabha Ex-Speaker, Dalith, Prime Minister Modi,President Pranab Mukherjee, Bihar, United Janata Dal, Biju Janata Dal, AIADMK, Congress leader Sonia Gandhi,

ஜனாதிபதி தேர்தலில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக, லோக்சபா முன்னாள் சபாநாயகரும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான, மீரா குமாரை, 72, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் களத்தில் இறக்கியுள்ளன.

இதன் மூலம்,ஜனாதிபதி தேர்தலில் போட்டியை தவிர்க்க, பிரதமர் மோடி வகுத்த வியூகத்தை, எதிர்க்கட்சிகள் முறியடித்துள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராம்நாத் கோவிந்த், இன்று, வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய, அடுத்த மாதம், 17ல், தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கலும் துவங்கிவிட்டது. பீஹார் கவர்னராக பதவி வகித்த, ராம்நாத் கோவிந்த், தே.ஜ., கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பா.ஜ., அறிவித்துள்ள இந்த வேட்பாளரை, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் ஆதரித்துள்ளன. அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் ஆதரவு தெரிவித்துவிட்டன.தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், நேற்று டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான எதிர்க் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், திரிணமுல் காங்கிரஸ், சமாஜ் வாதி, தேசிய மாநாட்டு கட்சி, மதச் சார் பற்ற ஜனதா தளம்,பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம், மார்க்சிஸ்ட், இ. கம்யூனிஸ்ட், தி.மு.க.,

முஸ்லிம் லீக், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆர்.எஸ்.பி., கேரளா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட, 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய முக்கிய கட்சிகளின் தலை வர்கள் அனைவரும் வலியுறுத்திய தாவது:

ராம்நாத்கோவிந்த், தலித் சமூகத்தைச் சேர்ந்த வர் தான். அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்ப தால் மட்டுமே, அவருக்கு ஆதரவு அளித்துவிட முடியாது; காரணம், அவர்ஏற்றுள்ள சித்தாந்தம்
மத ரீதியிலானது.

ஆர்.எஸ்.எஸ்., தொடர்புடைய யாரை நிறுத் தினாலும், அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத் துவது என்று தான், கடந்த மூன்று ஆலோசனை கூட்டங்களிலும் முடி வெடுக்கப்பட்டது. அதன்படி, போட்டி வேட்பாளரை நிறுத்துவதே சரி.

அந்த போட்டி வேட்பாளர், தலித்தாகவே இருக் கட்டும். போட்டியில் பங்கேற்பதே, பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்காலத்தில் அரசியல் செய்வதற்கு சரியாக அமையும்.இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.

எதிர்க்கட்சியினரின் வேட்பாளர் பரிசீலனை பட்டியலில், சட்டமேதை அம்பேத்கரின் பேரன், பிரகாஷ் அம்பேத்கர், லோக்சபா முன்னாள் சபாநாயகர், மீரா குமார், காங்., மூத்த தலைவர் கள், சுஷில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரது பெயர்கள் இருந்தன. இறுதி யாக, மீரா குமார் பெயர், தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

முன்னாள் துணை பிரதமர், பாபு ஜெகஜீவன் ராமின் மகள் தான் மீரா குமார். லோக்சபாவின்

Advertisement

ஜனாதிபதி, தேர்தல், எதிர்க்கட்சிகள்  வேட்பாளர், மீராகுமாா், ஜனாதிபதி தேர்தல், ராம்நாத் கோவிந்த், லோக்சபா முன்னாள் சபாநாயகர், தலித்,  பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பீஹார், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், அ.தி.மு.க, காங்கிரஸ் தலைவர் சோனியா, 
President, Election, Opposition Candidate, Meera Kumar, Presidential Election, Ramnath Govind, Lok Sabha Ex-Speaker, Dalith, Prime Minister Modi,President Pranab Mukherjee, Bihar, United Janata Dal, Biju Janata Dal, AIADMK, Congress leader Sonia Gandhi,

முதல் பெண் சபாநாயகராக இருந்து, திறம்பட பணியாற்றியுள்ள இவர், முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரியும் கூட.நிர்வாக அனுபவத்துடன், தேர்தல் அரசியலில் தீவிரமாக பங்கேற்ற அனுபவம் இவருக்கு உண்டு. தலித் தலைவர் களான மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை தேர்தலில் போட்டியிட்டு தோற்கடித்த பெருமையும் இவருக்கு உண்டு.

வேட்பாளர் பின்னணி


ஜனாதிபதி தேர்தலில், காங்., தலைமையிலான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மீரா குமார், 'லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகர்' என்ற பெருமைக்கு உரியவர். 1945ல், பீஹாரில் பிறந்தார். இவரது தந்தை, முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராம். தாயார், இந்திராணி தேவி; சுதந்திர போராட்ட வீரர்.

மீரா குமார், எம்.ஏ., ஆங்கிலம் மற்றும் எல்.எல். பி., பட்டம் பெற்றவர். 1973ல், ஐ.எப்.எஸ்., எனப்படும், இந்திய வெளியுறவுப் பணிக்கு சேர்ந்த இவர், ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் இந்திய துாதரகங்களில் பணியாற்றி யவர். கடந்த, 1985ல், ஐ.எப்.எஸ்., பணியில் இருந்து ராஜினாமா செய்து, அரசியலில் நுழைந்தார்.

கடந்த, 1985ல், பீஹாரின் பிஜ்னுார் தொகுதி யில் இருந்து முதன்முறையாக லோக்சபா வுக்கு தேர்வானர்.இதைத் தொடர்ந்து, 1996, 1998, 2004, 2009ல், லோக்சபாவுக்கு தேர்வானார்.

2004ல், மன்மோகன் சிங் அமைச்சரவையில் சமூக நீதி அமைச்சராக பதவி வகித்தார். 2009ல், நீர்வளத்துறை அமைச்சர் பதவிக்கு தேர்வான நிலையில், சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். 2010ல், ராஜஸ்தானில் உள்ள பனஸ்தாலி பெண்கள் பல்கலை, இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.


Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
24-ஜூன்-201719:43:10 IST Report Abuse

SIVA. THIYAGARAJANபோராமையை>>>>>>>என்னென்று சொல்வது.>

Rate this:
N. Sridhar - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
24-ஜூன்-201700:28:48 IST Report Abuse

N. Sridhar17 கட்சிகளுக்கு ஒரு பலிகடா! இப்படி ஒரு மானம் கெட்ட பிழைப்பு தேவையா?

Rate this:
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
23-ஜூன்-201721:46:28 IST Report Abuse

Parthasarathy Ravindranதோற்று போவதற்கு யார் நின்றால் என்ன?

Rate this:
மேலும் 73 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X