பதிவு செய்த நாள் :
ஜாக்பாட்!
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தமிழகத்துக்கு அடித்தது
திருப்பூர்,திருநெல்வேலி,துாத்துக்குடிக்கு இடம்

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், தமிழகத்தின் திருப்பூர், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்சி உட்பட, நாடு முழுவதும், மேலும், 30 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

'ஸ்மார்ட் சிட்டி', திட்டத்தில்,தமிழகத்துக்கு,அடித்தது..., ஜாக்பாட்!

குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம், மேம்படுத் தப்பட்ட திடக்கழிவு மேலாண்மை, சீரான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை, நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் இணைத்து வழங்கும் வகையில், ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

பரிசீலனை


'நாடு முழுவதும், 100 நகரங்கள், இவ்வாறு ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தப்படும்' என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். 2015 ஜூன், 15ல், அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 2022க்குள், 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, இரண்டு கட்டங்களாக, 60 நகரங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டன.

மூன்றாம் கட்டமாக, மேலும், 30 நகரங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு நேற்று அறிவித்தார்.

இந்த, 30 நகரங்களையும், சேர்த்து, இதுவரை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 90 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூன்றாம்

கட்டத்தின் போது, 45 நகரங்களின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.ஆனால், திட்டத்தின் செயல்பாட்டு சாத்தியக் கூறுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், 30 நகரங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன. மீதமுள்ள, 10 நகரங்களுக்கான போட்டி யில், தமிழகத்தின் திண்டுக்கல், ஈரோடு உட்பட, 20 நகரங்கள் உள்ளன.

நேற்று அறிவிக்கப்பட்டுள்ள, 30 நகரங்கள் பட்டிய லில், தமிழகத்தின், திருப்பூர், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்கள் இடம் பெற் றுள்ளதுடன்,புதுச்சேரிக்கும் இடம் கிடைத்துள்ளது.

4 நகரங்கள்


இந்தப் பட்டியலில், கேரளாவின் திருவனந்தபுரம், முதலிடத்தில் உள்ளது.சத்தீஸ்கரின் நயா ராய்ப்பூர், ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி, தெலுங் கானாவின் கரீம் நகர், ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தின் ஸ்ரீநகர், ஜம்மு, கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட நகரங் கள் இடம்பெற்று உள்ளன.30 நகரங்கள் பட்டியலில், தமிழகத்தில் இருந்து தான் மிகவும் அதிகபட்சமாக, நான்கு நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

குஜராத், உத்தர பிரதேசத்தில் இருந்து, தலா, மூன்று நகரங்களும், சத்தீஸ்கர், ஜம்மு - காஷ்மீர், மத்திய பிரதேசம், பீஹாரில் இருந்து, தலா, இரண்டு நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம்


ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கான பட்டியலை அறிவித்து, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர், வெங்கையா நாயுடு கூறியதாவது:நகர கட்டமைப்புகளில் மிகப் பெரிய மாற்றத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, 30 நகரங்களில், 26 நகரங்கள், நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளன.

பள்ளி, வீட்டு வசதி திட்டத்தை, 26 நகரங்கள் அறிவித்துள்ளன. 29 நகரங்கள், சாலை வசதிகள் மேம்பாட்டை அறிவித்துள்ளன. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையடையும் போது, இந்த, 100 நகரங்கள் சர்வதேச தரத்தில், அனைத்து வசதி

Advertisement

களுடன், மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தைஏற்படுத்தும்.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 30 நகரங் கள், 57 ஆயிரத்து, 393 கோடி ரூபாய் முதலீட்டு திட்டங் களை அறிவித்துள்ளன. இதில், 46 ஆயிரத்து, 879 கோடி ரூபாய், கட்டமைப்பு வசதிகளுக்காகவும்; 10 ஆயிரத்து, 514 கோடி ரூபாய், தொழில்நுட்ப மேம் பாட்டுகளுக்காக வும் செலவிடப்பட உள்ளது. இது வரை அறி விக்கப்பட்டுள்ள,90 ஸ்மார்ட் சிட்டி நகரங்க ளில், 1 லட்சத்து, 91 ஆயிரத்து, 155 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

30 நகரங்கள் எவை?


மூன்றாம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ள, 30 நகரங்களின் விபரம்:தமிழகம் - திருப்பூர், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்சி; குஜராத் - ராஜ்கிட், காந்தி நகர், தாஹோட்; உத்தர பிரதேசம் - ஜான்சி, அலகாபாத், அலிகார்; சத்தீஸ்கர் - நயா ராய்ப்பூர், பிலாஸ்பூர்; ஜம்மு காஷ்மீர் - ஜம்மு, ஸ்ரீநகர்; மத்திய பிரதேசம் - சாகர், சத்னா; பீஹார் - பாட்னா, முஜாபர்பூர்.

தெலுங்கானா - கரீம் நகர்; ஹரியானா - கர்னால்; கர்நாடகா - பெங்களூரு; ஹிமாச்சல பிரதேசம் - ஷிம்லா; உத்தரகண்ட் - டேராடூன்; அருணாச்சல பிரதேசம் - பஸிகாட்; மஹாராஷ்டிரா - பிம்ப்ரி சிஞ்ச்வாட்; - மிசோரம் - அய்ஸ்வால்; சிக்கிம் - கேங்க்சடாக்; கேரளா - திருவனந்தபுரம்; ஆந்திரா - அமராவதி; புதுச்சேரி.

தமிழகத்தில் 10 நகரங்கள்


நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ள, 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மூன்றாவது கட்டத்தில், தமிழகத்தில் இருந்து, நான்கு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன், வேலுார், மதுரை, சேலம், தஞ்சா வூர் ஆகிய நான்கு நகரங்கள் முதல் கட்டத்தி லும், சென்னை, கோவை ஆகியவை அடுத்த கட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதன் மூலம், 100 ஸ்மார்ட் சிட்டிகளில், தமி ழகத்தில் இருந்து,10 நகரங்கள் இடம்பெற உள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathappan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூன்-201700:22:41 IST Report Abuse

Sathappanஸ்மார்ட் சிட்டி என்ற பேரில் எல்லா நிலங்களும் நகரமயம் ஆக்கி விவசாயத்தை கொன்று சாப்பாட்டிற்க்கே வழி இல்லாமால் பசியும் பட்டினியுமாக ஸ்மார்ட் சிட்டியில் வாழ்ந்து என்ன பயன்? அரசு நகர வளர்ச்சியைவிட விவசாயத்தை வளர்க்க திட்டம் வகுத்தால் வரவேற்கலாம் இப்படி ஒரு வளர்ச்சி தேவைதானா சிந்திக்க வேண்டும் .

Rate this:
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
24-ஜூன்-201723:48:55 IST Report Abuse

Amanullahமுதலில் நதிகளை இணைத்து தண்ணீர் பஞ்சத்தைப் போக்குங்கள், நாட்டில் வளம் பெருகும். சிட்டிகள் தானாகவே ஸ்மார்ட் ஆகும். அடிப்படை வசதிகளான, தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் இல்லையென்றால் என்ன ஸ்மார்ட் சிட்டி...?

Rate this:
rinesh -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-201722:39:25 IST Report Abuse

rineshSatellite towns introduced by the GTN, were unsuccessful. This smart city is merely an add-on paper in BMP agenda.

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X