பதிவு செய்த நாள் :
ஹிந்தியிலும் பாஸ்போர்ட் தகவல்கள்
மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை

புதுடில்லி: ''பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக் கும், 8 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, 10 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்; பாஸ் போர்ட்டில் இடம் பெறும் தகவல்கள், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என, இரு மொழி களிலும் இடம் பெறும்,'' என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:

மத்தியில், பா.ஜ., தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், பாஸ்போர்ட் பெறுவதில் இருந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் போது, 'பான்' கார்டு இல்லாதோர், தங்கள் ரேஷன் கார்டை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், கிராமப் புறங்களில் வசிக்கும் ஏராளமானோர் பலனடைய முடியும்.

பாஸ்போர்ட்கேட்டு விண்ணப்பிக்கும், 8 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட விண் ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பக் கட்டணத்தில், 10 சதவீத சலுகை அளிக்கப்படும்.

இந்த அறிவிப்பு உடனடியாக அமல்படுத்தப்படும். பாஸ்போர்ட்டில், விண்ணப்பதாரரின் தனிப்பட்ட தகவல்கள், ஆங்கிலத்தில் மட்டும் இடம் பெறுவ தால், அதை புரிந்து கொள்வதில் பலர் சிரமப்படுவ தாக, புகார் எழுந்துள்ளது.

எனவே, அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி, இனி, பாஸ்போர்ட்டில் இடம் பெறும் தகவல்கள், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அச்சிடப்படும்.

அரபு நாடுகள், ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்கள், அந்தந்த நாட்டு மொழிகளில் அச்சிடப்படுகின்றன. அப்படியிருக்கையில், நாமும் பாஸ்போர்ட்டில் ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளையும் பயன்படுத்துவதில் தவறில்லை. விவாகரத்தான, கணவரால் கைவிடப்பட்ட பெண் கள், ஆதரவற்றோர் பாஸ்போர்ட் பெறுவதிலும்,

Advertisement

 ஹிந்தியிலும்,பாஸ்போர்ட்,தகவல்கள் ,மூத்த, குடிமக்களுக்கு கட்டண,சலுகை

வெளிநாடு செல்வதற்கான ஆவணங்கள் சமர்ப்பித்தல், விசா பெறும் நடைமுறையிலும் இருந்த சிக்கல்களுக்கு, தீர்வு காணப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஏராளமானோர் பலன் அடைந்துள்ளனர்.

போஸ்ட் ஆபீஸ்களில், பாஸ்போர்ட் சேவா கேந்திராக்கள் துவக்கப்பட்டுள்ளதன் மூலம், கிராமப்புறங்களில் உள்ளோர் மிக எளிதாக பாஸ்போர்ட் சேவை பெற முடிகிறது. இதனால், பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களின் பணி வாய்ப்பு பறிக்கப்படாது; மாறாக, அவர்களின் பணிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது.பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gayatri Mukundhan - Kumbakonam,இந்தியா
24-ஜூன்-201721:37:10 IST Report Abuse

Gayatri Mukundhanஇந்தியாவுக்கு 2 official மொழிகள் உண்டு..ஒன்று ஆங்கிலம் மற்றது ஹிந்தி. ஜனநாயகம் என்று வாய் கிழிய பேசுவோம் ஆனால் பெரும்பான்மையான இந்திய மக்கள் பேசும் மொழியை அவர்களின் ஆவணங்களில் எழுதுவதை கூட திணிப்பு என்போம். நெடுஞ்சாலைகளில் பெயர் பலகைகளில் தார் பூசுவோம். பலர் இந்தியாவின் மொழி ஹிந்தி இல்லை என்கிறீர்கள். வட இந்தியர்களை கிணற்று தவளைகள் என்கிறீர்கள். இந்தியாவின் பெரும்பான்மையான இந்திய மக்கள் (>70%) பேசும் மொழி ஹிந்தி என்பதே அறியாதவர்கள் கிணற்று தவளைகள் இல்லையா.. சென்னைக்கு வடக்கில் இருந்தே ஹிந்தி அறிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை நம் கிணற்று தவளைகள் எப்போது தான் உணர்வார்களோ. தமிழர்களுக்கு ஹிந்தி திணிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. மொழி திணிப்பு என்பதை பங்களாதேஷ் காரர்களிடம் கேளுங்கள். இதுவும் முஸ்லீம் மக்கள் இந்தியாவில் சுதந்திரம் இல்லாதது போல் உணர்வது போல் தான்.. மொழி திணிப்பும் intolerance என்கிறார்களே அந்த வகையில் சேர்ந்தது தான் ..(இரண்டுமே இந்தியாவில் இல்லை)

Rate this:
Arivu Nambi - madurai,இந்தியா
24-ஜூன்-201720:01:44 IST Report Abuse

Arivu Nambiஇந்தம்மா குஜராத் மாடல் மினிஸ்டர்ன்னு நினைக்கிறன் ,ஏற்கனேவே முதலில் ஹிந்தி அப்புறம் ஆங்கிலம் ,அதாவது ஹிந்தி/ ஆங்கிலம் இப்படி அவர்களுடைய ஹிந்திக்கு முன்னுரிமை கொடுத்துதான் அச்சிட்டுள்ளார்கள் ,இன்னும் அதில் ஹிந்தியில் அச்சிட என்ன மீதியிள்ளது ?இது எப்படியுள்ளது என்றால் பாக்கியின் பிடியில் உள்ள காஸ்மீரிகளின் பாஸ்ப்போர்ட்டில் உருது /ஆங்கிலம் என எழுதியுள்ளார்கள் ,காஸ்மீரிகளின் மொழியில் கிடையாது ,அவர்களும் நம்மைப்போல் தான் ,அடிமைகளாக இருக்கிறோம் என்று புலம்புகிறார்கள் ,ஆனால் தமிழகத்தில் உள்ள ஹிந்தியர்களுக்கு மகிழ்ச்சி ...... ரெட்டை மகிழ்ச்சி .....திரும்ப...... திரும்ப...... மகிழ்ச்சி .......?

Rate this:
AmmaFran -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-201719:26:25 IST Report Abuse

AmmaFranஅதாகபட்டது என்னவென்றால்... தமிழர்களும் இந்தியை பயிலுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X