பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு சமையலர், உதவியாளர் பணி ஜூலை 10 க்குள் விண்ணப்பம் வரவேற்பு

Added : ஜூன் 23, 2017
Share
Advertisement

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூலை 10 க்குள்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் மலர்விழி கூறியதாவது: மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் 39 சமையலர், 458 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
சமையலர் பணிக்கு அடிப்படை ஊதியம் 1,300 ரூபாய், தர ஊதியம் 300 ரூபாய் வழங்கப்படும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினர், தாழ்த்தப்பட்டோர் 8 ம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி அடைந்திருக்க வேண்டும். பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சமையல் உதவியாளர் பணிக்கு அடிப்படை ஊதியம் 950 ரூபாய், தர ஊதியம் 200 ரூபாய் வழங்கப்படும்.
பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினர், தாழ்த்தப்பட்டோர் 5 ம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி அடைந்திருக்க வேண்டும். பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சமையலர், சமையல் உதவியாளர் ஆகிய இரண்டு பணிக்கும், 2017 ஜூலை 1 ல் 21 முதல் 40 வயதிற்குள்ளும், பழங்குடியினர் 18 முதல் 40 வயதிற்குள்ளும், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
சத்துணவு மையத்தில் இருந்து விண்ணப்பதாரர் குடியிருப்பு மூன்று கி.மீ., க்குள் இருக்க வேண்டும். காலிப்பணியிட விபரம் அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
தகுதியுள்ளோர் விண்ணப்பத்துடன் உரிய சான்றுகளின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் (அ) நகராட்சி அலுவலகத்தில் நேரிலோ (அ) தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை ஜூலை 10 க்குள் அளிக்க வேண்டும். அதற்கு பின் வரப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X