எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எடுபடுமா?
பா.ஜ., - காங்., திட்டம் எடுபடுமா?

தேர்தலை மனதில் வைத்து, 'அனைவரும் இணைவோம்; வளர்ச்சி காண்போம்' என்ற கோஷத்துடன், தமிழக பா.ஜ.,வும், 'சமூக நீதி காப்போம்; காமராஜர் ஆட்சி அமைப்போம்' என்ற கோஷத்துடன், தமிழக காங்கிரசும், மக்களை நாடும் வியூகம் எடுபடுமா என்ற கேள்வி, அக்கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.

 பா.ஜ., காங்., திட்டம் ,எடுபடுமா?

மத்திய அரசின் மூன்று ஆண்டு கால சாதனைகள், மக்கள் நலத் திட்டங்களை, கிராம மக்களிடம் விளக்க வேண்டும் என, பா.ஜ., டில்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. 'அனை வரும் இணைவோம்; வளர்ச்சி காண்போம்' என்ற கோஷத்துடன், அனைத்து மாவட்டங் களிலும், பல்வேறு நிகழ்ச்சி களை, பா.ஜ.,வினர் நடத்தி வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ் ணன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் என, முக்கிய தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும், 60 ஆயிரம், 'பூத்'

கமிட்டிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். ஜூலை, 30ல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகளை முடிக்க வேண்டும். ஒவ் வொரு ஒன்றி யத்தில் இருப்பவர்களும், பக்கத்து ஒன்றியத்தை யும்சேர்த்து, முழு நேரம் அங்கு தங்கி, கட்சி பணிகளை கவனிக்க வேண்டும்.

இலவச வீடு, காஸ் இணைப்பு, கல்விக் கடன் பதிவு போன்ற பணிகளை, 234 தொகுதிகளிலும்முடிக்க வேண்டும். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், இரு பொறுப் பாளர்கள், உள்ளே, வெளியே என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டு, கிராம அளவில் மக்களை சந்தித்து, பா.ஜ., ஆட்சியின் சாதனைகளை விளக்க உள்ளனர்.

தீவிரம்


தமிழக காங்கிரஸ் கட்சியிலும், உறுப்பினர் சேர்க்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள் போன்ற பதவிகளை கைப்பற்றுவதற்காக, கோஷ்டி தலைவர் கள் சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், செல்லக் குமார், வசந்தகுமார் போன்றவர்களின் ஆதரவாளர் கள், உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஜூலைக்குள் உறுப்பினர் சேர்க்கை பணிகள் முடிந்து, ஆகஸ்ட் மாதத்தில், ஒவ்வொரு மாவட் டத்திலும், குறைந்தபட்சம், 100இடங்களில் கட்சி கொடிகளை ஏற்ற திட்டமிட்டுள்ளனர்.மேலும், 'பூத் கமிட்டிற்கு, 50 பேரை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும்.

முன்னாள் மாவட்ட தலைவர்களை ஒதுக்கி விடா மல், அவர்களை அரவணைத்து, கட்சி பணி களில்

Advertisement

புதிய மாவட்ட தலைவர்கள் ஈடுபட வேண்டும். எந்த பூத்திலும், உறுப்பினர்கள் இல்லை என்ற நிலையை மாற்ற வேண்டும்.கோஷ்டி தலை வர்களின் ஆதரவாளர்களாக, கட்சியினர் செயல்படலாம்;

.ஆனால், கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் கட்சியை விட்டு யாரையும் நீக்க மாட்டோம்' என, சமீபத்தில், சென்னை, சத்திய மூர்த்தி பவனில் நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், திருநாவுக்கரசர் பேசியுள்ளார். 'சமூக நீதி காப்போம்; காமராஜர் ஆட்சி அமைப் போம்' என்ற கோஷத்தை முன்வைத்து, தமிழகம் முழுவதும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை அழைத்து வந்து, கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்த, திருநாவுக்கரசர் வியூகம் அமைத்துள்ளார்.

இப்படி இரு தேசிய கட்சிகளும், உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலை சந்திப்பதற்காக, மக்களை நாடிச் செல்ல திட்டமிட்டுள்ளன. இதில், எந்த கட்சியின் வியூகம் எடுபடும் என்பது போகப் போகத் தான் தெரியும். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-ஜூன்-201714:40:42 IST Report Abuse

Nallavan Nallavanகாமராஜரை எள்ளி நகையாடிய திமுக -வுடன் கூட்டணி வைத்துக் கொண்டே காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது நரித்தனம் ....

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
25-ஜூன்-201722:09:39 IST Report Abuse

 ஈரோடுசிவாஅது யார் ஸார்...அந்த நடுநிலை...? அப்புறம்... பாஜகவின் உண்மை முகம்...?? தமிழக லோக்கல் பார்ட்டிகள் அன்றாடம் அவிழ்த்துவிடும் விஷமப்பொய் பிரச்சாரங்களைச் சொல்கிறீர்களோ...?

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
25-ஜூன்-201717:05:08 IST Report Abuse

Endrum Indianகாமராஜர் ஆட்சி அமைப் போம்?? படிப்பறிவில்லாத பிச்சைக்காரன் சொல்வது போல் "எல்லோரையும் பணக்காரர் ஆக்குவோம், நல்ல படிப்பாளிகளாக ஆக்குவோம்" இருக்கின்றது இந்த அறிவியப்பு. முதலில் காமராஜரை நினைத்துப்பார். அவர் இறந்த பின் அவரின் சொத்து 4 வேட்டி சட்டை, ரூ.500 பணம், அதுவும் ஒரு முதலமைச்சர். இப்போ கொஞ்சம் தான் மாற்றம் வெறும் 82 லட்சம் கோடி சொத்து. நீ சொல்றது காமராஜர் ஆட்சி????கொஞ்சமாவது முன் பின்னே யோசி பேசுப்பா தம்பி.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X