என்னை கேள்வி கேட்கும் 'வில்லன்' - இயக்குனர் கே.வி.ஆனந்த்| Dinamalar

என்னை கேள்வி கேட்கும் 'வில்லன்' - இயக்குனர் கே.வி.ஆனந்த்

Added : ஜூன் 25, 2017 | கருத்துகள் (1)
என்னை கேள்வி கேட்கும் 'வில்லன்' - இயக்குனர் கே.வி.ஆனந்த்

இவர் கண்களால் சினிமாவை பார்த்ததை விட, லென்ஸ்களால் பார்த்த நாட்களே அதிகம்... ஒவ்வொரு காட்சிகளின் ஒளிப்பதிவும் வெள்ளித் திரையில் ஒளியாய் விழுந்து நம் இதயத் திரையில் பதிந்து போகும்... கேமராவுக்குள் கதையின் கருவை சுமந்து காட்சிகளை பிரசவிக்கும் இயக்குனராக இயங்கிக் கொண்டிருக்கும் கே.வி.ஆனந்த் மனம் திறக்கிறார்...* உங்கள் பலம் ?நான் இந்த அளவிற்கு வாழ்வில் ஓர் உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான, என் தந்தை வெங்கடேசன் தான் என் பலம். இப்போது அவர் என்னுடன் இல்லை, அவரது திடீர் இழப்பு, பிரிவு என்னை பெரிதும் பாதித்துள்ளது.* உங்கள் விருப்பம் ?ஒரு படம் முடிந்த பின் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளவே விரும்புவேன். நிறைய 'டிராவல்' பண்ணுவேன், இப்போ கூட சீனா சென்று வந்தேன்.* சினிமா பார்வை...நான் இருக்கும் சூழ்நிலைகளில் எனக்கான 'கேமரா', 'இமேஜ்' போன்ற விஷயங்களின் நேர்த்தியை பார்ப்பேன்.* ஹீரோவுக்கு படம்...ஒரு படம் ஹிட் என்றதும் சில தயாரிப்பாளர்கள் வந்து எதாவது ஒரு ஹீரோவுக்கு படம் பண்ண சொல்வார். அப்படி ஹீரோவுக்காக படம் எடுக்க எனக்கு தெரியவில்லை. ஒரு கதை ரெடியாக இருக்கிறது யார் ஹீரோ என்று முடிவு செய்யவில்லை.* மீடியா சப்ஜெக்ட்'கோ' படம் எடுத்த போது தேர்தல் நேரம், சூழ்நிலையோடு பொருந்திப் போனது. ரசிகர்கள் 'கவண்' படத்தை அங்கீகரித்துள்ளனர், அதில் உள்ள உண்மையை விரும்புகின்றனர்.* சமூக மாற்றம்...என் படங்களின் மூலம் சமூகத்தை திருத்த, மாற்ற வேண்டும் என்று,நினைக்கவில்லை, அது பெரிய விஷயம். ரசிகர்கள் எங்களை விட பெரிய அறிவாளிகள். நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று மட்டும் நினைப்பேன்.* ஒளிப்பதிவு - இயக்கம்?ஒளிப்பதிவில் அதிகம் பொறுப்புகள் இருக்காது, ஷூட்டிங் முடிந்ததும் 'ரிலாக்ஸ்' தான். இயக்கம் அப்படி அல்ல நிறைய பொறுப்புகள் இருக்கிறது.* ஒளிப்பதிவின் இலக்கணம் ?கதையை எந்த அளவிற்கு உணர்ந்து ஒளிப்பதிவு செய்கிறோமோ, அந்த அளவிற்கு அழகாக இருக்கும். பச்சை புல்வெளி, மேகங்களை காட்டுவது ஒளிப்பதிவு அல்ல, வசனங்களால் சொல்ல முடியாத விஷயங்களை லென்ஸ், லைட்டிங்கில் காட்ட வேண்டும்.* அயன், கோ, கவண்...வித்தியாசமாக பெயர் வைக்கிறீர்கள்படங்களின் பெயர்கள் சுருக்கமாக, கதைக் கருவை குறிக்கும்படியான தமிழ் பெயராக இருக்க வேண்டும் என்று நினைத்து தேர்வு செய்தது. இப்போ நான் 'கவண்'க்கு பதிலாக 'அவன்' என்று தலைப்பு வைத்திருந்தால் அந்த நிமிடமே மறந்திருப்பார்கள். 'என்னடா பேரு இது 'கவண்' என்று, யாராவது திட்டினால் கூட மனதில் நிற்கும்.* ஷூட்டிங் ஸ்பாட்டில் கே.வி ?நிறைய பேர் 'ஐ என்ஜாய் த மூவின்'ணு சொல்வாங்க, இப்படி என்னால சொல்ல முடியாது. ஷூட்டிங்கில் ஒவ்வொரு நிமிடமும் 'டென்ஷன்' தான். நான் செய்வது சரியா, தவறா என எனக்குள் இருக்கும் வில்லன் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பான், நல்லா இருந்தால் கூட பாராட்ட மாட்டான்.mail2kva@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X