இந்தியாவில் முதலீடு செய்ய பலர் ஆர்வம்: சுந்தர் பிச்சை

Added : ஜூன் 26, 2017 | கருத்துகள் (25)
Advertisement
இந்தியா, சுந்தர் பிச்சை, முதலீடு, வாஷிங்டன்,  சி.இ.ஓ, அமெரிக்கா, சுற்றுப்பயணம்,  பிரதமர் மோடி, ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக், அமேசான் சி.இ.ஓ. ஜெப் பிகோஸ், அடோப்  சி.இ.ஓ. சாந்தனு நாராயணன், கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை,  India, Sundar Pichai, Investment, Washington, CEO, USA, Tour, Prime Minister Modi, Apple CEO Tim Cook, Amazon CEO Jeff Pigos, Adobe CEO Shanthanu Narayanan, Google CEO Sundar Pichai

வாஷிங்டன்: இந்தியாவில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக கூகுள் நிறுவன சி.இ.ஓ., சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சி.இ.ஓ., சந்திப்பில் கலந்து கொண்டார். இச்சந்திப்பில் அமெரிக்காவை மையமாக வைத்து உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பல பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வாக உள்ள சுந்தர் பிச்சையும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின் பேட்டியளித்த சுந்தர் பிச்சை கூறியதாவது :

‛‛ இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இந்த கூட்டம் அமைந்தது. இதில் பல முக்கிய கருத்துக்கள் பகிரப்பட்டன. எல்லோரும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். . நாங்கள் அதில் எப்படி பங்கு கொள்ள போகிறோம் என்பதை ஆலோசித்து வருகிறோம்.

இந்தியாவில் ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது. அதை நாங்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகிறோம். பல முக்கிய மாற்றங்களுக்கு இந்த கூட்டம் ஒரு துவக்கமாக இருக்கும் என நம்புகிறேன். இந்தியாவில் வரி விதிப்பில் இருந்த பல குளறுபடிகளை மாற்றும் மிகப்பெரிய ஆயுதமாக ஜி.எஸ்.டி., இருக்கும் எனவும், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வரும் என நம்புகிறேன். '' என கூறினார்.

இந்த கூட்டத்தில் ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ., டிம் குக், அமேசான் சி.இ.ஓ., ஜெப் பிகோஸ் அடோப் நிறுவன சி.இ.ஓ., சாந்தனு நாராயணன், கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, உள்ளிட்ட 21 முக்கிய நிறுவனங்களை சேர்ந்த சி.இ.ஓ,.க்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
26-ஜூன்-201716:30:23 IST Report Abuse
ganapati sb வரி சீரமைப்பால் வர்த்தகம் பெருகட்டும்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
26-ஜூன்-201713:52:27 IST Report Abuse
Pasupathi Subbian வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு , இந்திய என்பது ஒரு சந்தோசம், அனால் இங்கே வந்து எதையாவது உருப்படியாக செய்யலாம் என்றால் , ஏகப்பட்ட இடையூறுகள். முதலில் அரசு யந்திரம் , உள்ளூர் மக்கள்., அரசியல்வாதிகள் என்று இவர்களை சமாளிக்கவேண்டிய கட்டாயம், இதில் இந்த அப்பாவி, போன்ற கேனயன்களை, திருத்துவதா அவர்களுக்கு வேலை. நமது பிழைப்பை நாம் சிந்தித்து கட்டாயம் முன்னுக்கு வர எண்ணுவதை விடுத்து, அதில் குறை, இதில் குறை அவன் சரியில்லை, இவன் சரியில்லை என்று சப்பைக்கட்டு , சாக்குபோக்கு, எப்படி உருப்படும் ஆரியன் திராவிடன், வடக்கத்தியான், தெக்கத்தியான் , முற்படுத்த பட்டவன், பிற்படுத்தப்பட்டவன். நம்மஊர் காரன், அடுத்தவூர் காரன், நம்ம தெரு காரன், அடுத்த தெருக்காரன், நம்ம வீட்டு ஆள், அடுத்தவீடு ஆள், நம்ம ஜாதி, அடுத்த ஜாதி, என்று பிரிவினை பார்த்துக்கொண்டே , அழிந்து போவதே நமக்கு இனிமையாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Ganesh Tarun - Delhi,இந்தியா
26-ஜூன்-201712:02:01 IST Report Abuse
Ganesh Tarun தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் முதலீடு செய்யலாம். ஏனென்றால் தமிழகத்திற்கு எவ்ளோ நல்லது செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X