இந்தியாவின் பலத்தை உலகம் உணர்ந்தது; மோடி| Dinamalar

இந்தியாவின் பலத்தை உலகம் உணர்ந்தது; மோடி

Updated : ஜூன் 27, 2017 | Added : ஜூன் 26, 2017 | கருத்துகள் (166)
Advertisement
Pakisthan,பாகிஸ்தான், மோடி,USA,

விர்ஜீனியா: ‛சர்ஜிக்கல் ஸ்டிரைக்' மூலம் இந்தியாவின் பலத்தை உலகம் உணர்ந்துள்ளது என பாக்.,கை தாக்கி பிரதமர் மோடி அமெரிக்காவில் பேசியுள்ளார்.


சாதனையை நோக்கி..

அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி வெர்ஜீனியா நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது : ‛‛இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களில் உள்ள மக்களும் இங்கு இருக்கிறீர்கள். உங்களது கனவுகளை நனவாக்க ஆர்வமுடன் இருக்கிறேன். இந்தியா துன்பத்தை சந்திக்கும் போது எல்லாம் நீங்கள் வலியை உணர்ந்து வருகிறீர்கள். இந்தியா ஓர் பெரிய சாதனையை நோக்கி முன்னேறி வருகிறது.


கவனம்:


இந்தியாவின் வளர்ச்சியை பற்றி யோசிக்கும் போது எல்லாம் இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறோம்.


ஊழல் இல்லை:

இந்தியாவில் ஊழல் செய்த அரசுகளை எல்லாம் மக்கள் தங்கள் ஓட்டுக்களால் ஒதுக்கி வைத்துள்ளனர். எனது தலைமையிலான அரசில் ஓரு ஊழல் சுவடு கூட கிடையாது. சாதாரண இந்தியன் ஊழலை வெறுப்பான். தொழிற்நுட்பத்தை சரியாக பயன்படுத்துவன் மூலம் வெளிப்படை தன்மை அதிகரிக்கும். இந்திய இளைஞர்கள் தொழிற்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து மிகச்சரியாக புரிந்து வைத்துள்ளனர்.


முன்னேற்றம்:

வெளிப்படைதன்மை கொண்ட கொள்கை மக்கள் மத்தியில் நம்பகமான சூழ்நிலையை உருவாக்கும். இந்தியா எல்லா துறைகளில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. மக்களுடைய எதிர்பார்ப்புகள் சரியான தலைமையை கொடுக்கும். இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியபோது உலகம் இந்தியாவின் பலத்தை உணர்ந்தது. அதில் பாதிக்கப்பட்ட நாடு தவிர்த்து உலகின் எந்த நாடும் இது குறித்து சந்தேக கேள்வியெழுப்வில்லை. தீவிரவாதித்தின் அச்சுறுத்தல் குறித்து அவர்கள் இப்பொழுது அறிந்திருக்கிறார்.


இந்தியா வெற்றி:

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பயங்கரவாதத்தை பற்றி பேசிய போது, உலகில் பலர் அது ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று கூறியதுடன் அதை புரிந்து கொள்ளவில்லை. தற்போது உலகிற்கு அழிவை ஏற்படுத்தும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை இனி யாராலும் தடுக்க முடியாது.


விரைந்து நடவடிக்கை:


அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு உதவி செய்வதில் இந்திய தூதரகம் எந்நேரமும் தயராக இருக்கிறது. வெளிநாட்டில் வாழும் இந்தியாவை சேர்ந்த யாருக்கு பிரச்னை என்றாலும் சுஷ்மாவிற்கு டுவிட் செய்தால் அவர் உடனடியாக பதிலளிப்பார். அந்த பிரச்னை மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்.


நேரம் இதுவே:

இந்தியாவிற்கு நீங்கள் செய்ய விரும்புவதை செய்வதற்கான நேரம் இது. இந்தியா உடனான தொடர்பை மேற்படுத்தி கொண்டே இருங்கள். உங்களது அடுத்த தலைமுறையும் இந்தியாவுடனான நெருங்கிய நட்புடன் திகழட்டும்.'' என பேசினர்.

வாசகர் கருத்து (166)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூன்-201712:07:48 IST Report Abuse
எப்போதும் வென்றான் நம்ம ஆளு அமெரிக்காவில் பேசுவார்..நெதர்லாந்தில் பேசுவார்..தெருவில் மேடையில் பேசுவார்.. ரேடியோவில் பேசுவார்...டிவியில் பேசுவார்...தனக்கு தானே கூட பேசிக்கொள்வார்...ஆனால் பாராளுமன்றத்தில் மட்டும் பேசவே மாட்டார்...இவர்கள் தான் மன் மோஹனை ஏளனம் செய்தவர்கள்...வெட்கக்கேடு...
Rate this:
Share this comment
Cancel
Akbar Muhthar - Madurai,இந்தியா
27-ஜூன்-201703:00:51 IST Report Abuse
Akbar Muhthar மோடிஜி எதற்கு பாரசீக உடையான ஷெர்வானி அணிகிறார். ராம்தேவ் போல ஹிந்து தோற்றம் கொடுக்கணும் தோத்தி, நோ செருப்பு மேல ஒரு துண்டு இன்ஸ்டெடு ஆப் சட்டை
Rate this:
Share this comment
Cancel
Akbar Muhthar - Madurai,இந்தியா
27-ஜூன்-201702:50:15 IST Report Abuse
Akbar Muhthar மோடிஜியோட பலம் மேனேஜிங் தி நியூஸ். தீவாலியப்போ பிரதம மந்திரி ராணுவ வீரர்களோடு கொண்டாடுகிறார் என்று பெரிய நியூஸ் ஆனா இவர் போனது வீரர்கள் கஷ்டப்படும் காஷ்மீர் எல்லை அல்ல இவர் போனார்அமைதியான திபெத் எல்லைக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X