மோடி எதிர்ப்பு அரசியலை கைவிட்டது ஆம் ஆத்மி

Updated : ஜூன் 26, 2017 | Added : ஜூன் 26, 2017 | கருத்துகள் (29)
Advertisement
 நரேந்திர மோடி, மோடி, ஆம் ஆத்மி, புதுடில்லி, பா.ஜ.,  சட்டசபை தேர்தல், அரவிந்த் கெஜ்ரிவால்,பஞ்சாப், அரசியல், டில்லி துணை முதல்வர் சிசோடியா,   Modi, Narendra modi,Aam Aadmi Party, New Delhi, BJP, Assembly elections, Arvind Kejriwal, Punjab, Politics, Delhi Deputy Chief Minister Sisodia,

புதுடில்லி:தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஆம் ஆத்மி கட்சி, பிரதமர் நரேந்திர மோடியைகுறிவைக்காமல், பா.ஜ., மீது மட்டும் கவனம் செலுத்தும் வகையில், அரசியல் வியூகத்தைமாற்றியுள்ளது.

டில்லியில், 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 70ல், 67 தொகுதிகளை வென்று வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி, அதன் பின், நடந்த தேர்தல்களில், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து, தேர்தலை சந்தித்தது. அதனால் பலன் கிடைக்காமல், மோசமான தோல்விகளை ஆம் ஆத்மி சந்தித்து வருகிறது.

டில்லியில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள், பஞ்சாப், கோவா மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியை விமர்சித்தார்.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு, 20 இடங்கள் மட்டுமே கிடைத்தன. டில்லி உள்ளாட்சித் தேர்தலில், ஆம் ஆத்மி, இரண்டாம் இடத்தையே பிடித்தது.மோடியை கடுமையாக விமர்சிப்பதால், எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதை புரிந்து கொண்ட ஆம் ஆத்மி தலைவர்கள், பா.ஜ.,வை மட்டும் குறிவைத்து தாக்குவதென, அரசியல் வியூகத்தை மாற்றியுள்ளனர்.

சமீபத்தில், டில்லி துணை முதல்வர் சிசோடியா வீட்டில், சி.பி.ஐ., சோதனை நடத்தியது. இதற்கு, பிரதமர் மோடியை ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றஞ்சாட்டவில்லை. மாறாக, மத்தியில் ஆளும், பா.ஜ.,வின் துாண்டுதலால், அந்த சோதனைகள் நடந்ததாக புகார் கூறினர்.

உ.பி., பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள், எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனதால், கெஜ்ரிவால், பெரும் ஏமாற்றத்துக்கு ஆளானார். அதன் பின், அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளில், ஒன்றில் கூட, மோடியை விமர்சிக்கவில்லை. மாறாக, பா.ஜ.,வை மட்டும், அவர் விமர்சித்து வருகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
26-ஜூன்-201716:05:15 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam வியாபாரிகளோடு போட்டி போட முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
26-ஜூன்-201713:05:22 IST Report Abuse
தமிழர்நீதி மோடி என்ற தீயசக்தி தான் பிஜேபி கட்சியை ஆக்கிரமித்துள்ளது . பிஜேபி நல்ல கட்சி , வாஜ்பாய் , அத்வானி போன்றோர் சார்ந்திருக்கும் கட்சி . நாட்டின் வளர்ச்சிக்கு உதவியவர்கள் இவர்கள் .அமித்ஷா அண்ட் மோடி ஆக்கிரமிப்பில் தேசம் மெல்ல வீழ்கிறது. இந்தியர்கள் காவிகள் ,காவி அல்லாதோர் என்று பிரிந்து கலவர பூமியாக மாற்றி வருகிறார்கள் இருவரும் . மோடி எதிர்க்கப்பட வேண்டியவர் . அமித்ஷா அகற்ற படவேண்டியவர் . இருவரும் ஒதுக்கினால் பிஜேபி யால் விழுந்துபோன பொருளாதரத்தை தூக்கி நிறுத்த முடியும் . இல்லை மதம் , மதம் பிடித்து இந்தியாவை சரித்துவிடும். கெஜ்ரி தான் கட்சிக்காக தேசத்தை மோடி எதிர்ப்புக்கு தவிர்த்து வருவது கெஜ்ரியும் மோடியும் ஒன்றுதான் என்பதை தெரிவிக்கிறது .மதம் பிடித்த யானையை , பிஜேபி என்ற பாகன் கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கிறது , அதை திறமையுள்ள கெஜ்ரி பாகன் தான், யானை மீதேறி அங்குசத்தை காதில் விடவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Jayasankar. v - Mumbai,இந்தியா
26-ஜூன்-201713:04:07 IST Report Abuse
Jayasankar. v இவர் கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக, டெல்லி மாநில அரசை முறையாக நிர்வாகிக்க தெரியவில்லை பதவி ஏற்ற உடனே, நம்ம ஊர் தி மு க மாதிரி, அறிவியல் முறையில் பகல் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டார். இவர் தனக்குத் தானே மோடிக்கு சமமானவர் என்று நினைத்துக் கொண்டு மோடியை அல்லும் பகலும் திட்டி கொண்டே இருந்தார் - டெல்லி நிர்வாகம் சீர் கெட்டது தான் மிச்சம். இந்த அரசியல் அனாதைக்கு டெல்லியில் வெற்றி கிட்டிய ரஹஸ்யம் எப்படித் தெரியுமா ? டெல்லியில் மத்திய அரசில் வேலை பார்ப்பவர்களை மோடி அரசு பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்தி கட்டாயம் சமயத்தில் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. இதனால் கோபமுற்ற மத்திய அரசில் வேலை செய்பவர்கள் மோடிக்கும் பா ஜ க விற்கும் பாடம் கற்பிக்கும் விதமாக, 2015 -இல் ஊழலில் திளைத்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, ஆம் ஆத்மி கட்சியை வெற்றி பெற செய்து தங்கள் தலையில் தாங்களே நெருப்பு வைத்துக் கொண்டனர் . அதன் விளைவு தான் இந்த அராஜக ஆம் ஆத்மி கட்சி குஜிலிவால் பதவியில் ஒட்டிக் கொண்டுள்ளார். கட்டு மரம் போல் இவர் சொல்வதும் அண்ணா நாமம் வாழ்க. ஆனால் அந்த அண்ணா வட நாட்டு மராட்டிய அண்ணா - அண்ணா ஹஜாரே. டெல்லி மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் . 2020 வரை நன்றாக அவஸ்தை படட்டும் வடநாட்டு தி மு க - ஆம் ஆத்மி ஆட்சியில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X