மோடி - டிரம்ப் சந்திப்பு ; வெளியுறத்துறை விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மோடி - டிரம்ப் சந்திப்பு ; வெளியுறத்துறை விளக்கம்

Added : ஜூன் 27, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 டிரம்ப்,Trump, டோனால்ட் டிரம்ப்,Donald Trump, வெளியுறத்துறை , 
External Affairs, பிரதமர் மோடி,Prime Minister Modi, புதுடில்லி, New Delhi,ஜெய்சங்கர்,Jaisankar, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர்,Indian Foreign Secretary Jaisankar, அமெரிக்கா,USA,America, இந்தியா,India,  தீவிரவாத ஓழிப்பு, Terrorism,என்.எஸ்.ஜி.,NSG, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்,UN Security Council சையத் சலாஹூதீன், Syed Salahuddin

புதுடில்லி: பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பிற்கு பின்பு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து விளக்கம் அளித்தது.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் கூறியதாவது: பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் சந்திப்பு சுமூகமாக இருந்தது. இந்த சந்திப்பு அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கு பெரும் நன்மையை கொண்டு வந்து சேர்க்கும். தீவிரவாத ஓழிப்பு, என்.எஸ்.ஜி., ஜ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இருதலைவர்களும் வர்த்தகம் குறித்தும் பேசினர்.

கூட்டத்தில் பதான் கோட் தாக்குதலில் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி பாக்., தனது நாட்டில் தீவிரவாதம் வளர்ப்பதை நாம் அனுமதிக்க கூடாது என பேசினார். சையத் சலாஹூதீன் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது. இதற்காக நல்ல துவக்கமாக கருதுகிறோம் .

மேலும் மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதல், பதான் கோட் தாக்குதல், உள்ளிட்ட எல்லை தாண்டிய தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளை இந்தியாவிடம் ஓப்படைக்க பாக்.,கிற்கு கோரும் விவகாரமும் விவாதிக்கப்பட்டது. இந்தியா வர டிரம்பிற்கு மோடி விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-ஜூன்-201712:20:25 IST Report Abuse
இந்தியன் kumar அமைதி நாடான இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவாய் இருக்க வேண்டும் , இந்தியாவின் எல்லையை தாண்டும் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Saravanan stalin - Kuwait city,குவைத்
27-ஜூன்-201711:17:55 IST Report Abuse
Saravanan stalin எத்தனையோ அமெரிக்க அதிபர்களை சந்திச்சாச்சு ஒண்ணும் நடக்கலை, இன்னும் இனிமேலும் நடக்கப்போறதில்லை.நம்ம வரிப்பணம் கோடிக்கணக்கான ரூபாயில் ஊர் சுற்றுவதுதான் மிச்சம். அமெரிக்கா ஒவ்வொரு முறையும் இந்தியா தலையில் மிளகாய் அரைப்பதே வேலையா போச்சு. என்னைக்கு ஒரு அரசு நமது நாட்டில் பலதரப்பட்ட அனைத்து மக்களையும், ஏற்ற இறக்கங்களை நீக்கி சமமாக நடத்துகிறதோ அன்றைக்கே இந்தியா பத்து அமெரிக்காவுக்கு சமமான நாடாக உருவெடுக்கும் என்பது நிச்சயம் .
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
27-ஜூன்-201709:55:08 IST Report Abuse
chails ahamad இருநாட்டு ஆட்சி தலைவர்கள் சந்திப்பு நமக்கு நன்மைகள் விளைவதாக இருக்கட்டும், அதுவே இந்திய மக்களனைவரின் எதிர்பார்ப்பாகும், இருப்பினும் பெரிய அண்ணனிடம் உறவுகள் வேண்டி, நம்முடைய இறையாண்மையை விட்டு கொடுத்தால் ஆகாது என்பதை நம்முடைய பிரதமர் திரு. மோடி அவர்கள் உணர்ந்து நம்முடைய காரியங்களை சாதிப்பதில் கவனம் செலுத்துவது அவசியமாகும், பெரிய அண்ணன் ஒர் ஆயுத வியாபாரி என்பதை மனதில் கொண்டு, அவர்கள் அள்ளி தரும் குப்பைகளை கடனாக பெறுவதிலும் கவனம் வேண்டும், நமக்கு நாமே என்ற முறையில் வெளியில் குப்பைகளை அள்ளுவதில் அக்கறை கொள்ளாது, எந்த ஒரு ஆயுதங்களையும் நாமே உற்பத்தி செய்வதில் அக்கறை கொண்டு சாதிக்க வேண்டியதில் கவனம் செய்வதே நம்மை வல்லரசாக உலக நாடுகளில் காணப்பட செய்யும். ஆயுதங்கள் மட்டுமே நம்மை வல்லரசாக்கி விடாது என்பதையும் மனதில் கொண்டு, உணவு பொருள்கள் உற்பத்தியில் தன்னிறவை அடைய, மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகளை அக்கறை கொண்டு இணைத்துடுவதே நம்முடைய பிரதமர் திரு. மோடி அவர்களது ஆட்சியின் பெருமையை இந்திய வரலாறில் நிலைத்திட செய்யும் என்பதை உணர்ந்து செயலாற்றுவது அவசியமாகும், இங்கே கருத்து பதிவு செய்யும் சில சகோதரர்கள் எதற்கு எடுத்தாலும் அமைதி மார்க்கம் அது, இது என தேவையற்ற கருத்துகளை விஷமாக கக்கின்றார்கள், அறிவுப்பூர்வமாக சிந்திப்பதை தவிர்த்து, மனநோயாளிகளாக உலாவுகின்றார்களே என்பது மிகவும் நம் மனதை வேதனைக்கின்றது.
Rate this:
Share this comment
ganesha - tamilnadu,இந்தியா
27-ஜூன்-201710:36:27 IST Report Abuse
ganeshaஉங்களைப்போன்ற சில நல்லவர்கள் இருந்தாலும் உங்களுக்கு கெட்ட பெயர் தர பலர் இருக்கிறார்கள். அவர்களை தயவுசெய்து தள்ளிவையுங்கள். மக்களுக்கு அடையாளம் காட்டுங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X