பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தொழில் முதலீடு: தமிழகம் பின்னடைவு

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் பின்தங்கியது. 2016ல், தொழில் துவங்க அனுமதி பெற்ற, 20 நிறுவனங்கள் வாயிலாக, 4,793 கோடி ரூபாய் முதலீட்டை மட்டுமே ஈர்த்துள்ளது.

தொழில் முதலீடு,Industrial Investment,  தமிழகம்,Tamilnadu, ஐ.இ.எம்., IEM,  மத்திய தொழில் மற்றும்வர்த்தக அமைச்சகம்,Ministry of Industries and Commerce, மஹாராஷ்டிரா,Maharashtra,ஆந்திரா, Andhra Pradesh,  கர்நாடகா,Karnataka,குஜராத்,Gujarat,ராஜஸ்தான்,Rajasthan,


ஒரு மாநிலத்தில், ஐந்து கோடி ரூபாய்க்கு மேலான முதலீட்டில், தொழில் துவங்க விரும்பும் நிறுவனம், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கு, ஐ.இ.எம்., என, பெயர்.
மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், மாநில அரசை அணுகி, தொழில் துவங்கலாம். இவ்வாறு, ஐ.இ.எம்., கிடைக்கப் பெற்ற நிறுவனங்கள், குறிப்பிட்ட மாநிலத்தில்

தொழில் துவங்காமல், வேறு மாநிலத்திற்கு போகும் வாய்ப்பும் உண்டு.
ஐ.இ.எம்., பெற்ற நிறுவனங்கள், சொன்னபடி, அந்த மாநிலத்தில் முதலீடு செய்யும் பணிகளை மேற்கொண்டால், அது குறித்த தகவல்களை, மத்திய தொழில் மற்றும்வர்த்தக அமைச்சகம் தொகுக்கும். இவ்வாறாக, ஐந்து ஆண்டுகள் தொகுத்த பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மஹாராஷ்ரா முதலிடம்


அதன்படி, 2011ல், தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பிய நிறுவனங்களில், 28 நிறுவனங்கள், 235 கோடி ரூபாய் முதலீட்டை உறுதி செய்தன; அது, 2013ல், 2,292 கோடி ரூபாய்; 2014ல், 2,500 கோடி ரூபாய் என, அதிகரித்தது.
ஆனால், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடந்த, 2015ல், 501 கோடி ரூபாயாக குறைந்தது. 2016ல்,20 நிறுவனங்கள், 4,793 கோடி ரூபாய், முதலீட்டுக்கான பணிகளை செய்துள்ளன.
ஆனால், அதே ஆண்டில், மஹாராஷ்டிரா, 40 ஆயிரத்து, 588 கோடி ரூபாய் முதலீடுகளை பெற்று, முதலிடத்தை பிடித்தது.

Advertisement

ஆந்திரா மாநிலம், 11 ஆயிரத்து, 395 கோடி முதலீடுகளை பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், கர்நாடகா, 9,162 கோடி; குஜராத், 8,267; ராஜஸ்தான், 7,277; தமிழகம், 4,793 கோடி ரூபாய் முதலீடுகளை பெற்றுள்ளன.
உதாரணத்திற்கு, 2016ல், மஹாராஷ்டிராவில், ஐ.இ.எம்., பெற்ற, 60 நிறுவனங்கள், 40 ஆயிரத்து, 588 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. ஆனால், தமிழகத்தில், 20 ஐ.இ.எம்.,கள் மூலம் வெறும், 4,793 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு கிடைத்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kmish - trichy,இந்தியா
28-ஜூன்-201719:44:32 IST Report Abuse

kmishஇவங்க பன்ற சாக்கடை சண்டையை பார்த்து இந்த அளவுக்கு வந்ததே பெருசுதான்

Rate this:
28-ஜூன்-201719:43:42 IST Report Abuse

அப்பாவிஅம்மா சொன்னதையும் செய்யலை...சொல்லாததையும் செய்யல.... அப்பிடி ஒரு ஆளுமை...

Rate this:
Balaji - Khaithan,குவைத்
28-ஜூன்-201717:26:06 IST Report Abuse

Balajiதமிழகத்தில் அனைத்திலும் ஊழல் மலிந்துவிட்டதால் தான் முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய மறுக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இது இந்த ஆட்சியில் என்று மட்டுமல்லாது ஏற்கனவே ஆண்ட திமுக ஆட்சியிலும் இதுபோன்ற நடந்துள்ளது. அதிமுக ஆட்சியில் கமிஷன் சதவிகிதம் அதிகமாக சென்றதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மக்கள் எப்போது இந்த இரண்டு ஊழல் கட்சிகளை தமிழகத்திலிருந்து வேரறுக்கிறார்களோ அப்போது தான் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை மேற்கொள்ள முடியும். தற்போது இந்த இரண்டு கட்சியினரால் ஏற்பட்ட நிலைமையை சரி செய்யவே குறைந்தது 10 வருடங்கள் ஆகும். தற்போதைக்கு ஜனாதிபதி ஆட்சி வந்தால் கொஞ்சம் சாத்தியமிருக்கிறது.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X