அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எம்.பி.,க்கள் எதிர்ப்பு கொடி: சசிகலா குடும்பம் அதிர்ச்சி

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, 'சசிகலா மற்றும் முதல்வர் ஒப்புதலுடன், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது' என, கூறியிருந்தார்.

எம்.பி.,MP, சசிகலா ,Sasikala,ஜனாதிபதி தேர்தல்,president election, பா.ஜ.,BJP, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, Lok Sabha Deputy Speaker Thambidurai,அ.தி.மு.க., AIADMK,அரி, Ari, அருண்மொழிதேவன்,Arunmolidevan, எம்.எல்.ஏ.,MLA, முருகுமாறன் ,murugumaran,தினகரன் , Dinakaran,ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், R. K. Nagar By-Election,


அதற்கு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அரி, அருண்மொழிதேவன், எம்.எல்.ஏ., முருகுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருத்தணியில் பேட்டி அளித்த அரி, 'கட்சியும், ஆட்சியும், முதல்வர் பழனி சாமி தலைமையில், சிறப்பாக நடந்து வருகிறது.

எனவே, தேவையில்லாமல் சசிகலா குடும்பம், கட்சியில் தலையிடக் கூடாது. பொதுச்செயலர் தேர்வே செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், துணைப் பொதுச்செயலருக்கு அதிகாரம் எப்படி வந்தது' என,கேள்வி எழுப்பினார்.

ஏன் எதிர்க்கிறீர்கள்


அவரது பேட்டி, சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரிக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஆகியோர் பேட்டி அளித்தனர்.
மேலும், தினகரன் ஆதரவாளர்கள், அரியை தொடர்பு கொண்டு, 'சசிகலா குடும்பத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்; சசிகலாவை பொதுச்செயலராக தேர்வு செய்தபோது, ஏன்அமைதியாக இருந்தீர்கள்' என, கேள்விகள் தொடுத்து வருகின்றனர்.
அதற்கு அவர், 'இக்கட்டான சூழ்நிலையில், சசிகலா பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டார். மக்கள், அவரையும், அவரது குடும்பத்தினரையும் விரும்பவில்லை. எனவே, அவர்களை விலக்கி வைக்கிறோம்' என, பதில் அளித்துள்ளார்.

Advertisement

தினகரன் ஆதரவாளர்களோ, 'மக்கள் செல்வாக்கு, சசிகலா குடும்பத்திற்கு தான் உள்ளது' என, கூறியுள்ளனர்.
'அப்படியானால், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஏன் சசிகலா படம் போடாமல் பிரசாரம் செய்தீர்கள்' என, அரி எதிர்கேள்வி கேட்டுள்ளார். இது தொடர்பான, டெலிபோன் உரையாடல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
28-ஜூன்-201717:40:30 IST Report Abuse

BalajiOPS அவர்கள் வெளியில் வந்த போது கிடைத்த வரவேற்பு எப்படிப்பட்டது என்பதை இந்த சதிகாரியின் கைப்பிள்ளைகள் தங்களின் சொந்த கண் கொண்டு கண்டிருந்தால் இதுபோன்று ஒரு நிலைமையே வந்திருக்காது........ எப்போதோ அனைவரும் அவர் (அவர் ஒன்றும் உத்தமரில்லை என்றாலும் அவரால் கட்சியை மீண்டும் கட்டுக்கோப்பாக நடத்த முடியும் என்பதனால்) பின்னால் அணிவகுத்து அவருக்கு வலு சேர்த்து இருப்பார்கள்............ இவர்கள் அனைவரும் ஓடி ஒழிந்துகொண்டவர்கள் தானே......... இன்னும் தங்கள் கண்களை திறக்காமல் கனவுலகத்திலேயே பிரயாணிப்பதால் தான் சதிகாரியையும் அவரது மாபியா குடும்பத்தினரையும் தாங்கிப்பிடித்துக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்.........

Rate this:
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
28-ஜூன்-201717:19:31 IST Report Abuse

Murukesan Kannankulamஅடாவடி தினகரன் பணம் வைத்து விளையாடுகிறான். இவன் குணம் தெரிந்ததால் தான் அம்மா ஜெயலலிதா அடித்து விரட்டினார்கள் இந்த பரதேசியை.

Rate this:
manonmani - Pennadam,இந்தியா
28-ஜூன்-201716:23:37 IST Report Abuse

manonmaniஎதிர்த்து குரல் கொடுத்த கடலுர் MP அருள் மொழித்தேவனின் சொத்துக்களை அவர் சொந்த ஊரான திட்டக்குடி போய் விசாரியுங்கள் புட்டு புட்டு வைப்பார்கள் . அதுக்கு பயந்துக்கிட்டுதான் அண்ணன் சசிக்கு எதிரா லாவணி பாடுகிறார்

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X