கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 அரசு பள்ளி, செயல்பாடு,கோர்ட், கேள்வி

சென்னை: 'பள்ளிக்கு சரியாக வராமல், சொந்த தொழிலில் ஈடுபடும் பெரும்பாலான ஆசிரியர்களால், மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது; அந்த அரசு பள்ளி மாணவர்களை, ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம்
வேதனை தெரிவித்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் காணப்படும் பிரச்னைகள் தொடர்பாக, தமிழக அரசிடம், 20 கேள்விகளை சரமாரியாக எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டுள்ளது.

 அரசு பள்ளி, செயல்பாடு,கோர்ட், கேள்வி

தஞ்சை மாவட்டம், பந்தநல்லுாரில், பசுபதி நடுநிலை பள்ளி உள்ளது; இது, அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு ஆங்கில வழி வகுப்பை துவங்க, பள்ளி நிர்வாகம் அனுமதி கோரியது. அதை, பள்ளி கல்வித் துறை நிராகரித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
'அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு அனுமதியளிக்கும் போது, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறது' என, மனுவில் கூறப்பட்டது.

ஆங்கில வழி கல்விமனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: அரசின் உத்தரவுப்படி, பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2013 முதல், ஆங்கில வழி வகுப்புகள் துவங்க, அரசு முடிவெடுத்திருப்பது தெளிவாகிறது.
ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டாலும், தமிழ் மற்றும் ஆங்கில வழி படிக்கும் மாணவர்களை ஒன்றாக உட்கார வைத்து, தமிழ் வழி மாணவர்களுக்கு, கற்று தரும் ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்துவதாகவும், மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இது, உண்மை என்றால், ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டதன் நோக்கம் வீணாகி விடும்.

தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் படிக்க வைக்கின்றனர். அதன்மூலம், தனியார் பள்ளிகளில் கல்வி தரம் நன்றாக உள்ளது தெளிவாகிறது.அதே தரத்தை, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்க, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் தவறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கற்பித்தலில் ஆர்வம் காட்டாமல், குடும்பத்தினர் பெயரில், வட்டிக்கு விடுதல்,

பங்குச் சந்தை, 'ரியல் எஸ்டேட்' போன்ற தொழில்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

அதிக சம்பளம்அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம், அதிக நேரம் பணி உள்ளது. அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைவாக இருப்பதால், தனியார்பள்ளிகளை, பெற்றோர் நாடுகின்றனர்.
ஐந்தாம், ஆறாம் வகுப்பில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களால், சரியாக எழுத படிக்க தெரிய வில்லை. இத்தகைய நிலை, பெரும்பாலும் கிராமப்புற அரசு பள்ளி ஆசிரியர்களின் நடவடிக்கைகளால் எழுகிறது.அதேநேரத்தில், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும், அரசு ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

அவர்களின் கடமை தவறாத பணிக்காக, பாராட்ட வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்களுக்கு கற்பிக்கவில்லை என்றால், அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது. சரிவர பணிக்கு வராமல், சொந்த தொழிலில், ஆசிரியர்கள் ஆர்வமாக இருந்தால், அரசு பள்ளி மாணவர்களை, ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
இந்த நடைமுறையை முழுமையாக சரிசெய்யாமல், ஆங்கில வழி வகுப்புகளை துவக்குவதில், எந்த பயனும் இல்லை. கல்வி தரம் குறைவதை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளை நிர்வகிக்க, தன்னார்வ அமைப்புகளை ஈடுபடுத்துவது பற்றி, அரசு யோசிக்க வேண்டும்.
தற்போதைய கல்வி நிலையை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த, கீழ்கண்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
* அரசு எடுத்த கொள்கை முடிவின்படி, ஆங்கில வழி வகுப்புகள் துவங்க, எத்தனை பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது
* தமிழகம் முழுவதும், ஆங்கில வழி வகுப்புகளில், எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர். 2012 - 13 முதல், ஆண்டு வாரியாக விபரங்கள் அளிக்க வேண்டும்
* தமிழ் வழி கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் தான், ஆங்கில வழி கல்வியையும் கற்பிக்கின்றனரா?
* ஆங்கில வழி கல்வி கற்பிக்க, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா; அவ்வாறு எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்
* ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி என்ன?
* அரசு பள்ளிகளை விட, கிராமப்புறங்களில் தனியார் பள்ளிகளை, பெற்றோர் நாடுவது ஏன்?

Advertisement


* அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என, அரசு ஏன் கட்டாயப்படுத்தக் கூடாது?
* சரியான நேரத்தில் பணிக்கு வர தவறிய ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
* ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை சரிபார்க்க, பணி நேரத்தில் அவர்கள் பணியில் இருக்கின்றனரா என்பதை பரிசோதிக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதா?
* அரசு பள்ளிகளில், குறிப்பாக கிராமப்புறம், மலை பகுதிகளில் உள்ள பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' முறையை ஏன் அறிமுகப்படுத்தக் கூடாது?
* பள்ளி நேரங்களில், மொபைல் போன் பயன்படுத்த, ஆசிரியர்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது?
* ஆசிரியர்களின் வருகை, கற்பித்தலை சரிபார்க்க, பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த சாத்தியம் உள்ளதா?
* ஆசிரியர்களின் பணிமூப்பை, மாநில அல்லது மாவட்ட வாரியாக கொண்டு வருவதன் மூலம், அவர்களை சொந்த இடத்துக்கு வெளியில் பணியாற்ற ஏற்பாடு செய்வது உகந்ததாக இருக்காதா?
* மாறி வரும் நிலைக்கு ஏற்ப, ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படுகிறதா?
* கடந்த, 10 ஆண்டுகளில், அரசு உயர்நிலை பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை; கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
* அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளில், 10 ஆண்டுகளில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் எவ்வளவு?
* கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் என்ன?
* போலீசாருக்கு இருப்பது போல், சங்கம் துவங்க, ஆசிரியர்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது; கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்பதால், எதிர்கால மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்கள் என்பதால், தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க, சங்கத்தை பயன்படுத்துவதால், அதை துவங்க, அரசு ஏன் தடை விதிக்க கூடாது?
* கிராமப்புறங்களில் கல்வி தரத்தை மேம்படுத்த, அரசு பள்ளிகளை நிர்வகிக்க, தன்னார்வ அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனியாரை ஏன் ஈடுபடுத்தக் கூடாது?
இந்த வழக்கு விசாரணை, ஜூலை, 14க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suriyanila - Vaniyambadi,இந்தியா
01-ஜூலை-201703:30:13 IST Report Abuse

suriyanilaஎங்கு தவறு என்பதை அறியாமல் ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்தையே கொச்சைப்படுத்தகூடாது 1. தவறுகள் தொடக்கப்பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பாடம் ஒழுங்காக நடத்துவதில்லை. சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவதில்லை. 2 . .. 6 - ம வகுப்புக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் தமிழ் எழுத்துக்கள் தெரியாத நிலையில் உள்ளனர். இவர்களை வைத்துகொண்டு உயர்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் படும் துன்பம் அளவில்லாதது.பாலூர் ( பேர்ணாம்பட்டு) அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்றுமே தெரியாமல் வரும் மாணவர்களை வைத்துக்கொண்டு துவக்கப்பள்ளியில் கற்பிக்கவேண்டியதை 6 - ம் வகுப்பிற்கு மேல் கற்பிற்கிறார்கள், க்டுமையாக உழைக்கிறார்கள். நல்ல தேர்ச்சி விகிததை அளிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் இந்த மாணவைகளை சேர்க்கவேமாட்டார்கள். தவறுகள் தொடக்க கல்வி முறையில் தான்.. அப்பா அம்மா படித்தவர்களாக இருந்தால் தான் அவர்களின் பிள்ளைகளை சேர்க்கும் பள்ளிகளும் இருக்கின்றது. திறமையான மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் தனியார் பள்ளிகள் ஒன்றும் அரசு பள்ளியை விட ஒன்றும் சிறந்தவை அல்ல. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களை சிறந்தவர்களே.

Rate this:
mani k - trichy,இந்தியா
29-ஜூன்-201701:44:22 IST Report Abuse

mani kமருத்துவமும் கல்வியும் நாட்டின் இரு கண்கள்.இந்த இரண்டு துறைகளிலும் தான் சரியான வரைமுறைகள் இல்லாமல் நமது நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் அரசியல் வாதிகளின் தந்திரத்தால் நமது நாடு முன்னேற வில்லை.எனவே வருங்கால சந்ததியான இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் ஒன்று சேர்ந்து நாட்டை நல்வழி படுத்த வேண்டும். நன்றி. கி.மணி.திருச்சி.

Rate this:
Manian - Chennai,இந்தியா
30-ஜூன்-201705:35:55 IST Report Abuse

ManianBut they are also training to get bribe money now (to recover what their parents are paying now) and it will take 100 years and when the population comes to 30 crores like Bharatiyar time ...

Rate this:
Joseph Rajan - Pondicherry,இந்தியா
28-ஜூன்-201723:53:49 IST Report Abuse

Joseph Rajanகல்வி முழுவதுமாக அரசுடைமை ஆக்க படவேண்டும் ....மருத்துவம் உடன் சேரவேண்டும் ....தனியார் பள்ளி தொடங்க அனுமதி அளிக்கும் அதே நேரத்தில் அதற்க்கான கொள்கை வழிமுறைகளை உறுதி படித்த வேண்டும் . ஆசிரியர் இடமாற்றங்கள் எந்த பள்ளிக்கும் பொருந்தும் வழியில் சட்டம் இயற்ற படவேண்டும்....கல்வி கட்டணம் ஊழியர் சம்பள விகிதம் ஒன்று போல இருக்க வேண்டும் ....எடுக்கும் பாட திட்டங்கள் அடிப்படியில் கல்வியாளராகள் வருமானம் நிர்ணயிக்க படவேண்டும் ....எந்த ஒரு அரசியல் தலையீடு தவிர்க்கப்படவேண்டும் பள்ளி ஆசிரியர் எங்கேயோ அங்கேயே அவர்கள் பிள்ளைகள் இருக்க வேண்டும் ...இல்லை அதை சார்ந்த பள்ளிகளில் இருத்தல் வேண்டும் ....ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிலேயேய் பிள்ளைகள் இருக்க வேண்டும்....வேறு பள்ளியில் சேர்க்க அனுமதி இல்லாதவாறு சட்டம் இயற்ற படவேண்டும் பள்ளி அடையாள அட்டை தவிர அணைத்து சீருடையும் ஒன்று போல இருக்க வேண்டும்....இப்படி நிறைய கேவி எதிர்பார்ப்புகள் உண்டு...என்ன செய்ய முடியும் கனவுதான் காண முடிகின்றது ....காரணம் நாம் வோட்டு போட்டு உருவாகியுள்ள அரசு மற்றும் அரசியல் தலைகள் அனைவரும் தெர்மோகோல் விடுபவர்களை உள்ளனர் ...

Rate this:
Manian - Chennai,இந்தியா
30-ஜூன்-201705:37:26 IST Report Abuse

ManianThat is what is happening now my friend. The only difference is in implementation based on the amount of bribe and quotas. Will the quota qualified allow any change ? ...

Rate this:
மேலும் 104 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X