அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆளாளுக்கு அறிக்கை விடுவதால்
அ.தி.மு.க.,வினர் பெரும் குழப்பம்

அ.தி.மு.க.,வில், பல தலைமை உருவாகி உள்ளதால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கட்டுப்பாடின்றி, தன்னிச்சையாக அறிக்கை விடத் துவங்கி உள்ளனர். அதனால், கட்சியினர் மத்தியில் குழப்பம் அதிகரித்து வருகிறது.அ.தி.மு.க.,வில், பன்னீர் அணி, பழனிசாமி அணி, தினகரன் அணி என, மூன்று அணிகள் உருவாகி உள்ளன.

ஆளாளுக்கு அறிக்கை, அ.தி.மு.க., குழப்பம்

சசி பற்றி மவுனம்



முதல்வர் பழனிசாமி அணியினர், தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். ஆனால், சசிகலா குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். தினகரன் அணியினரோ, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

'ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு' என, முதலில், முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அவரை தொடர்ந்து, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர், ஆதரவு அறிக்கை வெளியிட்டனர்.
இதையடுத்து, சசிகலாஒப்புதலுடன், பா.ஜ., வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாக, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். அதற்கு, எம்.பி.,க்கள் அருண்மொழிதேவன், அரி, எம்.எல்.ஏ., முருகுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'சசிகலா குடும்பத்தினர், கட்சியில் தலையிடக் கூடாது' என்றனர். இதற்கு, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'சசிகலா ஒப்புதல் பெறப்பட்டதா; இல்லையா என்பதை, முதல்வர் விளக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்; ஆனால், முதல்வர் வாய் திறக்கவில்லை.

அதிகாரம் இல்லை


இந்நிலையில் நேற்று, தம்பிதுரை அளித்த பேட்டியில், ''கட்சி பொதுச் செயலர் யார் என்பது, அனைவருக்கும் தெரியும். அவர், இப்போது எங்கு இருக்கிறார் என்பதும், அனைவருக்கும் தெரியும்.

Advertisement

அவர் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்; அவரை நீக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை,'' என்றார்.
இவ்வாறு, கட்சியில் ஆளாளுக்கு கருத்து தெரிவித்து வருவதால், கட்சிக்கு யார் தலைமை என்ற குழப்பம், கட்சி தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை, பழனிசாமி தரப்பினர் ஆதரிக்கின்றனரா, இல்லையா என்பதும் தெரியாததால், முதல்வர் மீதான நம்பிக்கையை, கட்சியினர் இழந்து வருகின்றனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneer - Puduchery,இந்தியா
04-ஜூலை-201703:57:35 IST Report Abuse

Panneerபாராளுமன்றத்தின் துணை சபாநாயகர் பதவி வகிப்பது இந்தியாவுக்கே கேவலம்.பிரதமரே மரியாதை கொடுக்கவேண்டிய பதவியில் இப்படி ஒரு கேடுகெட்ட ஜெயில் கைதி காலில் விழும் ஈன ஜென்மம்? இப்போ ஜனாதிபதி வேறே குற்றவாளி தயவில் வெற்றிபெறப்போகிறார்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
28-ஜூன்-201717:06:35 IST Report Abuse

Balajiஇவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி பழிப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்...... OPS எந்தவித ஆர்பாட்டமுமின்றி தனது இருப்பை கூட்டங்கள் நடத்தி தனது செல்வாக்கை தொண்டர்கள் மத்தியில் காட்டி வருகிறார்....... இவருக்கு வரும் கூட்டத்தை கண்டு வியந்தால் தான் தற்போதைய முதல்வர் கூட அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி கட்சிக்குள் கொண்டு வந்து சதிகாரி மற்றும் அவரது மன்னார்குடி மாபியாக்களை எதிர்க்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்....... ஆனால் இருவருக்கும் முதல்வர் பதவி மீது இருக்கும் காதல் தான் அவர்களை இணைக்க முடியாமல் விலக்கி வைக்க வழிவகுக்கிறது....... எந்த அணியாக இருந்தாலும் ஆட்சி கலையாமல் தங்களுக்கான இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவே முயல்வார்கள் என்பது மட்டும் உறுதி.........

Rate this:
rama - johor,மலேஷியா
28-ஜூன்-201716:03:23 IST Report Abuse

ramaஊரே கொள்ளையடித்து தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த கருணாநிதி தமிழ் இன தலைவர் , மாபியா வேலை செய்யாத சசிகலாவுக்கு மன்னார்குடி மாபியா ,

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X