பதிவு செய்த நாள் :
தினகரன் கோஷ்டிக்கு பழனிசாமி அணி பதிலடி!

முதல்வர் பழனிசாமிஆதரவு, எம்.எல்.ஏ.,க் களுக்கும், தினகரன்ஆதரவு, எம்.எல்.ஏ.,க் களுக்கும் இடையே, மோதல் அதிகரித்து வருகிறது.

தினகரன், Dinakaran,பழனிசாமி,Palanisamy, அ.தி.மு.க.,ADMK, சசிகலா, Sasikala,முதல்வர் பழனிசாமி,Chief Minister Palanisamy, வெற்றி வேல்,VetriVel,  தங்கதமிழ்செல்வன்,Thangathamilselvan, ஜனாதிபதி தேர்தல் ,Presidential election,லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ,Lok Sabha Deputy Speaker Thambidurai, அருண்மொழிதேவன், Arunmuthyvanvan,அரி,Ari,  முருகுமாறன், Murugumaran,

அ.தி.மு.க., - சசிகலா அணியானது, தற்போது பழனிசாமி அணி, தினகரன் அணி என, இரண்டாக பிளவுபட்டு உள்ளது. தினகரனுக்கு ஆதரவாக, எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி வேல், தங்க தமிழ்செல் வன் ஆகியோர், குரல் கொடுத்து வருகின்றனர்.

'ஜனாதிபதி தேர்தலில், சசிகலா ஒப்புதலுடன், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். இதற்கு, எம்.பி.,க்கள் அருண்மொழிதேவன், அரி, எம்.எல்.ஏ., முருகுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர்களை, எம்.எல்.ஏ., வெற்றிவேல் கண்டித்தார்.

அதற்கு பதில் தரும் வகையில், நேற்று,

சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் ஆதரவு, எம்.எல்.ஏ.,க் களான, காட்டுமன்னார் கோவில் - முருகுமாறன், குன்னம் - ராமச்சந்திரன், சூலுார் - கனகராஜ், கிணத்துக்கடவு - சண்முகம், சிதம்பரம் - பாண்டியன், வால்பாறை - கஸ்துாரி வாசு, கோவை தெற்கு - அம்மன் அர்ஜுன் ஆகியோர் கூட்டாக, பத்திரிகை யாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் கூறியதாவது:


தேவை இல்லாமல், வெற்றிவேல் பேசக் கூடாது. பொதுச் செயலர் பதவிக்கான விதி, எங்களுக்கும் தெரியும். அதை, அவர் சொல்லித் தர வேண்டிய தில்லை. சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலின் போது, பொது செயலர் பெயரை,யாரும் குறிப்பிட வில்லை. அந்தத் தொகுதி மாவட்ட செயலர் வெற்றிவேல். அவர் ஏன், பொதுச் செயலர் படம் இல்லாமல், சுவரொட்டி ஒட்டினார்; அவர் என்ன காரணத்திற்காக புறக்கணித்தாரோ,அதே காரணத்திற்காக, நாங்களும் சசிகலாவை புறக்கணிக்கிறோம்.

அ.தி.மு.க.,வில், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், தங்களின் வாரிசாக யாரையும் அறிவிக்கவில்லை. சசிகலா சிறைக்கு சென்ற பின்,அவரது உறவினரை, கட்சிப் பதவியில் நியமித்தது தவறு. வாரிசு அரசியலை, அ.தி.மு.க.,வில் புகுத்தியதால், சசிக லாவை எதிர்க்கிறோம்.

ஜெ.,க்கு துணையாக இருந்த சசிகலாவை, மனதார ஏற்று வழி நடந்தோம். அவருக்கு இடையூறு ஏற்பட் டவுடன்,கட்சியினர் ஒருவரை, அந்த பொறுப்புக்கு நியமித்திருந்தால்,மனதார ஏற்றிருப்போம். ஆனால்,

Advertisement

அவர் வாரிசு அரசியல் நடத்துவதை ஏற்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதற்கு பதிலளித்து, தினகரன் ஆதரவு, எம்.எல். ஏ.,க்கள் வெற்றி வேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் கூறியதாவது:

அ.தி.மு.க., உட்கட்சி விவகாரங்களை, பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் கூறுவதை, நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலில், அவர்கள் தான் பிரச்னையை துவக்கினர்; அவர்கள் தான் நிறுத்த வேண்டும். துணை பொதுச் செயலர் குறித்து, யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். இந்த பிரச்னைக்கு, முதல்வர் பழனி சாமி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paramuk - kumari,இந்தியா
29-ஜூன்-201720:56:19 IST Report Abuse

Paramukதமிழகத்தின் அரசியலையே கூவத்தைப் போல நாற்றமெடுக்க வைத்த பெருமை இந்த எடுபிசாமி, தொப்பி மாரி தினகரன், ஒடிபிடி செல்வம், நஞ்சு செம்பு-த் மற்றும் அருவருத்த முப்பெரும் தேவிகள், இவர்களுக்கெல்லாம் தெய்வமாகிய கேடிகலா.... இவர்களையே சேரும். தூஊஊ. இன்னும் எண்ணமெல்லாம் செய்ய போறானுவளோ?

Rate this:
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
29-ஜூன்-201719:50:15 IST Report Abuse

Murukesan Kannankulamபேசாம தினகரனை பிடித்து கிணற்றில் தூக்கி போடுங்கள் இதற்க்கு மொத்தமாக விடை கிடைக்கும். இந்த தினகரனால் தான் இவ்வளவு லொள்ளு.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஜூன்-201720:23:44 IST Report Abuse

தமிழ்வேல் வறண்ட கிணறுதானே ? ...

Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
29-ஜூன்-201717:36:47 IST Report Abuse

வால்டர்ஆளும் கட்சி இப்புடி, எதிர் கட்சி அப்புடி. ஆக மொத்தம் நமக்கு நாமமே. ரோடு போட மாட்டாங்க. பைப்ப தொறந்தா தண்ணி வராது. விவசாயத்தில் முன்னேற்றம் கெடையாது. புதிய தொழில் நிறுவனங்கள் இங்கே ஆர்வம் காட்டுவதில்லை. டாஸ்மாக் பிரச்சினைக்கு முடிவு கிடையாது. இந்த தினகரனை கூப்பிட்டு ஒரு பேட்டி எடுங்க தயவு செய்து. இதுக்கெல்லாம் இவரு என்ன பதில் வச்சிருக்காருன்னு கேளுங்க

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X