பார்லிமென்ட்டில் நாளை ஜி.எஸ்.டி., அறிமுக விழா நள்ளிரவு! Dinamalar
பதிவு செய்த நாள் :
பார்லிமென்ட்,Parliament,ஜி.எஸ்.டி.,GST, அறிமுக விழா, Introductory Festival,நள்ளிரவு,Midnight, புதுடில்லி,New Delhi, சரக்கு மற்றும் சேவை வரி, Goods and Service Tax, மத்திய அரசு, Central Government,எம்.பி.,MP,ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,President Pranab Mukherjee துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி,Vice President Hamid Ansari, பிரதமர் நரேந்திர மோடி,Prime Minister Narendra Modi, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,Lok Sabha Speaker Sumitra Mahajan,முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், former prime minister Manmohan Singh, தேவகவுடா,Deve Gowda, லோக்சபா, Lok Sabha,ராஜ்யசபா, Rajya Sabha,

புதுடில்லி:ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

பார்லிமென்ட்,Parliament,ஜி.எஸ்.டி.,GST, அறிமுக விழா, Introductory Festival,நள்ளிரவு,Midnight, புதுடில்லி,New Delhi, சரக்கு மற்றும் சேவை வரி, Goods and Service Tax, மத்திய அரசு, Central Government,எம்.பி.,MP,ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,President Pranab Mukherjee துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி,Vice President Hamid Ansari, பிரதமர் நரேந்திர மோடி,Prime Minister Narendra Modi, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,Lok Sabha Speaker Sumitra Mahajan,முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், former prime minister Manmohan Singh, தேவகவுடா,Deve Gowda, லோக்சபா, Lok Sabha,ராஜ்யசபா, Rajya Sabha,

இதன் அறிமுக விழா பார்லிமென்ட்டின் மைய மண்டபத்தில் நாளை இரவு நடக்கிறது. இதற் கான ஏற்பாடுகள் நடக்கும் நிலையில் 'அனைத்து எம்.பி.,க்களும் இதில் பங்கேற்க வேண்டும்' என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஜூலை, 1 முதல் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வரி விதிப்பு முறைகளுக்கு மாற்றாக ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்டி., அமலுக்கு வருகிறது. புதிய வரி விதிப்பு முறைக்கு மாநிலங்கள், தொழில் துறையினர், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த வரி விதிப்பு முறையை மிகச் சிறப்பான

முறையில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக நாளை இரவு 12:00 மணிக்கு பார்லி மென்ட்டின் மைய மண்டபத் தில் மிகப் பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர், சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பேச உள்ளனர்.

அழைப்பு


இந்த விழாவில் பங்கேற்கும்படி முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோருக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அனைத்து மாநில முதல்வர்கள், மாநில நிதி அமைச்சர்கள், அனைத்து லோக்சபா, ராஜ்யசபா, எம்.பி.,க் களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திரப் பொன்விழாவுக்கு பின் பார்லிமென்ட்டின் மைய மண்டபத்தில் நடக்க உள்ள இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பல்வேறு துறை அதிகாரிகள் செய்து வருகின்ற னர். ஜி.எஸ்.டி., தொடர்பான இரண்டு விளக்கப் படங்களும் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட உள்ளன.

ஒத்திகை: நாட்டின் மிகப் பெரிய பொருளாதார

Advertisement

சீர்திருத்தநடவடிக்கையாக கருதப்படும் இந்த வரி விதிப்பு முறையின் அறிமுக விழாவை எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடத்தும் வகையில், நேற்று இரவு பார்லிமென்ட்டில் ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்தது.

மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சாதனைகளில் முக்கியமானதாக இந்த வரி விதிப்பு முறை கருதப்படுகிறது. அதனால் அதன் அறிமுக விழாவில் கட்டாயம் பங்கேற் கும்படி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்பட வில்லை.

புறக்கணிக்க மம்தா முடிவு


''ஜி.எஸ்.டி., அறிமுக விழாவில் பங்கேற்கப் போவதில்லை,''என மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.''செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு போல ஜி.எஸ்.டி., யிலும் மத்திய அரசு தேவையில்லாத அவசரத்தை
காட்டுகிறது. இந்த வரி முறையை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் இவ்வளவு அவசரப்பட வேண்டாம்,'' என மம்தா கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (30)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
30-ஜூன்-201723:55:37 IST Report Abuse

ஐயபபன்அவங்களக்கு தீபாவளி மாதிரி அதனால இரவு பன்னிரண்டு மணிக்கு நடு சபைல கொண்டாடுவாங்க ஆனால் நடுத்தர வியாபாரிகள் பொழப்புலதான் மண் அள்ளி போட்டுட்டாங்க சட்டம் என்பது ஏப்போதும் நடுத்தரவாதியதாண் பாதிக்கும்

Rate this:
jagadeesan - Hosur,இந்தியா
29-ஜூன்-201721:28:19 IST Report Abuse

jagadeesanமுன்னேற்றம் என்பது வாழ்வில் முக்கியம் இதை உணர்ந்தவர் என்றுமே தாழ்ந்து போனது இல்லை .மோடி உணர்ந்தார் பின் மக்கள் உணர்வார்கள்.எதற்கு எடுத்தாலும் குற்றம் குறை சொல்லும் எதிர்க்கட்சிகளுக்கு தேச நலன் என்பது கடுகு அளவு கூட இல்லை என்பது நாம் பார்த்து வருகிறோம்.

Rate this:
Raja - coimbatore,இந்தியா
29-ஜூன்-201717:58:36 IST Report Abuse

RajaGST, ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படி தமிழா, வெள்ளைக்காரனை ஏன் நம் நாட்டை விட்டு துரத்தினோம்??? இந்த கேள்வியை கேட்டவுடன் நமக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பேசிய வசனம் ஞாபகத்திற்கு வருகிறது "வாி, வட்டி, கிஸ்தி, உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் வாி நீா் எம்மோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா? அங்கு துள்ளி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணிபுாிந்தாயா??? மாமனா? மச்சானா? மானம் கெட்டவனே???" என் வாள் உன் கழுத்திற்க்கு வருவதற்க்குள் ஒழுங்காக வந்த வழியே திரும்பி ஓடி விடு என்று நம்மை அடிமையாக்கி ஆண்ட வெள்ளைக்காரனை எதிா்த்து போராடி இராவோடு இராவாக விரட்டி அடித்தோம் ஆனால் இன்றோ? 5%ல் இருந்த வாி படிப்படியாக உயா்ந்து இன்று 18%-28% ஆக உயா்த்தப்பட்டுள்ளது கேட்டால் டிஜிட்டல் இந்தியா பிறந்துள்ளது என்கிறாா்கள் அன்று ஆங்கிலேயன் வாங்கிய 1/4%, 1/2%, 3/4%, அதிகபட்சம் 1% வாிக்கே அவன் நம் நாட்டில் செய்தது என்ன என்று தொியுமா? அவன் வாியே வாங்கியிருந்தாலும், நம்மை அடிமையாகவே வைத்திருந்த போதும், அவா்கள் நம் நாட்டிற்க்கு செய்ததென்னவோ நன்மையான நலத்திட்டங்களே தொிந்து கொள்ளுங்கள், இன்று சொகுசாக இந்தியா முழுதும் இரயிலில் பயணம் செய்கிறோமே? யாரால்? வெள்ளைக்காரனால், இன்று ஊட்டி, கொடைக்கானல், என குளு குளுவென டூா் செல்கிறோமே யாா் அந்த மலை பகுதிக்கு சாலை அமைத்தது? யாா் மலை ரயில் பாதை அமைத்து ரயில் விட்டது? யாா் அங்கே அழகிய பல கருங்கல்லால் ஆன கட்டிடங்களையும், பூங்காக்களையும் அமைத்தது? யாா் அழகிய தேயிலை தோட்டங்களையும், பல டீ எஸ்டேட்டுகளையும், டீத்தூள் தொழிற்ச்சாலைகளையும் முதலில் அமைத்து அங்குள்ள மலை வாழ் மக்களுக்கு வாழ்வாதாரம் அமைத்துக் கொடுத்தது??? எல்லாம் வெள்ளைக்காரனால், இன்று நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம்தான் என மாா்தட்டி சொல்கிறோமே? அந்த விவசாயம் செழிக்க இன்று வரை நம்மால் மழை நீரை கூட ஒழுக்கமாக சேமிக்க முடியவில்லை???? ஆனால் அன்று விவசாயம் செழிக்க ஆங்கிலேயனால் கட்டப்பட்ட அணைகளே ஏராளம், எடுத்துக்காட்டாக, தமிழகத்திலேயே காவிாி நீரை தேக்க மேட்டூா் அணை., பவானிசாகா் அணை., மற்றும் தென் மாவட்டத்தின் நாடித்துடிப்பாக செயல்படும் ஜான் பென்னி குயிக் ஆல் கட்டப்பட்ட வைகை அணை என பிற மாநிலங்களிலும் சொல்லிக்கொன்டே போகலாம் அன்று ஆங்கிலேயனால் கட்டப்பட்ட எத்தனை ஆயிரம் கட்டிடங்கள், மேம்பாலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வேளாண் தானிய சேமிப்பு கிடங்குகள், தரமான சாலைகள், கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து, விமான நிலையங்கள், மற்றும் எத்தனை எத்தனை தொழிற்ச்சாலைகள், என அனைத்து வசதிகளிலும் ஒரு சிறு குறை கூட கூற முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாக நன்மை பல செய்து கொடுத்து விட்டு சென்றவன் ஆங்கிலேயன் ஆனால் இன்றோ??? அனைத்திற்க்கும் வாி வாி வாி, அனைத்திலும் ஊழல்..... லஞ்சம் தலை விாித்தாடுகிறது அரசால் வழங்கப்படுகின்ற எந்த நலத்திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை ஒரு கட்டிடம் கட்ட 1 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டால் ஒரு சில தேசத்துரோகி நாய்களால் சுரண்டி திண்ணப்பட்டு, தரமில்லாத பொருட்களை கொண்டு, வெறும் 30-40 லட்சம் செலவில் மட்டுமே கட்டப்படுகிறது. குறுகிய காலத்திலேயே அந்த கட்டிடம் இடிந்தும் விடுகிறது. அன்று 1/2% வாி வாங்கிய ஆங்கிலேயனால் கட்டப்பட்ட கட்டிடங்களும் அணைகளும் இன்றும் அவன் பெயா் சொல்லும் அளவிற்க்கு தரமானதாக, கம்பீரமாய் காட்சியளிக்கின்றன... ஆனால் 28% வாி வாங்கியும் இவா்கள் செய்யும் வேலைகள் அவா்கள் ஆட்சி செய்யும் 5 ஆண்டுகளுக்கு கூட நிலைத்திருப்பதில்லை அரசியலிலும் பல நல்ல மனிதநேய மாண்புள்ள மனிதா்கள் உள்ளனா்.... ஆனால், இப்போது ஒரு சில மானஸ்தா்களின் திருட்டுத்தனத்தால், அரசின் முழு நலத்திட்டமும் முழுமையாக வந்து சோ்வதில்லை மனம் நொந்து சொல்கிறேன்..... நமக்கு சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருந்தாலே, நம் நாடு உலக நாடுகளுக்கு சமமாக வளா்ந்து நல்ல தரமான நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும். இதில் எள் அளவும் சந்தேகமில்லை நம் நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காரணம், வகிக்கும் பதவிக்கு தகுதியான ஆட்கள் இங்கே இல்லை என்பதே அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம் சுற்றுச்சூழல் துறையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு அமைச்சா் செய்த ஒரு காாியம் ஒன்றே மிகச்சாியான எடுத்துக்காட்டு வைகை அணையில் நீா் ஆவியாவதை தடுக்க தொ்மாக்கோலில் இன்சுலேசன் டேப் ஒட்டி, அணை நீாின் மேற்ப்பரப்பில் மிதக்கவிட்ட சம்பவமே சான்று இதை முன்னின்று நடத்தி வைக்க 4மாவட்ட கலெக்டா்களும், MLA க்களும் அணி வகுத்து வந்து நின்றனர், நான் கண்டிப்பாக சொல்கிறேன், ஒரு சாதாரண 5ம் வகுப்பு மாணவனிடம், இந்த CONCEPT ஐ கூறி, பள்ளியில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில், இந்த தொ்மாக்கோல் வைத்து நீா் ஆவியாவதை தடுக்கச்சொன்னால் கூட, இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் ஆகாத விஷ்யம் என அந்த சிறுவனே கூறி விடுவான் ஆனால், இந்த விஷயத்தையும், IAS படித்த 4மாவட்ட கலெக்டா்களும், MLA... MINISTER.... களும் கொஞ்சம் கூட யோசிக்காமல் வெட்கப்படாமலும் செய்துள்ளனா் என்றால்ல்ல்ல்???? இதையெல்லாம், நம் தலை விதி சாியில்லை என்பதா? இல்லை நம் நாட்டின் தலை விதிதான் சாி இல்லை என்பதாாாா???? மாறுமா இந்த விதி? மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் உள்ள தமிழாில் நானும் ஒருவன் 😨😰😢😥😭😪😡

Rate this:
mohan - chennai,இந்தியா
29-ஜூன்-201723:46:09 IST Report Abuse

mohanஇதெல்லாம் சினிமாவை நம்பி ஏமாந்து போன மக்களால் வந்த வினை... நாட்டில் 95 விழுக்காடு பேருக்கு சுயநலம், சோம்பேறித்தனம், அதன் மொத்த விளைவு, இன்றைய நிலை, ஒரு முதல்வர், இறந்துள்ளார். அவருக்கே இந்த நிலை என்றால் , சாதாரண மனிதனை நினைத்து பாருங்கள்.. இதற்க்கு முற்றுலும் காரணம் மக்கள்... ஒன்றும் செய்ய முடியாது...நாட்டின் நீர் வளத்தை சீரமைக்க விருப்பமில்லாதவர்களை நீர் ஆவியாவதை தடுக்க சொன்னால் எப்படி தடுப்பார்கள்.. எது செய்தாலும், மந்திரி செய்கிறார் அல்லவா.. படித்த மேதைகளும், உடன் இருந்து கை தட்டுவார்... கிரகம்டா சாமி, நாட்டில் தனியாரின் உழைப்பினால் தொழில் உயர்ந்த அளவிற்கு அரசியலில் படித்த நேர்மையான அரசியல் வாதிகள் வரவில்லை....அந்த 300 எண்ணிக்கை உள்ள தெர்மோ கொளுக்காக, 10 லட்ச ரூபாய் செலவு செய்ததற்கு, அணையை தூர் வாரி இருந்தால் பணமும் மிச்சம், விவசாயிகளுக்கு, உரமும் கிடைத்திருக்கும். மக்கள் ஓட்டளிக்காமல், மூன்று தளபதிகளையும் வர சொல்லி, இதில் கருது சொன்ன அனைவரும், என்ன செய்யலாம் என்று யோசனை கேட்கலாம். நாட்டின் நிலவரம் அவ்வாறு உள்ளது....அவனவன், காஸ்மீரிலும், அஸ்ஸாமிலும், சாகிறான்...இங்கே நாட்டை கொள்ளை அடிக்கும் குத்தாட்டம் நடக்கிறது......

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X