Printing of Rs 200 currency notes begins | புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி துவக்கம்

Updated : ஜூன் 29, 2017 | Added : ஜூன் 29, 2017 | கருத்துகள் (34)
Advertisement
ரூ.200,Rs.200, நோட்டுகள்,banknotes, கோல்கட்டா,kolkata, ரிசர்வ் வங்கி,reserve bank, மத்திய அரசு ,central government,  பணப் பரிவர்த்தனை,cash transaction,   200 ரூபாய் நோட்டு,200 rupees note,  கர்நாடகம்,Karnataka, மைசூர்,Mysore, மேற்குவங்கம், West bengal,சல்போனி,sulfony, ரூபாய் ,Rupees, Currency

கோல்கட்டா: புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. இப்புதிய நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரூபாய் நோட்டு வாபஸ்:

ஊழயை ஒழிக்கும் பொருட்டு ரூ. 500 மற்றும் ரூ1000 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவ., 8ம் தேதி மத்திய அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து பண நெருக்கடியை சமாளிக்க, பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது.


புதிய ரூ.200:

இந்நிலையில் பணப் பரிவர்த்தனையை எளிமையாக்கும் நோக்கில், புதிய ரூ.200 நோட்டுகளை அச்சிட முடிவு செய்த ரிசர்வ் வங்கி, அதற்கான பணியை துவக்கியுள்ளது. மேலும் இந்த புதிய 200 ரூபாய் நோட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடனும், கள்ள நோட்டுகள் அச்சிடாதவாறும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.


விரைவில் புழக்கத்துக்கு வரும்:

இந்த புதிய ரூபாய் நோட்டுகளின் தர சோதனைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ம.பி., மாநிலம் ஹோசங்காபாத்தில் மத்திய அரசு ஆய்வு செய்தது. இதனையடுத்து புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் இடங்களான, கர்நாடக மாநிலம் மைசூரிலும், மேற்குவங்க மாநிலம் சல்போனியிலும் நடைபெற்று வருகிறது விரைவில் இப்புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூன்-201716:49:12 IST Report Abuse
எப்போதும் வென்றான் அப்போ.. வழக்கம் போல முதலில் ஜனார்த்தன ரெட்டி க்கு தானே நேரடி சப்ளை ????
Rate this:
Share this comment
Cancel
29-ஜூன்-201712:58:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நல்லது. 500 ருபாய் வரைதான் நோட்டுகள் இருக்கவேண்டும். அதனால் பின்னால் 2000 ரூபாய் நாட்டுக்கு தடை வரும்.
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
29-ஜூன்-201712:44:12 IST Report Abuse
Ramaswamy Sundaram வர வர தாடிஜி அரசாங்கம் மறை கழண்டுபோய் இருக்கோ என்ற பலமான சந்தேகம் நாட்டு மக்களிடையே வருகிறது...இப்ப எதுக்கய்யா இருநூறு ரூபா நோட்டு? எவன் கேட்டான்? உருப்படியா ஏழை மக்களின் பசி தீர்க்க ஒரு திட்டமும் கொண்டுவர கைலாகாத கபோதி அரசு இப்படி எல்லாம் சுடலையின் டப்பா டான்ஸ் ஆடின்னனே அதுபோல் ஆடுகிறது....மக்கள் இப்போது சிரிக்க மட்டுமே செய்கிறார்கள் நேரம் வரும்போது கூரான ஆப்பை பின்பக்கம் சொருகி அடித்து விரட்ட தவறவே மாட்டார்கள்...உஷார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X