பொது செய்தி

இந்தியா

மோசடி வழக்கு: நடிகர் ஷாருக்கான் மீது புகார்

Added : ஜூன் 29, 2017 | கருத்துகள் (3)
Advertisement
மோசடி வழக்கு, Fraud case, நடிகர் ஷாருக்கான், actor ShahRukhKhan, புகார்,Complaint, புதுடில்லி,New Delhi, பாலிவுட் நடிகர்,Bollywood actor, நவாசுதீன் சித்திக்,  Nawazuddin Siddiq,குற்றவாளி ,culprit,அனுராக் ஜெயின் ,Anurag Jain,சந்தேஷ் வர்மா ,Chandesh Verma,ஆட்ஸ் மார்க்கெட்டிங்,Arts marketing, சி.பி.ஐ. விசாரணை , CBI investigation,அலகாபாத் ஐகோர்ட்,Allahabad High Court,

புதுடில்லி: மோசடி நிறுவனம் துவங்கி பணம் வசூலித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால், குற்றவாளி அல்லது சந்தேகப்படுபவர்கள் என எந்த குறிப்பும் அதில் இல்லை.
உ.பி.,யில், அனுராக் ஜெயின் மற்றும் சந்தேஷ் வர்மா ஆகியோர் போலி நிறுவனம் துவங்கி கவர்ச்சி விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்க திட்டமிட்டனர். இதற்காக ஆட்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனம் என்ற பெயரில் போலி நிறுவனம் துவக்கி, தங்களது இணையத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்தனர். தங்களது நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோரை விளம்பரபடுத்தினர். இதனை நம்பி பணம் கொடுத்து சேர்ந்த 2 லட்சம் பேரிடம் ரூ.500 கோடி வசூலித்து ஏமாற்றினர். முதலில் இந்த வழக்கை உத்தர பிரதேச போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர், அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.
மோசடி தொடர்பாக பலர் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதில், நடிகர்களை நம்பி ஏராளமான நபர்கள் பணம் கொடுத்து ஏமாந்தனர் என கூறப்பட்டிருந்தது.
அதேநேரத்தில் போலீசார் இருவரையும் குற்றவாளிகள் அல்லது சந்தேக நபர் என எந்த பிரிவிலும் சேர்க்கவில்லை.சி.பி.ஐ., அதிகாரிகள், போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை மீண்டும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதி அறிக்கையில் முற்றிலும் மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பொன் வண்ணன் - chennai,இந்தியா
30-ஜூன்-201713:43:48 IST Report Abuse
பொன் வண்ணன் " அதேநேரத்தில் போலீசார் இருவரையும் குற்றவாளிகள் அல்லது சந்தேக நபர் என எந்த பிரிவிலும் சேர்க்கவில்லை.".... எப்படி சேர்ப்பார்கள்... இவனுங்களெல்லாம் பிஜேபிக்கு வேண்டியவனுங்க.. காங்கிரஸ் இருந்தா அவர்களுக்கு வேண்டியவர்களாக மாறி விடுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
29-ஜூன்-201722:54:30 IST Report Abuse
அப்பாவி அது எவ்வளவோ தேவலை...இங்கே கூத்தாடிகள் கையிலே ஆட்சியக் குடுத்துட்டில்லே இவ்வளவு கஷ்டப் படறோம்... இதுல, அடுத்த கூத்தாடி ஆச்சியப் புடிக்க ரெடியாயிட்டு வர்ராறு.
Rate this:
Share this comment
Cancel
29-ஜூன்-201718:32:52 IST Report Abuse
ஐயப்பன்j நடிகர்கள் விளம்பரத்துக்கு வந்தால் இதுதான் கதி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X