பொது செய்தி

இந்தியா

சாவை வரவழைத்த சாகசம்

Added : ஜூன் 29, 2017 | கருத்துகள் (16)
Advertisement
அரியானா,Haryana, பானிப்பட், Panipat, இளைஞர்,Youth, சாகசம், Adventure,சண்டிகர், Chandigarh,சுமித் காதி, Sumith Khadi, மருத்துவமனை,Hospital

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் சாகசம் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


5வது வரை படித்தவர்

ஹரியானா மாநிலம், பானிப்பட் மாவட்டம், சமால்கா தாலுகாவில் உள்ள குரார் என்ற கிராமத்தை சேர்ந்த, 17 வயது இளைஞர் சுமித் காதி. இவர் ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டார்.

சுற்றியுள்ள கிராமங்களில் சாகச நிகழ்ச்சிகள் நடத்தும் ஜகதீப் என்பவருடன் சுமித் காதி சேர்ந்தார். குரார் கிராமத்தில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள சுல்கானா என்ற கிராமத்தில் கடந்த ஜூன், 24ம் தேதி இரவு 10 மணிக்கு ஜகதீப், சுமித் காதி மற்றும் ஏழு பேர் சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்ட ஒன்று கூடினர். அவர்கள் மக்களிடம், 8,500 ரூபாய் வரை வசூலித்தனர்.

அங்குள்ள ஒரு மைதானத்தில் பெரிய குழி தோண்டப்பட்டது. சுமித் காதி சாக்கு பையில் நுழைந்து கொண்டார். அந்த சாக்கு பைக்கு 21 முடிச்சுகள் போடப்பட்டன. அதற்கு முன் சுமித் காதியிடம் ஒரு மொபைல் போன் தரப்பட்டது. பின்னர் அந்த சாக்கு பை, குழியில் இறக்கி விடப்பட்டு மரப்பலகைகளால் மூடப்பட்டது.

அதன் மீது மண் கொட்டி மேலும் இறுக்கமாக மூடிவிட்டனர். அடுத்த நாள் இரவு, 10 மணிக்கு குழியில் இருந்து சுமித் காதி உயிருடன் வெளியே வருவார் என கிராம மக்களிடம் கூறப்பட்டது. மேலும், சுமித் காதி புதைக்கப்பட்ட இடத்தில் நீண்ட நேரம் பூஜை செய்யப்பட்டது.



26 முறை போனில் பேச முயற்சி

அடுத்த நாள் இரவு, 10 மணிக்கு குழியை தோண்டி சுமித் காதியை வெளியே எடுத்த போது மயங்கி நிலையில் காணப்பட்டார். மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குழிக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட போது, தன்னிடம் இருந்த மொபைல் போன் மூலம் ஜகதீப் உள்ளிட்ட தன் நண்பர்களை அவர், 26 முறை தொடர்பு கொள்ள முயன்று இருக்கிறார். முதல் முறை மட்டும் அனைத்து சிறப்பாக செல்கிறது என வெளியே இருந்தவர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு அவருடன் போனில் பேசாமல் இருந்து விட்டனர்.


இச்சம்பவம் பற்றி தெரிந்த உடன் போலீசார் விரைந்து வந்து ஜகதீப்பை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Sridhar - KPM  ( Posted via: Dinamalar Windows App )
29-ஜூன்-201722:47:41 IST Report Abuse
N. Sridhar ஏமாற்றாதே ஏமாறாதே! I there's some fishy preplaned murdur in this game, I believe. There are thousands of headaches already overloaded in our country. Just ignore this issue.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
29-ஜூன்-201720:43:17 IST Report Abuse
Kuppuswamykesavan உண்மையான யோகி குருமார்களினால்தான், இதைப்போன்ற சாகசங்களை செய்ய முடியும். சாதாரண மனிதர்களால் முடியாது. அவர்கள் செய்த தந்திர உபாயத்தில் ஏதோ ஒன்று தப்பாக ஆகியிருக்கும். குறிப்பாக போதிய சுவாச காற்று குழிக்குள் சேமிக்க மறந்திருப்பார்கள். அதாவது காற்றுடன் போதிய இடவசதி இருத்தல். மேலும் வெப்பமான பூமி சும்மா இருக்குமா?. உடலில் அதிக வியர்வை வெளியேறி நீர் அளவு குறைந்து இரத்தம் கடினமாகி இருக்கும். சரியா?.
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
29-ஜூன்-201721:39:53 IST Report Abuse
தலைவா எந்த யோகி குருமார்களும் செய்ய முடியாது மரணம் மனிதர்க்கு இயற்கை தரும் பரிசு இயற்கைக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முடியாது. புரிந்து கொள்ளுங்கள்.படைக்க பட்ட அனைத்து பொருட்களும் ஒரு நாள் அழிந்தே தீரும் அதற்கு இந்த பூமியும் விதி விலக்கு அல்ல....
Rate this:
Share this comment
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
30-ஜூன்-201701:09:23 IST Report Abuse
Kunjumaniயாரும் எதையும் படைக்கவில்லை என்கிறத அறிவியல். பனிக்கரடி என்கிற போலார் பிரதேசத்தில் வாழும் வெள்ளை கரடி அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி பிறழ்வு என்ற விதியின் படி வெள்ளை கரடி ஆனது. எந்த கடவுளும் வெள்ளை, கருப்பு கரடியை படைக்கவில்லை. இறைவன் மனிதனை படைக்கவில்லை மனிதன்தான் ஒரு சில ஏஜெண்டுகள் மூலம் இறைவனை படைத்தான். இறைவன் இருப்பது உண்மையென்றால் எல்லாம் வல்ல அவனுக்கு ஏஜெண்டுகள் தேவையா?...
Rate this:
Share this comment
Cancel
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
29-ஜூன்-201719:55:24 IST Report Abuse
Murukesan Kannankulam முட்டாள்தனமான காரியம் செய்துவிட்டனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X