சாவை வரவழைத்த சாகசம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சாவை வரவழைத்த சாகசம்

Added : ஜூன் 29, 2017 | கருத்துகள் (16)
அரியானா,Haryana, பானிப்பட், Panipat, இளைஞர்,Youth, சாகசம், Adventure,சண்டிகர், Chandigarh,சுமித் காதி, Sumith Khadi, மருத்துவமனை,Hospital

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் சாகசம் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


5வது வரை படித்தவர்

ஹரியானா மாநிலம், பானிப்பட் மாவட்டம், சமால்கா தாலுகாவில் உள்ள குரார் என்ற கிராமத்தை சேர்ந்த, 17 வயது இளைஞர் சுமித் காதி. இவர் ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டார்.

சுற்றியுள்ள கிராமங்களில் சாகச நிகழ்ச்சிகள் நடத்தும் ஜகதீப் என்பவருடன் சுமித் காதி சேர்ந்தார். குரார் கிராமத்தில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள சுல்கானா என்ற கிராமத்தில் கடந்த ஜூன், 24ம் தேதி இரவு 10 மணிக்கு ஜகதீப், சுமித் காதி மற்றும் ஏழு பேர் சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்ட ஒன்று கூடினர். அவர்கள் மக்களிடம், 8,500 ரூபாய் வரை வசூலித்தனர்.

அங்குள்ள ஒரு மைதானத்தில் பெரிய குழி தோண்டப்பட்டது. சுமித் காதி சாக்கு பையில் நுழைந்து கொண்டார். அந்த சாக்கு பைக்கு 21 முடிச்சுகள் போடப்பட்டன. அதற்கு முன் சுமித் காதியிடம் ஒரு மொபைல் போன் தரப்பட்டது. பின்னர் அந்த சாக்கு பை, குழியில் இறக்கி விடப்பட்டு மரப்பலகைகளால் மூடப்பட்டது.

அதன் மீது மண் கொட்டி மேலும் இறுக்கமாக மூடிவிட்டனர். அடுத்த நாள் இரவு, 10 மணிக்கு குழியில் இருந்து சுமித் காதி உயிருடன் வெளியே வருவார் என கிராம மக்களிடம் கூறப்பட்டது. மேலும், சுமித் காதி புதைக்கப்பட்ட இடத்தில் நீண்ட நேரம் பூஜை செய்யப்பட்டது.26 முறை போனில் பேச முயற்சி

அடுத்த நாள் இரவு, 10 மணிக்கு குழியை தோண்டி சுமித் காதியை வெளியே எடுத்த போது மயங்கி நிலையில் காணப்பட்டார். மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குழிக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட போது, தன்னிடம் இருந்த மொபைல் போன் மூலம் ஜகதீப் உள்ளிட்ட தன் நண்பர்களை அவர், 26 முறை தொடர்பு கொள்ள முயன்று இருக்கிறார். முதல் முறை மட்டும் அனைத்து சிறப்பாக செல்கிறது என வெளியே இருந்தவர்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு அவருடன் போனில் பேசாமல் இருந்து விட்டனர்.


இச்சம்பவம் பற்றி தெரிந்த உடன் போலீசார் விரைந்து வந்து ஜகதீப்பை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X